28-7-2015 ( DR.APJ.ABDUL KALAAM HAS PASSED AWAY TODAY)
தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்...தங்கள் ஆன்மா வானுலகில் இருந்தும் எம் மக்களுக்கு நல்வழி காட்டும். ..நமது நாட்டின் தலைசிறந்த பண்புகளை வாழ்ந்து காட்டி, தொட்ட துறைகள் அனைத்திலும் அற்புதங்கள் நிகழ்த்திய பெருந்தகை.!. அறிவியல் மேதை. பண்பியல் தாரகை!. தாங்கள் வழிகாட்டியபடி,மதவெறி மாய்ப்போம். நீர் மேலாண்மை நிறைவேற்றப் பாடுபடுவோம். எமது நாட்டை ஒரு வல்லரசாக்கி, ஐ.நா. பாதுகாப்பு சபையில், வீட்டோ உரிமை கொண்ட நிரந்தர உறுப்பினர் ஆக இடம் கண்டு, ஏகாதிபத்யங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவோம்.
------------------------------------------------------------------------------------
"உயர்ந்த மனிதர்களுக்கு மதம் என்பது
நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும் ஒரு வழிமுறை .
அற்ப்பத்தனமானவர்களுக்கு மதம் என்பது
சண்டை போட்டுக்கொள்ள ஒரு ஆயுதம் "..KALAAM
------------------------------------------------------------------------------------
SEE THE LINK HERE FOR DR.KALAM'S SPIRITUAL VALUES
------
---------------------------------------
"இந்தியாவின் ஆதார அடிப்படைக்கலாச்சாரம் காலத்தைக்கடந்து நிற்கும் ஒன்று இஸ்லாமிய மதம் இங்கு வருவதற்கு முன்பே கிருஸ்துவ மதம் இங்கு நுழைவதற்கு முன்பே செழித்து ஓங்கிய கலாசாரம் அது கேரளாவின் சிரியன் கிறிஸ்துவர்கள் போன்ற ஆரம்பகால கிருஸ்துவர்கள் தங்களுடைய இந்திய தன்மையை பெருமிதப்பட்டுக்கொள்ளும் உறுதியுடன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் "..KALAAM
---------------------------------------------------------------------------------------
வளர்ச்சி அரசியலை முன்னெடுத்து வையத் தலைமை காண்போம்! .
அறிஞர் கலாம் அவர்களின் கனவை நனவாக்குவோம்
MY HUMBLE TRIBUTE TO THE GREATEST INDIAN OF OUR ERA.
(RSR)
தனி மனித வாழ்க்கையில் கூட, உண்மையான சாதனைகள் நிகழ்த்த வேண்டுமானால், அதற்கு நீண்ட நெடுநோக்குடன் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியுள்ளது. . , முல்லை நிலத்திலும், மருத நிலத்திலும் , விவசாயமும், கால்நடை வளர்ப்பும் சிறக்க , உடனுக்குடன் பலன் எதிர்பார்க்காமல், இயற்கை விதிகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பத் திட்டமிட்டுச் செயல் பட வேண்டியிருந்தது.
.குறிப்பாக மருத நிலத்தில், நீர்ப் பாசன வசதிகள் ஏற்படுத்துவது, பயிர்களைக் காப்பாற்றுவது, அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும், நியாயமாக நீர்ப் பங்கீடு ,காலத்தே வழங்க உறுதி செய்வது, 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்றில்லாமல், நீதி அடிப்படையில், அனைவருக்கும் நீர்ப் பாசன வசதி அளிப்பது போன்ற நிர்வாக அமைப்பு தேவையாகிறது. எனவேதான், பஞ்சாயத்துப் பெரியவர்கள், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி, அந்த வழமை என்றும் மாறாதபடி உறுதிப் படுத்தினர். ..பல நூற்றாண்டு காலங்களுக்கும், ஒரே மாதிரியான மேலாண்மை கொண்டிருந்தோம்.
