KUCCHATTHEEVU ISSUE-INC PRABAKAR-RAM

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஆளுமை ஒப்புக்கொள்ளப்பட்டு பிரிட்டிஷ் மற்றும் இலங்கை அரசால் கூட்டாக கட்சத்தீவு நிர்வகிக்கப்பட்டது. அதற்கு பின்னர் உருவான சர்வதேச கடல் சட்டங்களின் அடிப்படையில் எல்லைகள் 1974ல் வரையறை செய்யப்பட்ட போது இந்த 285 ஏக்கர் பரப்பளவு உள்ள தீவானது இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்ததால் இந்தத் தீவில் இலங்கை அரசின் ஆளுமை இந்திய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் வளரும் வரை இந்தத் தீவு குறித்து எந்தப்பிரச்சனையும் இல்லை. 1977, 1980, 1984ல் தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆர் அல்லது அப்போதைய எதிர்க்கட்சி திமுக வோ இந்தத் தீவினை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் இருந்து எரிபொருள், வெடி மருந்து கடத்தலில் ஈடுபட்டது, தமிழ்நாட்டில் மீன்வளம் குறைந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் ஊடுறுவியது ஆகியன இலங்கை அரசினை கச்சத் தீவு மீது தீவிர கவனம் செலுத்த வைத்தது.

இத்தனைக்கும் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பில் ஈடுபடுவர்கள் சில போலித்தமிழ் தேசியவாதிகளால் தொப்புள் கொடி உறவுகள் என்று வர்ணிக்கப்படும் வடக்கு கிழக்கு மாகாண இலங்கைத் தமிழர்கள் தான்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ் மீனவக் குழுக்களும், இலங்கைத் தமிழ் மீனவர் குழுக்களும் தான் பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தப்பட்டன.

இதில் இந்திரா காந்தி கட்சத் தீவினை தாரை வார்த்தார், காங்கிரசிற்கு மீனவர் நலன்களில் அக்கறை இல்லை என்பதெல்லாம் அபத்தம்.

======================================================

RSR adds: SriLamnkan Tamil leaders themselves oppose any talk of relinquishing control over this island. Vigeneswaran has gone on record on this issue.

Readers are advised to read what the SriLankan Tamil fishermen feel on this .

**************************************************

RSR

அன்றாடம் தமிழ் ஏடுகளில், மீனவர் பிரச்னை பெரிதாகப் பேசப்படுகிறது. அது என்ன பிரச்னை? நமது நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி, இலங்கையின் கடல் எல்லைக்குள் புகுந்து, நமது மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். இதன் காரணம், நமது பகுதியில், கண்டபடி, யந்திர மடி வைத்து , மீன்பிடித்தொழில் முதலாளிகள் , மீன்வளத்தை நாசமாக்கிவிட்டார்கள். ஆனால், இலங்கை பகுதியில், இத்தகைய இயந்திர மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு இன்னமும் மீன்வளம் நிறைந்துள்ளது. இதற்கு ஆசைப்பட்டு, தமிழக முதலாளிகளின் நிறுவன மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் அத்து மீறி பகிரங்கமாக மீன் பிடிக்கின்றனர். ஒரு நாட்டின் கடல் எல்லையை ஒரு அண்டை நாடு மீறுவது , பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும். எந்த நாடும் இதைக் கைகட்டிப் பார்த்துக்கொண்டிராது, எனவே, இலங்கை கடற்படையினர் , அத்துமீறி நுழையும் ஏழை மீனவர்களைக் கைது செய்கிறது…அதுமட்டுமல்ல. இன்னமும், வடக்கு இலங்கைப் பகுதியில் , பிரிவினை வாதிகளின் நடவடிக்கை முற்றிலும் ஓயவில்லை. ஆயுதக் கடத்தலும் , மீனவர் மூலமாக ஏற்படுகிறது. இதைக் கண்காணிப்பதற்காக , இலங்கை அரசு அவர்களைக் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்துவிடுகிறது. இது பற்றி, இந்திய கடற்படைத் தளபதியும், அடிக்கடி மீனவர்களுக்கு எச்சரிக்கையும், அறிவுரையும் கூறி வருகின்றார். ‘கடல் எல்லை எது என்று தெரியவில்லை என்பது நொண்டிச்சாக்கு. பொய். ..இங்கு உள்ள அனைத்து அரசியல் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட, ( காங்கிரஸ் தவிர) , குறுகிய பிரதேச வெறியினால், மீன்பிடி முதலாளிகளுக்கு சாதகமாகப் பேசுகிறார்கள், இந்த தைரியத்தில்தான், மீனவர்கள், இந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். ..இங்கு தகராறு , இனப்பிரச்சனை அல்ல. ! ஏனெனில், பாதிக்கப் படுவது , மன்னார் மற்றும் யாழ் பகுதியில் உள்ள இலங்கையின் தமிழ் மீனவர்கள்தாம்

