001-Hi!Chamas!.learn marxism first

samas (chamas?) wants students to be active in protest movements... எந்த பிரச்னைக்காக என்பதும் முக்கியம். ..நாளை சோனியா காந்திக்கு கருப்புக்கொடி காட்ட ஒரு மாணவர் அமைப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது. ..! samas approves? not even a line in thindu rag.

RSR

********************************************************

ABOUT SAMAS SERMONIZING .IN .THINDU RAG.. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை IIT யில் படித்துக் கொண்டிருந்த உண்மையிலேயே சமூக நலனில் அக்கரை கொண்டவர்கள், எதோ மக்களுக்கு உண்மை தெரியவந்தால், விழிப்பும் மாற்றமும் வரும் என்று அப்பாவித் தனமாக நம்பி, தங்கள் உழைப்பையும் பொன்னான நேரத்தையும் செலவழித்து, படு தோல்விமூலம் , பாடம் கற்றுக்கொண்டார்கள். ஊடகம் இன்று மூளைச் சலவை செய்யும் ஒரு முதலாளித்துவ சாதனம். . தூய எண்ணத்தோடு வந்தால், வயறு காலி ஐயா ! நடந்தே சென்று, தண்ணீர் மட்டும் குடித்து, சாமியாராக வேண்டுமானால் இருக்கலாம். அரசியலுக்கு சரிப்பட்டு வராது. எனவே எவனாவது கோயானுக்கு துதிபாடியாக இருந்தால், ரூபாய், வசதி எல்லாம் கிடைக்கும். கொள்கை என்ன ஆகும்? இவங்களை நம்பாதே ! ......NOT A SMALL AMOUNT 1500 CRORES TO SPLIT THE VOTES.

SEE THE DAILYTHANTHI CONSTITUENCY-WISE REPORT.. IN MOST CONSTITUENCIES, THE THIRD FRONT IS SPLITTING ANTI-ADMK VOTES AND OUR WRETCHED ELECTORAL SYSTEM WILL HELP THE DEVIL

*********************************************************

hi CHAMAS ! ABOUT YOUR ARTICLE TODAY IN THINDU (ARASIYAL PAZHAGU-3) RAG..

CEYLON TAMIL MOVEMENT IS NOT A NATIONAL LIBERATION MOVEMENT BUT A NATIONAL ETHNIC MOVEMENT. ALL SUCH ETHNIC MOVEMENTS ARE ESSENTIALLY PRO-IMPERIALIST! MOREOVER, A MISGUIDED SECTION OF MARXIST REVOLUTIONARIES THINK THAT BY ALIGNING THEMSELVES WITH SUCH ARMED ETHNIC MOVEMENTS, THEY CAN GRADUALLY WIN OVER THE YOUTH TO WORKING CLASS IDEAL. BUT THIS THINKING HAS BEEN DISPROVED AGAIN AND AGAIN IN HISTORY A HUNDRED TIMES. ACTUALLY, THE ALLIANCE INVARIABLY CORRUPTS AND POISONS THE MIND OF REVOLUTIONARY YOUTH WITH CHEAP ETHNIC HATRED AND INVARIABLY LEADS TO SLAUGHTER OF THE LEFT WING BY THE FASCISTS AS IT HAPPENED IN SRILANKA. ..THE TRUE LEFT MOVEMENT IN SRILANKA IS THE JVP ( JANATHA VIMUKTHI PERAMUNA).... IT IS NEITHER PRO-RUSSIAN NOR PRO-CHINESE. ...BUT THE PSEUDO MARXIST PANDITS IN WRETCHED TAMILNAD KNOW NOTHING ABOUT IT.

**********************************************************

'உளுத்துப் போன'...எனபதுதான் சரியான பிரயோகம்... 'உலுத்துப் போன' என்பது இலக்கணப் பிழை. ஒரு 'புகழ் பெற்ற' தமிழ் 'சிந்தனைக்கூட' கிழிசலின் முதற்பெரும் சிந்தனையாளர் இத்தகைய தவறு இழைக்கக் கூடாது. ...சரி .விஷயத்திற்கு வருவோம்.