-------------------------------------------------------------------------------------
நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, காங்கிரஸ் பேரியக்கத்தில், ஜவஹர்லால் நேரு அவர்களின் ஆழ்ந்த அக்கறையின் பேரில், சுதந்திர இந்தியாவில்
வேளாண்மை,
உருக்கு, நிலக்கரி,
மின்சாரம்,
போக்குவரத்து,
நீர்ப்பாசனம்,
கன ரக தொழிலுற்பத்தி,
ரசாயனம்,
பெட்ரோலியம்
,போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான துறைகளில், மைய அரசு எந்தமாதிரி செயல்பட்டு, என்னன்ன சாதனைகள் நிகழ்த்தவேண்டும் என்று அறிஞர்கள் ,விற்பன்னர்கள், தேசபக்தர்கள் போன்றோரின் அறிவுரைகள் பெறப்பட்டு , தேசிய திட்டக் கமிஷன் நியமிக்கப்பட்டது..
.சுதந்திரம் என்பது வெறும் உணர்ச்சிவசப்பட்ட கோஷமாக இல்லாமல், நமது நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் , ஏழ்மை, ஆரோகயமின்மை, வாழ்க்கை ஆதாரமின்மை, இருக்க இடமின்மை, கல்வியறிவின்மை, அடிப்படை உரிமைகளின்மை . என்ற எல்லா விதமான குறைகளில் இருந்தும் விடுதலை பெறவேண்டும்,
அதுதான் உண்மையான விடுதலை என்று 1929- 1930ம் ஆண்டு நடந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் பண்டித நேரு , காந்திஜியின் முழு ஒப்புதலோடு, ஒரு தேச புனர்-நிர்மாண சமூக, பொருளாதார அரசியல் திட்டத்தை முன்வைத்தார். அது மிகுந்த ஆரவார மகிழ்ச்சியுடன் , மக்களால் வரவேற்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------
1951ம் ஆண்டில் தொடங்கி, 2011 முடிய , 60 ஆண்டுகளில், 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அறிஞர் கலாம் கூறுவது போல , எப்போதும் குறை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ள சிலரின் எதிர்மறைச் சிந்தனை தவிர்த்து, இந்த 6 தசாப்தங்களில், நமது நாடு பல வியத்தகு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை நமது இன்றைய தலைமுறையின் மாணவர்கள் அறிவது அவசியம்.
..மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, ஒவ்வொரு மாணவ/மாணவியும், புள்ளி விவரங்களோடு கூடிய நாட்டின் வளர்ச்சிப்பாதையின் வரலாறை அறிந்து கொள்வது, அவர்களுக்கு நமது நாட்டின் எதிர்காலம் பற்றிய தன்னம்பிக்கை தரும். .நமது நாட்டின் பிரச்னைகள்,, முன்பு நாடு இருந்த நிலை, இப்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம், இன்றும் , குறைகளைக் களைய நாம் கொண்டுள்ள முயற்சிகள், , சவால்கள்,பற்றி இன்றைய மாணவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டும்.. ஏனெனில்,அவர்கள்தாம் நாளை நமது நாட்டின் வருங்காலச்சமுதாயச் சிற்பிகள். அவ்வாறாயின், நாட்டின் முன்னேற்றப் பொருளாதார அரசியல் என்ற பாடம், மேல்நிலைப் பள்ளிகள்,கல்லுரிகள் அனைத்திலும் பயிலும் அனைத்து மாணவ மாணவியரும் படிக்க வகை வேண்டும்.
..ஒரு விஷயத்தைப் புள்ளி விபரங்களோடு அறிந்துகொள்ள பயிற்சி வேண்டும். .இப்போது உள்ள நிலைப்படி,ஒரு சில போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய மட்டுமே இந்த மாதிரி நமது மாணவர்கள் படிக்கின்றார்கள். ஊடகங்களில் கூட, வெறும் மேலோட்டமான உணர்வுபூர்வ செய்திகள்தாம் பெரும்பாலும் உள்ளனவேதவிர பத்திரிகை படிப்பவர்களுக்கு , சமூகப் பயனுள்ள விஷயங்கள் வருவதில்லை.
எந்த விஷயமாயினும், அதை அளவிட்டுக் கூறுவது, ..அந்த காலகட்டத்தில்,மற்ற நிகழ்வுகளோடு தொடர்பு கண்டு புரிந்துகொள்வது, எந்த ஆண்டு நடந்தது என்று நினவில் கொள்வது ஆகிய மூன்றும் அவசியம்.
