இதோ ஒரு பெருமகனாரின் அற்புத பிரார்த்தனை!
( அப்துல் கலாம் அவர்களின் பிரார்தனை... எழுச்சி தீபங்கள் புத்தகத்தின் இறுதியில்)) ..........
" ...இறுதியாக ஈத் பெருநாளன்று என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கான பதிலுடன் இந்த புத்தகத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன் .
"ஈத் பெருநாளன்று நீங்கள் என்ன பிரார்த்தனை செய்தீர்கள் ?"என்பதே அந்த கேள்வி.
எனது ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆரோக்யமான , ஆனந்தமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்ததோடு, கீழ்க்கண்டவாறும் பிரார்த்தித்தேன்.
..."இறைவா! நல்வாழ்வு ஈன்ற இறைவா! உன் அருளை எண்ணி எண்ணி தொழுகின்றேன்!"
" இறைவா! என் நாட்டு மக்கள் ஒன்று பட்டு வாழ அவர்கள் மனங்களில் நல்ல எண்ணங்களையும் ,செயல்களையும் ஊற்றெடுக்க வைப்பாயாக "
"இறைவா! பிளவு சக்திகளை முறியடிக்கும் வலிமையை மக்களுக்கு வழங்குவதற்கு எனது தேசத்தின் அனைத்து மதத்தலைவர்களுக்கும் நல்லருள் புரிவாயாக. "
" தனி மனிதரை விட தேசமே மிகவும் முக்கியம் என்ற எண்ணத்த்தை மக்கள் மனங்களிலும் , தலைவர் மனங்களிலும் மலரச்செய்வாயாக"
" இறைவா! ..இந்த தேசத்தை கூடிய விரைவில் செழிப்பான முன்னேற்றமடைந்த ஒரு தேசமாக உயர்த்துவதற்கு பாடுபட என் தேச மக்களுக்கு நல்லருள் புரிவாயாக ".
--------------------------------------------------------------------------------
நம் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார்: "...ஏ.ர்.ரஹ்மான் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் அவர் வந்தே மாதரம் பாடும் போது அவரது குரல் அனைத்து பாரத மக்களின் இதயத்திலும், அவர்கள் எந்த மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அனைத்து பாரத மக்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. நம் ஒற்றுமை மனப்பாங்குக்கும் நம் இலக்கு சார்ந்த முன்னேற்றத்துக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக விளங்குவது மக்களைப் பிளக்கும் சித்தாந்தவாதிகள்...இன்று கவலைத் தரக்கூடிய விஷயமென்னவென்றால் மதத்தின் புற உருவை மத உணர்வுகளுக்கு மேலாக மதிக்கிற போக்குதான். நாம் ஏன் கலாச்சார ரீதியாக- மதரீதியாக அல்ல- ஒரு தன்மையை நம் பாரம்பரியத்துக்கு நம் அனைவரையும் பாரத மக்களாக்கும் ஒரு தன்மையை வளர்க்கக் கூடாது?"
-----------------------------------------------------------------------------------
1947 ஆகஸ்ட் 15ம நாள் பண்டிட் ஜவஹர்லால் நேருவின்
சுதந்திர தின நள்ளிரவு உரையைக்கேட்பதற்காக என்னுடைய
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அருட்தந்தை அய்யாதுரை சாலமன் என்னைக்கூட்டி சென்றார்.நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று
நேரு சொன்னதைக்கேட்டு எல்லோரும் நேக்குருகிப்போய்விட்டோம்.
அடுத்த நாள் நாளேடுகளில் இந்த வரலாற்று புகழ் வாய்ந்த சம்பவம் தலைப்பு செய்தியாக இடம் பெற்றிருந்தது.நான் வாசித்த தமிழ் நாளேட்டில் பக்கத்திலேயே இன்னொரு செய்தியும்
இருந்தது...நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையை
தணித்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக வெறும் காலுடன் நடந்து போய்க்கொண்டிருந்த
மகாத்மா காந்திய பற்றி அந்த செய்தி விவரித்தது
பொதுவாக தேசத்தந்தை என்ற முறையில் செங்கோட்டையின்
கொத்தளத்திலிருந்து முதன் முதலில் மகாத்மா காந்திதான் தேசியக்கொடியை
ஏற்றியிருக்கவேண்டும். ஆனால் அவரோ நவகாளியில் இருந்தார். ! அப்படிப்பட்ட உயர்ந்த மனம் கொண்டவர் காந்தி!
