03-COMMENT ON THIRUMA POLITICS

RSR

====

THITUMA VALAVAN

ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்காக கடந்த 30 ஆண்டுகளாகப் போராடி வருபவர் என்ற அளவில், பாராட்டினாலும், சில விமர்சனகளும் உண்டு.

1)தமிழ்நாட்டில், மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில், திருமா அவர்களின் ஆதி திராவிடர் பெருமளவு உள்ளனர். .தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் அதிகம் உள்ளனர். ஆதிதிராவிடர் மிகவும் குறைவு. மேற்கு மாவட்டங்களில், அருந்ததியர் தான் அதிகம். திருமாவின் கட்சிக்கு மற்ற இரு ஒடுக்கப் பட்ட சமூகங்களின் ஆதரவு கிடையாது . ஏனெனில், மிகவும் அடித்தள மக்களான அருந்ததியினருக்கு இவரது கட்சி குரல் எழுப்பிப் போராடிய வரலாறு இல்லை.

தென் மாவட்டங்களில், தேவேந்திர குல வேளாளருக்கும் , ஆதி திராவிடர்களுக்கும் இடையே கூட கலவரங்கள் நடக்கின்றன.

இதுபற்றி திருமா , தேவேந்திரகுல இயக்கங்களுடன் பேசித் தீர்வு காணவில்லை.

2) தமிழ் மொழிப்பற்று இங்கு அனைத்துக் கட்சியினருக்கும் உண்டு. பெயரை மாற்றிக்கொள்வது என்பது போன்ற மேல்பூச்சான 'புரட்சி'கள் gimmicks வெட்டி வேலை.

3) பிரிவினைவாதம், தலித் விடுதலைக்கு உதவாது. தனிநாட்டின் புதிய அரசியல் சட்டம் ,அம்பேத்கர் அளித்த இட ஒதுக்கீடினைப் பரித்துவிடும்.

4) இலங்கையில், யாழ் பகுதியிலும், அம்பாறை மட்டக்களப்புப் பகுதியிலும், கடும் தீண்டாமை இன்றும் நிலவுகிறது.

.மத்திய இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள், பெரும்பாலும் தலித்துகள்.

திருமாவின் இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றிய அணுகுமுறை, இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

5) தலித் மக்களின் தொடரும் சமுதாயத் துயர்களின் அடிப்படை, நிலமில்லா விவசாயத் தொழிலாளராக அவர்கள் இருப்பது.

...இதுபற்றி தெளிவான புரிதலோ, போராட்டமோ, தீர்வுக்கான கருத்துரைகளோ இவரிடமிருந்து வந்ததில்லை. ( கம்யூகளும் அதே!)...

6) தலித் பிரச்னை தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டானதல்ல. உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப், ஆந்திரம், மராட்டியம், குஜராத் , வங்கத்தில் கூட நிலவும் பிரச்னை. கடந்த 30 ஆண்டுகளில், திருமா அகில இந்திய அளவில், இந்தப் பிரச்னையை அனுகியதே இல்லை.

6) அடிப்படையில், இது கிராமப்புற நில உடமை வர்கப் பிரச்னை ..இதை ஒரு இன, மொழி பிரச்னையாகப்

பார்ப்பதினால், திருமா அவர்கள், ஊழல் எதிர்ப்பு என்று தோன்றினாலும், உண்மையில் இனவெறித தலைமைக்கு அடிமையாக சிக்கியுள்ளார்.

அவர் இருக்க வேண்டிய இடம் , இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே. !