( holistic, quantified and historical)
.1967ம் ஆண்டில், நாட்டில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்ப்பட்ட காலத்தில், அமெரிக்காவிடம் பி.எல்.400 என்ற உணவுப் பொருள் உதவி பெற்ற காலமெல்லாம், இன்று மாறிவிட்டது. இந்திரா காந்தி தலைமையில், திரு. சி. சுப்ரமண்யம் அவர்கள் மேற்ப்பார்வையில், எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் நிகழ்த்திக்காட்டிய , பசுமைப் புரட்சியின் பயனாக, உணவு தானிய உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு பெற்றுள்ளது. ..உணவுக்காக மற்ற நாடுகளை அண்டியிருக்கும் எந்த ஒரு தேசமும், சுதந்திர நாடாக இருக்காது
.மாபெரும் நீர்த் தேக்க அணைகள், புதிய சக்திமிக்க விதைகள்,உரத் தொழிற்சாலைகள்,கிராமங்களுக்கு மின்வசதிமூலம்,விவசாய பம்ப் வசதிகள்,நாட்டின் பல பகுதிகளில்,விவசாய ஆராய்ச்சி மையங்கள், விவசாயிகளுக்கு தேவையான சமயத்தில்,அரசு வழிகாட்டுதல்,..இவற்றோடு கூடவே , காந்திய வழியில்,கிராமங்களில் தன்னார்வ சேவை மையங்களின் அற்புதப் பணி , என பல வகையிலும் முயற்சி பலனளித்துள்ளது. இப்போது நமது பிரச்னை,அபரிமிதமான உணவுப் பொருள் வரத்தை எவ்வாறு சேமித்து வைப்பது என்பதாம். அதற்கான சேமிப்பு கிடங்குகள் அமைக்கப் பட்டு வருகின்றன.
பரந்த நமது நாட்டில்,இன்றும் கூட,ஒரு பக்கம் வெள்ளம் , இன்னொரு பக்கம் வறட்சி என்ற நிலை அடிக்கடி ஏற்ப்படுகிறது. கூறப் போனால்,ஒரு மாநிலத்தின் ஒரு பகுதி மழையில்லாமல் வாடுகிறது.இன்னொரு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. .இவ்வாறு நிகழாமல் , மிகை நீர் எப்போதும் எல்லா மாநிலங்களிலும்,எல்லா மாவட்டங்களிலும் தடையின்றிக் கிடைக்கத் திட்டமிட்டு வகை செய்தால், நாடெங்கும் வளம் கொழித்து , மக்கள் வாழ்க்கை சிறக்கும். இதனை மனதில் கொண்டு, நமது மேதகு மேதை அப்துல் கலாம் அவர்கள்,சிறப்பான நதி நீர் இணைப்புத் திட்டம் வகுத்து மாநில ,மற்றும் மைய அரசுகளின் ஒப்புதலுக்கு அளித்துள்ளார். இது விரைந்து தொடங்கப்பட்டு , எந்தவித ஊழலும் குறைபாடும் இல்லாமல் முடிக்கப் படவேண்டும்.
------------------------------------------------------------------------------
மின்சார உற்பத்தி , தொழில்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதது . .அனல் மின் நிலையங்கள் நிலக்கரியில் இயங்குகின்றன. நமது நாட்டில் , ஏராளமாக நிலக்கரி வளம் உள்ளது. எனினும், அனல் மின் நிலையங்களால், சுற்றுச் சூழல் மாசு படுகிறது.
. இதன் காரணமாக, மிகவும் கவலை அளிக்கக் கூடிய பருவ நிலை மாற்றங்களும், புயல், சூறாவளி,கடல் மட்டம் உயர்வு-தாழ்வு போன்ற விபரீதகள் நேர்கின்றன..
---------------------------------------------------------------------------------
சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் மிகவும் தூய்மையானது. எந்த ஒரு கெடுதலும் விளைவிக்காது. ஆனால்,அதற்குண்டான சோலார் தகடுகள் மிகவும் செலவினம் கூட்டுபவை.
.சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்,வேறு ஒரு குறைபாட்டையும் சுட்டிக் காட்டுகின்றனர். .பயன்பாடு காலம் முடிந்த பின்னர் , இந்தத் தகடுகளை எப்படி கேடு விளைவிக்காமல் அப்புறப் படுத்துவது என்பதும் பெரிய பிரச்னைதான் அவற்றில் உள்ள வேதிய நச்சுப் பொருட்கள் எளிதில் மறையக் கூடியவை அல்ல..