-----------------------------------------------------------------------------
செல்வாக்கும் தொலைநோக்கும் படைத்த அரசியல்வாதிகளின் ஒரு தலைமுறை முடிந்து போய்விட்டதை நினைத்து துக்கப்படு என் தோழா!
ஒரு குறிப்பிட்ட தேசத்தைப்பற்றி காரணம் இல்லாத தேவையற்ற பீதியை நமது அரசே கிளப்பிவிடுவதை நினைத்து துயரப்படு என் தோழா!
சமீப காலம் வரை நாம் தலைமை ஏற்று வந்திருந்த மூன்றாம் உலக நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் நமக்கும் இடையே திரை போட்டுவிட்ட அந்த பீதியை நினைத்து
விசனப்படு என் தோழா!
தேசங்களின் மத்தியில் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு
நமது மரியாதையை குறைதுக்கொண்டதற்காக
மௌனமாக கண்ணீர் சிந்து என் தோழா!
--------------------------------------------------------------------------------------- 2
",இந்தியாவின் கடந்த கால அனுபவங்களை நாம் மறந்துவிடாமல் நினைவிற் கொள்ள வேண்டும்.அணு ஆயுதப் பரவல எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய பண்டித ஜவஹர்லால் நேரு,அணைத்து நாடுகளுமே அணு ஆயுதங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் .அணு ஆயுதம் இல்லாத உலகம் வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.அதற்கு என்ன பலன் கிடைத்தது என்பதும் நாம் அறிந்ததே ............................
அமெரிக்க மண்ணில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுத சாதனங்களையும் ,ரஷ்ய மண்ணில் இன்னும் ஒரு பத்தாயிரம் அணு ஆயுத சாதனங்களையும் குவித்து வைத்திருகிறார்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது .பிரிட்டன்,சீனா ,பிரான்ஸ் ,பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளில் அணு யுதங்களை ிறைய ைத்திருக்கின்றன."..Dr.KALAAM
--------------------------------------------------------------------------------------
3
EXCERPTS FROM Dr.KALAAM'S BOOK " EZHCCHI DHEEPANGAL": "NUCLEAR WEAPONS AND REAL FACE OF USA" நூறு கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசம் ...தொழில் முன்னேற்ற முனைப்பும், அதிக அளவில் குவிந்திருக்கும் அறிவியல் திறனும் கொண்ட ஒரு தேசம்...அது மட்டுமல்ல அணு சக்தி படைத்த ஒரு தேசம்...என இத்தனை ஆற்றல்கள் இருந்ததும் ,எந்த அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டுமோ அந்த இடத்தை இந்தியா எட்டவில்லை.உலக அரங்கில் நமக்குள்ள செல்வாக்கு எப்படி என்று பார்த்தால், வேறு எந்த நாடும் நம்மைப் போல உரிய மதிப்பில்லாமல் இவ்வளவு கீழே பின் தங்கியிருக்காது என்றே தோன்றுகிறது.
பொக்ரான் இரண்டாவது அணு வெடிப்பு சோதனைக்கு பிறகு மேற்கத்திய நாடுகள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பற்றி ஒரே மாதிரி பேசுகின்றன. பாகிஸ்தானுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தையும் நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும் என்பதை நிரூபித்துக்கு காட்ட வேண்டியது, நமது தேச நலனுக்கு முக்கியமானதில்லையா ?நாம், உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்கள்;மிகவும் பக்குவப்பட்டவர்கள்.சமய சார்பற்ற தேசத்தினர்,ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படை அம்சங்களைக் கட்டிக் காப்பவர்கள் என்பதை இந்த உலகிற்கு நிஜமாக்கிக் காட்ட வேண்டாமா...?