ஒரு கிராமத்து ஏழைப் பையன் படிப்பை கவனிக்காமல் , அரைகுறை புரட்சி அரசியல் இயக்கத்துக்கு வந்து தனது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டது பற்றிய கரிசனம் உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தப் பையன் பரப்பிவரும் கருத்துக்கள் அனைத்தும் நூறு சதவீதம் உண்மை உண்மை தவிர வேறில்லை.

காந்தியின் அஹிம்சை இயக்கத்தால் அல்ல நமது நாடு விடுதலை பெற்றது. அஹிம்சைப் போராட்டம் என்ற உத்தியைப் பயன்படுத்தி, காந்திஜி இந்தியாவெங்கும், நான்கு திசைகளிலும் படித்தவர், படிப்பில்லாதவர், செல்வந்தர், பரம ஏழைகள் , சனாதன ஹிந்துக்கள், இஸ்லாமிய-கிருத்தவ மக்கள், அனைவரும் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியது ஒரு அடித்தளம் மட்டுமே.

உண்மையில், நாம் சுதந்திரம் அடைந்த போது, இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயப் பேரரசு முற்றும் வீழ்ந்திருந்தது.

நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பேரிழப்புகளைத் தாங்கிக் கொண்டு, இரும்பு மனிதன் தோழர் ஸ்டாலின் தலைமையில், சோவியத் யூனியன், நாஜி களுக்கு மரண அடி கொடுத்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் மீட்டு ( கிழக்கு ஜெர்மனி உட்பட ) பொதுவுடைமை அரசுகள் அமைத்தது. சீனாவிலோ, தோழர் மாவோ தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அற்புதத் தியாகங்கள் புரிந்து, அமெரிக்க ஆதரவு சியாங் படைகளைத் துவம்சம் செய்து இறுதி வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. சோவியத் யூனியனின் மாபெரும் வெற்றி உலகெங்கும், ஆங்கிலேய-அமெரிக்க பிரெஞ்ச் ஏகாதிபத்யங்களுக்கு எதிராக நம்பிக்கை மிக்க ஆயுதப் புரட்சி இயக்கங்களுக்கு வழிவகுத்தது. இந்தோ சீனா, தென் ஆப்ரிக்க நாடுகளிலும் கூட!

ஹிந்து-முஸ்லிம் பகையை மூட்டிவிட்டு, குளிர்காய்ந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம், பம்பாய் நகரில், கப்பல்படையினர் நடத்திய காங்கிரஸ்-முஸ்லிம்லீக், கம்யூனிஸ்ட் இணைந்து பறந்த கொடிகளைக் கண்டு, இனி தன்னால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டது.

ராணுவமும், காவல் துறையும் ஒத்துழைக்க மறுத்தால், எந்த ஒரு ஏகாதிபத்தியமும் நிலைக்க முடியாது..

ஆனால் ஆயுதப் படை வேண்டும். புரட்சிக்கு உதவி செய்து ஆயதங்கள் அனுப்ப நட்பு நாடுகளுடன் பொது எல்லை வேண்டும். ( சீன-ரஷ்யா-மஞ்சூரியா போல) . இவையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாததினால் ரணதிவேயின் புரட்சியும், தெலுங்கானா புரட்சியும் தோல்வியுற்றன. அவ்வளவே.

ஏகாதிபத்திய எதிர்ப்புடன் கூடிய தேசிய விடுதலை இயக்கம் ( தேசிய இன இயக்கம் அல்ல) தோற்றதாக சரித்திரம் கிடையாது. இன்றளவும். வியட்நாம்,கம்போடிய, லாவோஸ் இயக்கங்கள். தென் அமெரிக்க புரட்சி இயக்கங்கள், ( க்யூபா) ..

மூன்றாவதாக, பிரிட்டனில், மார்க்சிஸ்ட் சிந்தனை கொண்ட ஹரால்ட் ஜே.லாஸ்கி போன்ற தொழிர்கட்சித் தலைவர்கள் , இரண்டாம் உலகப போருக்கு பின் நடந்த பிரிட்டிஷ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும், நேரு, கிருஷ்ணமேனன் போன்றோரின் நண்பர்கள். .