--------------------------------------------------------------------------------------
.எனவேதான், அப்துல் கலாம் அவர்கள், அணு மின்சாரத் திட்டங்களுக்கு முதன்மை தருகிறார். .
அணு மின்சாரத் திட்டங்கள்,நமது நாட்டின் அணு ஆயுத தயாரிப்பு, தயார் நிலைக்கும் அவசியமானவை...
பலவீனமான நாடுகள்தான் , ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.". ..
.நமது நாடு கடந்த ஐயாயிர ஆண்டுகள் வரலாற்றில், எப்போதுமே,வேறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பு செய்தது கிடையாது.
ஆனால், நமது சாத்விகமே நமது பலவீனமானது.
.இனி ஒரு போதும் நாம் அடிமையாக இருக்க மாட்டோம்...
எனில்,ஆயுத பலம் கண்டிப்பாக வேண்டும்.அதற்கு உருக்கு உற்பத்தி வேண்டும்.
உலக உருக்கு உற்பத்தியில்,நமது நாடு, அமெரிக்காவைப் பின்தள்ளி , சீனா,ஜப்பான் அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆனால் சீனா உலக உற்பத்தியில் 50% கொண்டுள்ளது.இந்தியா மிகவும் பின்னால் உள்ளது. இது அவசரமாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நல்ல வேளையாக, பெட்ரோல் விலை சர்வ தேச சந்தையில் மிகவும் இறங்குமுகமாக உள்ளது. மீண்டும் எந்த நாளிலும் பிரச்னை வரலாம். ஆதலால், பெட்ரோல் கிணறுகள் ஆராய்ச்சிக்கு முக்கியம் கொடுக்க வேண்டும்
. எரிவாயு பயன்படுத்துவதும் நமக்கு நல்லது.சுய சார்பு தேவை! அது .ராணுவத் தேவை.! .
.விவசாய நிலங்கள் பாதிக்கப் படாமல், மீதேன் வாயுத் திட்டம் செயல்படுத்தப் படவேண்டும். ..
தமிழ்நாட்டில், காற்றாலை மின்சாரத் திட்டமும் மிகவும் சிறப்பாகச் செயல் படுகிறது. ஆனால், அது ஏற்றம்-இறக்கம் மிகுந்த மின் உற்பத்தி, அதை நம்பி நாம் திட்டமிட முடியாது...
ஆகவே அணு மின்சாரத் திட்டத்தை மிக வீரைவாகச் செயல்படுத்த வேண்டும். அமெரிக்காவில் 100 அணு மின் உலைகள் உள்ளன..தமிழ்நாடு போலவே பரப்பளவும்,மக்கள் தொகையும் கொண்ட இங்கிலாந்திலும், 9 அணு மின் நிலையங்கள் உள்ளன. 9000 மெகாவாட் திறன் கொண்டவை.
..எந்த ஒரு அறிவியல் பயன்பாட்டிலும்,பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை நேர்கொண்டு,சமாளித்து முன்னேறவேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளில்,இந்திய மக்கள் தொகை 14 கோடி கூடியுள்ளது. ! அதாவது இரண்டு தமிழ்நாட்டிற்கு சமம்..(1984-2014)
மக்கள் தொகைக் கட்டுப்பாடு இல்லாவிடின்,நமது நாட்டில், வரவிருக்கும் சில பத்து ஆண்டுகளில், மிகவும் கடுமையான சமூக,அரசியல் பொருளாதாரப் பிரச்னைகள் வெடிக்கும்.
வேலை இல்லாத் திண்டாட்டம், குற்றங்கள், பெருகும். எனவே இத்தகைய பிரச்னைகளை மாணவர் சமுதாயம் உணர்ந்து கொண்டு,சமுதாய உணர்வோடு,நன்கு கல்வி பயின்று, தத்தமது துறையில் வல்லுனர்களாக பரிணமித்து, நமது நாட்டை 'வையத் தலைமை' கொள்ளச செய்ய வேண்டும. அப்துல் கலாம் வழிகாட்டுகிறார்."