,இந்தியாவின் கடந்த கால அனுபவங்களை நாம் மறந்துவிடாமல் நினைவிற் கொள்ள வேண்டும்.அணு ஆயுதப் பரவல எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய பண்டித ஜவஹர்லால் நேரு,அணைத்து நாடுகளுமே அணு ஆயுதங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் .அணு ஆயுதம் இல்லாத உலகம் வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.அதற்கு என்ன பலன் கிடைத்தது என்பதும் நாம் அறிந்ததே ............................
அமெரிக்க மண்ணில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுத சாதனங்களையும் ,ரஷ்ய மண்ணில் இன்னும் ஒரு பத்தாயிரம் அணு ஆயுத சாதனங்களையும் குவித்து வைத்திருகிறார்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது .பிரிட்டன்,சீனா ,பிரான்ஸ் ,பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளில் அணு ஆயுதங்களை நிறைய வைத்திருக்கின்றன.
ஸ்டார்ட் II (START II )ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆன சமீபத்திய ஒப்பந்தங்கள் எல்லாம் அணு ஆயுத சாதனங்களின் எண்ணிக்கை இரண்டாயிரமாகக் குறைப்பதைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.இந்த ஒப்பந்தங்கள் கூட முடங்கிக் கிடக்கின்றன.அணு ஆயுதமே இல்லாத நிலையை எட்டுவதரற்காகக் இந்தியாவின் 1998 மே அணு வெடிப்பு சோதனைகளை எதிர்ப்பவர்களெல்லாம் அமெரிக்கா ,ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஒரு இயக்கத்தை நடத்தட்டும் .நமது அண்டை நாடுகள் இரண்டும் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் வைத்திருக்கின்றன என்பதை நாம் நினைவு வைத்துக் கொள்வது மிக முக்கியம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தேசமாகத் தான் இந்தியா இருக்க வேண்டுமா ?
ஆனாலும் ,நீண்ட நெடிய சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு நாம் விடுதலை பெற்றோம்.நமக்கான எல்லைப் பகுதிகளுடன் ஒரு தேசமாக ஒன்றினைந்தோம்.பொருளாதாரச் செழிப்பு என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே இருந்து விட முடியுமா?
தேசத்தின் வலிமையைக் காட்டிக் கொள்வதற்கான ஒரே வழி ,அதைப் பாதுகாபதற்கான பலம் பெற்றிருப்பது தான். வலிமை என்பது ராணுவ பலமும், பொருளாதார வளமும் சேர்ந்த ஒன்று தான்.
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்ஸிலின் முடிவுகளையும், கொள்கைகளையும் தீர்மானிக்கும் சர்வ வல்லமை படைத்த நாடுகள் எவை தெரியுமா? அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் தான் பாதுகாப்பு கவுன்சிலை ஆட்டிப் படைக்கின்றன. இதுவரையிலும், பாதுகாப்பு கவுன்சிலில் நமக்கு இடம் கிடைத்ததில்லை. ஆனால் இப்போது இந்தியாவை ஓர் உறுப்பினறாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகள் சிபாரிசு செய்வதை என்னவென்று சொல்வது? எப்படி வந்தது இந்த மாற்றம்?
----------------------------------------------------------------------------------------
4
தமிழ் நாட்டில் களபிரர் ஆட்சி நடந்த போது ( கி.பி.200-கி.பி.600)..
From Dr.Kalaam's book " குசுமபுரம் என்ற இடத்தில (இன்றைய பாட்னா )கி பி .476 பிறந்த ஆரியபட்டர் வான சாஸ்திர வல்லுனராகவும், கணித மேதையாகவும் , பெரும்புகழ் பெற்று விளங்கினார் .அந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான கணித அறிவின் வடிவமாகக் பெருமை பெற்றுத் திகழ்ந்தவர்.....இரண்டு பகுதிகளாக ஆரியபட் டியத்தை அவர் வடித்த போது அவருக்கு 23 வயதுதான். அரித்மெடிக்,அல்ஜிப்ரா ,trigonometry , மற்றும் வான சாஸ்திரத்தை உள்ளடக்கிய ஒப்பற்ற நூல் ,ஆரியபட்டியம் . ஒரு முக்கோணம் மற்றும் ஒரு வட்டத்தின் பரப்பளவுக்கான சூத்திரம் வகுத்துத் தந்த அவர்,ஒரு கோளத்திற்கும் ஒரு பிரமிடுகும் கொள்ளளவு காண முயன்றார்.ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும் குறுக்களவின் விகிதமாக "பை "(P I )என்பதின் தோராய மதிப்பைக் கணிக்க முயன்ற முதல் கணித மேதை அவர்தான். அதன் தோராய மதிப்பை 3.1416 என்று நிர்ணயித்தார். இந்த மாபெரும் வானவியல் நிபுணரைப் போற்றும் வகையில் இந்தியா,1975 விண்ணில் செலுத்திய முதல் செயற்கைக் கோளுக்கு ஆரியபட்டா என்று பெயர் சூட்டப்பட்டது ....It was the time of Guptha's in Gangetic valley.