…எதையாவது சொல்லி, எப்படியாவது, இந்தியாவின் தென் கோடியில், ஒரு பெரும் போரை உண்டாக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அத்து மீறுவதை , வடக்கு இலங்கை மாகாண முதலமைச்சர் ,விக்னேஸ்வரன் அவர்கள், அருமையான விளக்கத்துடன் கண்டித்துள்ளார்கள். இங்கு உள்ள பொதுவுடமைக்கட்சிகள், சிறு முதலாளியச சிந்தனையில் சீரழியும்போது, விக்னேஸ்வரன், பிரச்னையின் அடித்தளமான, வர்க்க உண்மையை தெளிவாக விளக்குகிறார். ..!

இலங்கை கடல் பகுதியில் , தமிழ்நாட்டின் பணக்கார மீன்பிடி முதலாளிகள், ஒளிவு மறைவின்றி சட்ட விரோதமாக மீன் பிடித்து, இலங்கைத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாழடிக்கிறார்கள் என்று திரு விக்னேஸ்வரன் அவர்கள், அளித்துள்ள பேட்டியை இங்கே யாரும் மனதில் கொள்வதுண்டா?

அவரது வர்கப்பார்வை , இங்குள்ள சிகப்புத்துண்டுகளுக்குகூட இல்லையே!

தமிழக மீனவர்கள் இலங்கையிலும் இலங்கை மீனவர்கள் தமிழகத்திலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மொத்தத்தில் இரு தரப்பிலும் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள்தான். இதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?

VIGNESWARAN replies:* உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே நான் செய்யக்கூடியது. நீங்கள் தமிழர்கள். பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுவது இந்திய – இலங்கை கடற்பரப்பில் வாழும் கடல் இனங்களே. எதற்காக இந்திய மீனவர்கள் தங்கள் கடல் எல்லை தாண்டி இரவு 1 மணியளவில் நன்றாக நாங்கள் பார்க்கக்கூடிய தூரத்திலேயே பயணித்து மீன் பிடிக்கிறார்கள்? பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். காரணம், இந்திய கடல் பிராந்தியத்தில் இழுவலைப் படகுகள் மூலம் கடல் வளங்களாகிய மீன்களை வாரி இழுத்து காலி செய்துவிட்டார்கள். பணத்தாசையால் பெரும் படகு முதலாளிகள் தங்கள் நாட்டுக்கும் கடல் வளத்துக்கும் செய்துள்ள துரோகம் இது. உங்கள் பகுதியில் மீன் கிடைக்காததால், இலங்கைக் கடல் பகுதியில் மீன் வாருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை கடல் பிராந்தியத்திலும் கடல் இனங்கள் அற்று ஒன்றுமில்லாமல் போய்விடும். எங்கள் நாட்டில் இழு படகுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. இழு படகுகளால் மீன் வளங்கள் மட்டுமல்ல; பவளப்பாறைகள்கூட இழுத்துவரப்படுகின்றன. இழு படகு உபயோகத்தை இந்தியா தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சட்டம் வருமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இழு படகை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை மீனவர்கள் உபயோகித்தால் மீன் இனம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள். இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் இழு படகுகளுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்களே. சிறு மீனவர்கள் அல்லர்.”