( THANKS TO PRABAKAR RAM OF INC FOR SHARING THIS)
***************************************************
(26-5-2016)
அங்கு வசிக்கும் ஒரு ஈழதமிழர் சொல்கிறார், வட கிழக்கில் ராணுவ ஆட்சி, இந்துகோயில் இடிப்பு, என ஏராளமான புலி அபிமானிகள் சொல்லிகொண்டிருக்கின்றனர், ஆனால் அப்படி எல்லாம் ஒரு சிக்கலும் இங்கு இல்லை.
நல்லூர் கந்தசாமி திருவிழாவில் ராணுவ ஹெலிகாப்டர் மலர் தூவுகின்றது, வற்றாபளை கண்ணகி ஆலயம், முறிகண்டி விநாயகர் ஆலயம் போன்ற பிரதான ஆலயங்களுக்கு எல்லாம் சிங்கள அரசதந்திரிகள் வருகின்றார்கள், கலந்துகொள்கின்றார்கள்.
எமக்கு சில உரிமைகள் சிக்கலாயிருந்தது, இந்தியா தலையிட்டு அதுவும் ராஜிவ்காலத்தில் விமானங்கள் உணவுபொட்டலம் எல்லாம் வீசி களத்தில் இறங்கியதும், சிங்களம் பயந்து பல உரிமைகளுக்கு ஒப்புகொள்ள இறங்கி வந்தது, அதனால் பல போராளிகுழுக்களும் இந்திய படையோடு இணைந்து பணிசெய்தன.
இந்தியா நிலைப்பாட்டில் அப்படித்தான் உதவமுடியும்,
இந்நாட்டில் கலவரம் வரும்பொழுதெல்லாம் அவர்கள் தான் தமிழர் உயிரை காப்பாற்றினர், 1983 கலவரம்,, ராஜிவ் உணவு வீசிய வடமராட்சி முற்றுகை என அன்று அதுதான் தமிழரை காத்தது, அப்படித்தான் அமைதிபடை அனுப்பி எம்மை காக்க வந்தது
ஆனால் புலிகள் மட்டும் முரண்டு பிடித்தன, திடீரென சிங்களனோடு இணைந்ததை எங்களாலே நம்ப முடியவில்லை, அவர்களாக எல்லா குழுக்களையும் துரோகி என்றனர், ஒழித்தனர், நாங்கள்தான் தமிழர் ஒரே பிரதிநிதி என்றனர். யார் இவர்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது என இன்றுவரை தெரியவில்லை,
இந்தியா ஒரே கட்டத்தில் ஒதுங்கி நின்றதென்றால் அது 2009ல் மட்டுமே, ஒரே காரணம் புலிகள், ஈழத்தில் அன்றாடம் அவர்கள் யாரையாவது கொல்வார்கள், ராஜிவின் கொலையினையும் அந்த கணக்கில்தான் வைத்தார்கள்.
ஆனால் இந்திய யதார்த்தபடி அது ஏற்றுகொள்ளமுடியாத விஷயம் என்பது பின்புதான் புலிகளுக்கு விளங்கிற்று.
அன்று பல அந்நிய சக்திகளின் உதவியால் புலிகளிடம் 1980களிலே நவீன ஆயுதங்கள் இருந்தன, அதனால்தான் பல இடங்களில் அவர்கள் வெற்றிபெற்றார்கள், சிங்கள ராணுவம் அப்பொழுதெல்லாம் நல்ல துப்பாக்கி கூட பார்த்ததில்லை, சீருடை கூட நன்றாக இருக்காது, ஆனால் அப்பொழுது அவர்களிடம் ஒரு மனிததன்மை இருந்தது, கொஞ்சம் சிந்திப்பார்கள்
ஆனால் புலிகளுக்காக தங்களை சிங்களர் பலபடுத்திகொண்டார்கள், வெளிநாட்டு தொடர்போடு மிக வலுவான ராணுவமாக உருவானார்கள், இஸ்ரேலிய ஆலோசனை படி அதாவது சந்தேகம் என வந்துவிட்டால் ஒருவனை கொல்லவேண்டிய இடத்தில் 1000 பேரை கொல்லும் படி அவர்கள் உருவாக்கபட்டார்கள்.