continued...from Dr.Kalaam's book எழுச்சி தீபங்கள்.....
"ஹர்ஷ சாம்ராஜ்யத்தைத் சேர்ந்திருந்த ராஜஸ்தானில் பில்லமலா என்ற இடத்தில கி பி .598 இல் பிறந்தவர்,பிரமகுப்தர்.... தமது 30 வது வயதில் ' வானசாஸ்திரம் பற்றிய விஷயங்களை அன்றைய காலகட்டம் வரையிலும் தொகுத்துத் தந்துள்ளார் .வரிசைத் தொடர்(progression) பற்றியும்,வடிவியல்(geometry )பற்றியும் இவர் விவரித்துள்ளார்.வெவ்வேறு -------களில் நிர்ணயிக்கப்பட்ட முடியாத சமன்பாடுகளையும் தீர்வுகளையும் ,இருபடி சமன்பாடுகளையும் தீர்வுகளையும் ஆராய்ந்து விடை தந்துள்ளார்."..
.. .600 AD was when Kalappirars were overthrown by Pandyan Kadungon and Pallava Simhavishnu.(note)
-------------------------------------------------------------------------------------
5
ஒரு சமயம் நமது இணையற்ற அறிஞர் அப்துல் கலாம் அவர்கள் தனக்கு மூன்று அன்னையர் உண்டு என்றும் முதல் அன்னை தனது தாயார், அடுத்த அன்னை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, மூன்றாவதாக யுகோஸ்லாவியாவில் பிறந்து கல்கத்தாவின் ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசா என மொழிந்தார். அவருக்கு மட்டுமல்ல. எத்தனையோ லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு , மொழி வேறுபாட்டிற்கு அப்பால் , எம் .எஸ். அவர்கள் கலைவாணியின் உருவமாக அறியப்படுகிறார். .... புனிதமான ஒவ்வொரு பண்பாட்டு சின்னத்தையும் , சின்னாபின்னமாக்கி , அதில் வக்கிரமாக காசு பண்ணும் அயோக்கியர்கள் , எதையும் விட்டு வைப்பதில்லை. இயேசு கிறிஸ்துவையே கேவலப்படுத்தி படம் எடுத்து பகுத்தறிவுப்படம் என்பான்.
--------------------------------------------------------------------------------------
6
COOPERATIVE FARMING, WILL ENSURE THAT LAND FRAGMENTATION IS PREVENTED, MODERN METHODS OF AGRICULTURE ARE INTRODUCED, LOSS DUE TO VAGARIES OF MONSOON DO NOT AFFECT INDIVIDUAL FARMERS, TRANSPORTATION AND MARKETING WILL BE COST-EFFECTIVE,,,SO MANY ADVANTAGES. Dr.KALLAM IS SHOWING THE WAY.