..எமெர்ஜென்சி காலத்தில், ஒரு சமயம் இந்திரா காந்தி கூறினார். " நமது நாடு, ஆயுதப் போராட்டத்தினால் சுதந்திரம் அடைந்திருக்க வேண்டும் என்று சில நேரம் கருதுகிறேன். ..கட்டுப்பாடு, தியாகம் இல்லாமல் போனது! "

******************************************************

வழக்கமாக சமஸ் கட்டுரைகளில், நயம் மற்றும் நல்ல விஷயங்கள் இருக்கும். இந்தக் கட்டுரை மிகவும் மோசம். மாணவர்களையும் , இளைஞர்களையும் தவறான பாதையில் கொண்டு செல்லும் கட்டுரை. கலாம் அவர்களின் சிந்தனைக்கு எதிர்மறையான கட்டுரை. ..எது நீதி, எது அநீதி என்றெல்லாம் அறிவுபூர்வமாகப் புரிந்துகொண்டு செயல் படுவதற்கு ஓரளவு சமூகம் , வரலாறு, பற்றிய பொது அறிவு வேண்டும். (உ.ம்) ஜாதிய கிராம பின்னணியில் வளர்ந்துவரும் ஒரு 16 வயது இளைஞனுக்கு, பள்ளியில் அவன் படித்த நன்னெறி பாடங்களை விட, அவனது குடும்பம் , உறவினர், நண்பர்கள் மூலம் ஏற்ப்படும் ஜாதிய சிந்தனையும்,நடவடிக்கையுமே நீதி என்று தோன்றும். கையில் கலர் கயறு கட்டிக்கொகொண்டு திரியும் இன்றைய மாணவர் , இளைஞர் சமூகம் அதற்கு அத்தாட்சி. தங்களது ஜாதியின் 'கௌரவம்' காப்பாற்றக் கொலையும் செய்வோம் அதிலிருந்து அரசியல்வாதிகளின் தயவில், மீண்டும் வருவோம் என்ற வீர தீர சாஹசக்காரர்கள் தான் இன்றைய இளைய சமுதாயம்.., உலக வரலாறு, இந்திய வரலாறு, தமிழக வரலாறு, இந்தியப் பண்பாடு, பொருளாதாரம், அரசியல் )கொள்கைகளின் வரலாறு, மதங்கள் பற்றிய பொது அறிவு இவையெல்லாம், உலகம் புகழும் அறிஞர்களின் நூல்களைப் படித்துத்தான் , இளைஞர்கள் சமூக வாழ்க்கைக்கு பயனுள்ளவர்களாக மாற முடியும். படிக்கும் காலத்தில், தங்களுடைய துறையில் நிபுணர்களாக முயற்சி செய்து, நேர்மையான வழியில் வருமானம் புகழ் ஈட்டி , சமூகத் தலைமை கொள்பவர்கள் மட்டுமே , பின்னாளில் சமூகத்திற்கு நல்ல பணியாற்ற முடியும். சுதந்திரப் போராட்ட காலம் ஒரு விதிவிலக்கு. ஏனெனில் அப்போது நாம் அன்னியரின் ஆட்சியில் இருந்தோம். அது காமராஜர் காலம். அவர்கூட, ஜார்ஜ் ஜோசப் , பின்னர் சத்யமூர்த்தி போன்றோரின் ஆதரவு, வழிகாட்டுதல் பேரில்தான் செயல்பட முடிந்தது. சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாய்? சொத்து எதுவும் இல்லாத பக்குவம் இல்லாத இளைஞர்கள், நன்கு படித்து, வேலையில் சேர்ந்து சம்பாதித்து, ஓரளவு செல்வந்தர்களாகி , பின்னர்தான் சமூகப் பணி ஆற்ற முடியும். படிக்கும் காலத்தில், நேருவின் அற்புதமான மூன்று புத்தகங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். அதன்படி அரசியல் வேண்டும். படிப்பும் , தொழிலும் இல்லாத , அரசியல் ரௌடியிசத்தில் முடியும்