இந்திய அமைதிபடையோ 100 தோட்டா சுடவேண்டிய இடத்தில் 1 தான் சுடும், ஆனால் இஸ்ரேலிய சிங்களமோ 1 தோட்டா பாயவேண்டிய இடத்தில் 1000 பாய்ச்சியது.
இப்படி புலிகளின் போராட்டமுடிவு வலுவான சிங்கள ராணுவத்தை , இரக்கமில்லா சிங்களராணுவத்தை உருவாக்கியதே தவிர , தமிழருக்கு ஒன்றுமில்லை. இந்தியா தர வந்த அந்த உரிமைகள் கூட இன்று இல்லை. உரிமை கேட்க போய், உணவுக்கு கையேந்த எம்மை விட்டுவிட்டு புலிகள் சென்றாகிவிட்டது.
அவர்கள் காலத்தில் மின்சாரம் இல்லை, சாலை இல்லை, ஏன் ரயில் கூட யாழ்பாணத்திற்கு இல்லை (ரயிலில் ராணுவத்தார் வருவர் என தண்டவாளத்தை புலிகள் பெயர்த்தானர்), வரி கொடுமை உச்சத்தில் இருந்தது, நாங்கள் உலகின் மோசமான வாழ்க்கை நிலையில் இருந்தோம்
சிங்கள பகுதிக்கு வந்தபொழுது ஒரு குழந்தை தாயிடம் கேட்டது, அது எனம்ம்மா?, அது காட்டியபொருள் மின்விசிறி, புலிகள் கட்டுப்பாடு பகுதியில் அதனை அது பார்த்ததே இல்லை, இதுதான் புலி ஆட்சி
உங்கள் தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினை உண்டு, ஊழல் முதல் மொழி,அணுவுலை என மத்திய அரசோடு எத்தனையோ முரண்பாடு உண்டு, அதற்காக தனிநாடு கேட்போர்களா? மாட்டீர்கள்
காரணம் அப்படி கேட்டால் இந்த சிக்கல்கள் இன்னும் மிக பெரிதாக உருவாகும் என்று சிந்திக்கின்றீர்கள், அழிவி வரும் என சிந்திக்கின்றீர்கள், உலகில் யாரும் உங்களுக்காக வரமாட்டார்கள் என உங்களுக்கு தெரிகின்றது,
அமைதியாக வாழ்கின்றீர்கள்.
நாங்களும் அந்த முடிவில்தான் இருக்கின்றோம், 1970 வரை பெரும் சிக்கல் இல்லை, வோட்டிற்காக ஈழ அரசியல்வாதிகள் ஆயிரம் பேசினார்கள், இளைஞர் கூட்டம் பின் சென்றது, புலிகள் அதனை அழிவாக மாற்றிவிட்டார்கள்.
இப்பொழுது இலங்கை வளர்கின்றது, கொஞ்சநாளில் அது வளர்ச்சிபெறும், அதன் இயற்கை வளமும், கேந்திர முக்கியத்துவமும் அதற்கு உதவி செய்யும், 1900களின் நிலையினை அது எட்டும்
எல்லா ஈழ அகதிகளும் நிச்சயம் வருவார்கள், ஆனால் நாட்டை விட்டு கடத்திகொண்டுபோன தமிழீழம் மட்டும் வரவே வேண்டாம், அது வெளிநாட்டிலே இருக்கட்டும்.
பிரபாகரன் பிறந்து வளர்ந்தபின்புதான் இங்கு வேட்டு சத்தம், வெடிசத்தம் கேட்டது, அவர் இறந்தபின்பு பட்டாசு சத்தம் கூட இல்லை, இப்படியே அமைதியான வாழ்க்கை இருந்துவிட்டுபோகட்டும்