--------------------------------------------------------------
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் சனிக்கிழமை நடைபெற்ற வேளாண் பல்கலைக்கழக 3ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கிய பின், அவர் பேசியது:....இந்தியாவில் மக்கள் தொகைப் பெருகி வருகிறது. 2020ஆம் ஆண்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு தகுந்தபடி 340 லட்சம் டன் உணவுப் பொருள்கள் தேவைப்படும். இந்தியாவில் தற்போது 170 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பில் மட்டும் விவசாயம் செய்யப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் இது 100 லட்சம் ஹெக்டேர் நிலமாகக் குறையும். அப்போது உணவு உற்பத்தியும் சரியும்......இதைக் கருத்தில் கொண்டு, வேளாண் துறையைப் புத்துணர்வு ஊட்ட வேண்டியது அவசியம். சிறு விவசாயிகளை ஒருங்கிணைந்து, கூட்டுப் பண்ணையை ஊக்குவித்து, விவசாயத்தில் தொழில் நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாத மதிப்புக் கூட்டிய சந்தையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
.......பால், சர்க்கரை உற்பத்தியில் கூட்டுறவு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, வேளாண் துறையில் கூட்டுறவு முறையைப் பிரபலப் படுத்த வேண்டும். காய்கறி, தோட்டக்கலை உற்பத்தி பெருகி வருவதாக அறிகிறேன். ஆனால், சந்தை வாய்ப்புகள் சரியாக அமையாததால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாத நிலை காணப்படுகிறது.....விவசாயிகளின் விளை பொருள்களுக்கு சரியான விலை கிடைக்காதது குறித்து ஆய்வு நடத்தித் தீர்வு காண வேண்டும். கூட்டுப் பண்ணைத் திட்டம், சரியான விலை ஆகியவற்றை கொடுத்து விட்டால், விவசாயிகள் முன்னேற்றம் காண்பார்கள். இதுதொடர்பான பாடத்தை வேளாண் பல்கலைக்கழகங்களில் கற்பிக்க வேண்டும்.....
எல்லாக் கிராமங்களையும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களுடன் சாலைகள் வழியாக இணைக்க வேண்டும். கிராமங்களில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். தொழில் முதலீடுகளை கிராமப்புறங்களில் அதிகளவில் ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.
-----------------------------------------------------------------------------------------
DR.ABDUL KALAAM SAYS:.......................................................
"மதிப்புக்கூட்டல் என்றால் என்ன ?", செயற்கைக்கோள் ஏவுகலம்
தயாரிப்பில் 1970ல் BELIRIUM DIAPHRAGM ........எங்களுக்கு தேவைப்பட்டது. ...அவை நம் நாட்டில் கிடைக்காததினால் சர்வதேச சந்தையில் வாங்க ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. 100 diaphragm வாங்க நியுயார்க்கில் ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால் ICBM TECHNOLOGYல்
இது பயன்படுமாகையால் , அமெரிக்க அரசிடம் இருந்து இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ...இந்த பெரிலியம் தாது அதிகமாக கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று! ..அந்த நாட்களில் இந்த மூலப்பொருள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.!.
ஜப்பான் அதை பெரிலியம் கம்பி, தகடு என பதப்படுத்தி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. அமெரிக்க கம்பனி இதை diaphragm விற்பனை செய்கிறது! இது தெரிந்தவுடன் , பெரிலியம் தாது ஏற்றுமதியை தடை செய்தோம்! .இது போன்ற நிலைமையினால் தான் , ஏராளமான இயற்கைச்செல்வங்கள் நமது நாட்டில் கொட்டிக்கிடந்தாலும் ,இது ஒரு ஏழை தேசமாக தடுமாறிக்கொண்டிருக்கிறது. மதிப்புக்கூட்டும்பொது பெரிலியம் கம்பி பத்து மடங்கு விலை கூடுகிறது. அதை ஒரு பொருளாக மாற்றும்போது 100 மடங்கு விலை பெறுகிறது...எனவே நாம் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்" ..
----------------------------------------------------------------------------------
"பாரத ரத்னா' டாக்டர் அப்துல் கலாம் தமது பேட்டி ஒன்றினில், ""உயர்ந்த எண்ணங்களை உருவாக்குவது அறிவுத் திறனும், கற்பனைத் திறனும்''..... "இராமன் விளைவுகள்' ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு, ....."வானை யளப்போம்' என்ற பாரதியின் கவிதை வரி ....கலைஞனின் கண்டுபிடிப்பு. .....இருவருக்குமே அறிவுத் திறனும், கற்பனைத் திறனும் அவசியமாக இருந்தாலும், புதியன படைப்பதற்கு மிகவும் முக்கியமானது வற்றாத உற்சாகம். படைப்பாளிகளான விஞ்ஞானியும், கலைஞனும் மனித வாழ்க்கையை இன்பமடையவும், வளப்படுத்தவும் செய்கிறார்கள்'' - என்பார்..
-----------------------------------------------------------------------------------