RSR
தமிழ்நாட்டின் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களிடமும், அனுதாபிகளிடமும், கேட்டுப் பாருங்கள். ..வைகோவுடன் கூட்டணி வைத்து, அவரை இந்த இடதுசாரிகளின் தத்துவ அமைப்பாளராக முன்வைக்க மக்கள் என்றேனும் கூறியிருப்பார்களா?
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் , கோவையில் நடந்த மார்கிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்கு , இலங்கையிலிருந்து, ஜனதா விமுக்தி பெரமுன ( மக்கள் விடுதலை முன்னணி) என்ற இடதுசாரிப் புரட்சி இயக்கத்தின் சார்பாக பார்வையாளர்களை வரவேற்ற கட்சியின் , தத்துவார்த்தத் தனித்தன்மையும் , தைர்யமும் இன்று எங்கே சென்றது?
சென்ற ஆண்டு தெற்கு ஆசியாவில் நடந்த மே தின ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொள்கைவிளக்கப் பிரசாரங்களில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றது , JVP நடத்தியவை மட்டுமே! டெல்லியிலோ, கல்கத்தாவிலோ அல்ல. !
தெற்கு ஆசியாவில், இளைஞர்கள், மாணவர்கள், ஏழை விவசாயிகள் பங்கேற்ற ஒரே புரட்சி எழுச்சி , இன வெறிக்கு அப்பாற்ப்பட்ட அவர்கள் நடத்தியதுதான். அப்போதெல்லாம், மார்க்சிஸ்ட் கட்சிதான், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது என்று கூறுவார்கள். .
அது அந்தக் காலம். ஒன்று இரண்டு இடங்களுக்கு கெஞ்சுவது இந்தக் காலம் (RSR)
*************************************************
1)இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளராததற்கு ஜவஹர்லால் நேரு தனது சுயசரிய்தையில் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். அடிப்படைச் சித்தாந்த அளவில், லெனினிசம் , நகர்ப்புற பாட்டாளிவர்கத்தை சார்ந்த இயக்கம். தொழிற்சங்கங்களில், இன்றளவும் வலுவுடன் திகழும் இயக்கம். ஆனால், பரந்த இந்த நாட்டில், நகர்ப்புற தொழிலாளி வர்கத்தைவிட , கிராமப்புற விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களுமே மிகப் பெரும்பான்மையாக உள்ள நாடு. நேரு சொல்கிறார்' காங்கிரஸ் அன்றே கிராமங்களுக்குச் சென்றது. கம்யூனிஸ்டுகள் நகரங்களில் தொழிற்சங்கங்களில் மட்டும் கவனம் செலுத்தினர்.எனவே காங்கிரஸ் பல மடங்கு வலுவுற்றது'.
நேருவின் மக்கள்திரள் அரசியல், உத்தரப் ..பிரதேசத்தில் 1920ம் ஆண்டில் மாபெரும் விவசாயிகள் இயக்கத்தைக் கட்டியதில் தொடங்கியது .( காண்க : சுயசரிதை).
விடுதலைப் போராட்ட காலத்தில், இந்திய தேசிய இயக்கத்தின், தீவிர முன்னணிப் படையாக மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை உணர்ந்தனர்.
முதலாளித்துவ தேசியத்திற்கு மாற்றாக ,பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு உட்பட்ட, உழைக்கும் வர்க்க தேசியத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கம்யூனிஸ்ட் கட்சி போதித்தது ->2
-------------------------------------------------------
2) காந்திஜியும், அவ்வாரே குஜராத், மற்றும் வடக்கு பீகார் பகுதிகளில், ஏழை விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்துத் தான் தனது இயக்கத்தை கட்டினார்.
'உழுபவருக்கே நிலம்' என்ற முழக்கம், குத்தகைதார்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால், நிலமில்லா விவசாயத் தொழிலாளர்களுக்கு ( read dalith)பலனளிக்கவில்லை.
பிராந்தியவாதமும், ஜாதியமும் பணக்கார விவசாயிகளின் குரல். (குலாக்குகள்) .
காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில், கம்யூனிஸ்டுகள், இந்தப் புதுப்பணக்கார குலாக்குகளின் வாலாக மாறினர்.
ஆந்திரத்திலும், மராட்டியத்திலும், இந்தப் பாதை தற்கொலைப் பாதை என்று நிரூபிக்கப் பட்ட பின்னரும், அவர்கள் அதேபாதையில் தான் இன்றும் பயணிக்கின்றனர்.
ஹிந்தி பேசும் மாநிலங்களான உ.பி. , ம்.பி. ராஜஸ்தான், பஞ்சாப், பீகார் மாநிலங்களில், கட்சியை காணவே
இல்லை! கடுமையான ஜாதியம் நிலவும், இந்த மாநிலங்களில், மாயாவதியின் சாதனையில், நூற்றில் ஒரு பங்கு கூட இவர்கள் செய்யவில்லை.
50 ஆண்டுகளுக்கு முன்னரே ,ஈ .எம்.எஸ். இந்த பலவீனத்தைச் சுட்டிக்காட்டிய போதிலும், இன்றளவும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
ஏனெனில், இவர்களிடம், இடைநிலைச் சாதிகளான விவசாயிகளை ,வர்க்க அடிப்படையில், பிரித்து, ஏழை விவசாயிகளையும், நிலமில்லா விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும், நிலச் சீர்திருத்த திட்டம் எதுவும் இல்லை. .
நேருஜி அன்றே எழுதியதுபோல , விவசாயிகள், தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன், பிற்போக்கு சக்திகளின் முன்னணிப் படையாக மாறுவார்கள் ."..
இது கறாரான லெனினிச-ஸ்டாலினிச பாடம். அதுவே நடக்கிறது.
மேற்கு வங்கத்தில், முதலில், கல்கத்தாவில் புரட்சிகர ஆலைத்தொழிலாளர்கள் இயக்கமாக வென்ற கையோடு, முதல் வேலையாக தோழர் ஹரி கிருஷ்ண கோனார் , தீவிர நிலச் சீர்திருத்த சட்டம் இயற்றினார்.
அதன் மூலம், கிராமங்களில் , மாபெரும் சக்தியாக மாறி, ஜோதிபாசு தலைமையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக CPM ஆட்சி செய்தது.
ஆனால், மேல் கங்கைச் சமவெளிதான், காலம் காலமாக இந்திய வரலாற்றுத் திசையைத் தீர்மானிக்கிறது என்ற பாடம் , இவர்களுக்கு புரியவில்லை. . CPI-ML LIBERATION கூட ,LAND REDISTRIBUTION பிரச்னையில் தடுமாறிக் கொண்டுதான் உள்ளார்கள். இந்திய தேசிய காங்கிரசின், இடதுசாரி அங்கமாக , சிந்தித்துச் செயல்பட்டால், மட்டுமே இந்தியாவில், உண்மையான இடதுசாரி மாற்றம் தரமுடியும். காங்கிரசுக்கு மாற்றாக அல்ல. !