6-12-2015
========
..சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட மக்கள் இப்போது கனமழை, வெள்ளத்தினால் படும் பெருந்துயரத்தினால், வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக எதிர்ப்பு அலை இருக்குமா என்று நம்மை நாமே வினவிக்கொண்டால், ? 'இல்லை , கண்டிப்பாக இல்லை.' என்றுதான் , கூற வேண்டியிருக்கும். இது அதிமுக சார்பாளர் கருத்து அல்ல. ..உண்மையான நிலவரம் பற்றிய கருத்து.! ஏன் என்று பார்ப்போம்! ..
சென்னை மட்டுமே தமிழ்நாடு என்று கருதுவோர், அம்மையார் செய்யும் அதே தவறைத்தான் செய்கிறார்கள். .
.குமரி மாவட்டம், தூத்துக்குடி, நெல்லை, தேனி, மதுரை , திண்டுக்கல், தஞ்சை, நாகை, தர்மபுரி, கோவை, கரூர் எனப் பல்வேறு மாவட்டங்களிலும், உள்ள அணைகள், நீர்நிலைகள், கண்மாய்கள், நிரம்பியுள்ளன. பெரிதாக எங்கும் உடைப்பு , நீர் இழப்பு எதுவும் நேரவில்லை. பெரியார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வைகை அணையும் அவ்வாறே. அமராவதி, அணையும் நிரம்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், ராஜசிங்கமங்கலம் கண்மாய்க்கு, பற்பல ஆண்டுகளுக்குப் பின்னர், வைகை அணை நீர் வரத்து கிடைத்து நிரம்பி வருகிறது. கமுதி, முதுகுளத்தூர், பார்த்திபனூர் பகுதியிலும் கூட மிதமான நல்ல மழை பெய்கிறது.
...எப்போதுமே குறைவாக மழை பெய்யும், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டுமே, கண்மாய்கள் நிரம்பவில்லை. ஆனால் இது அவர்களுக்குப் பழகிப்போன விஷயம். ..சமாளிக்கும் மனப் பக்குவமும், தயாரிப்பும் கொண்டவர்கள்.
இதுவரை உள்ள நிலவரம். மழைகாலம் இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளது.
அது முடியும்போது, தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகள், அணைகளிலும், போதுமான நீர் உள்ளதால், இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும். ஒரு குறையும் வராது.
.கிராமத்து ஜனங்கள்,சிந்தனை நேர்மையானது. 'இவ்வ்று 'பேய்மழை ' பெய்தால், அதுவும், எதிர்பாராத வகையில் பெய்தால் , எந்த அரசாக இருந்தாலும், பிரமாதமாக எதுவும் செய்திருக்க முடியாது ..இதில் அம்மையாரின் குற்றம் எதுவும் இல்லை ' என்றுதான் அவர்கள் கருதுவார்கள். மிகவும் பாதிப்பிற்கு உண்டான சென்னை, காஞ்சிபுரம், கடலூர் பகுதி மக்கள் வேண்டுமானால் , சற்று எதிர்ப்பு கொள்வார்கள், ஆனால் அங்கும் கூட, குற்றம் யார் மீது? இயற்கையின் மீது. .! அவ்வளவுதான். ..முடிந்த அளவு , அரசு நிவாரணம் மேற்கொண்டு வருகிறது.
நீண்ட கால பிரச்னைகள் மீண்டும் வராமல் தடுக்க முயற்சி செய்யவது வேறு, இதைக் காரணம் காட்டி, எதிர்க் கட்சிகள் எதுவும், வெற்றி பெற முடியாது.
ஆனால், இப்போது, சில்லரைத் தனமாக , குறை சொல்லிக்கொண்டிராமல், முழு மூச்சுடன், நிவாரணப் பணியில், தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, மக்களிடம் நல்ல பெயர் வாங்கி, நியாயமான குறைகளை மட்டும் கையாண்டால், பலன் தரும். .
.தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை ,இந்தப் பெருமழையின் காரனத்தால், சற்றும் மாறவில்லை. அதே equations. தொடர்கின்றன. there is no unity among opposition parties. இடதுசாரிக் கூட்டணி எந்த வகையிலும் வெற்றி பெறாது. .காங்கிரஸ், திமுக கூட்டணி அமைந்தாலோ, காங்கிரஸ்-விஜயகாந்த் கூட்டணி அமைந்தாலோ, அதை சரிக்கட்ட அம்மையார்-வாசன்-கூட்டணி அமைந்து சமன் செய்துவிடும்.
நமது தேர்தல் முறைப்படி, winner takes all . there is no proportional representation.
எனவே, கூச்சலை நிறுத்திவிட்டு, கிராமப் புற மக்களிடையே , ஸ்தாபன அமைப்பை பலப் படுத்தி, உண்மையான மக்கள் இயக்கத்தைக் கட்டினால், பலன் தரலாம். இல்லாவிடின், மீண்டும் இதே ஆட்சி.. நல்லதோ..கேட்டதோ! ..மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், மணல்,தாது மணல், கொள்ளை தடுப்பு, கல்வி வியாபாரம் தடுப்பு, !..தீர்வு கொடுங்கள்