தினமலர் 11-3-2016 ,முதல் பக்கம். "கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? ..கருணாநிதி பரபரப்பு பேட்டி..
தமிழகத்தில், மே 16ல் சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அதிமுக, திமுக உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், தேர்தலில், காங்கிரஸ் உட்பட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ள திமுக , தேர்தலுக்குப் பின், தனித்து ஆட்சி அமைக்குமா அல்லது கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது தொடர்பாக 'தினமலர்' நாளிதழுக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த சிறப்புப் பேட்டி. ...
./தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? அதற்க்கு நீங்களே பிள்ளையார் சுழி போடுவீர்களா? /..
.கூட்டணி ஆட்சி என்பது தேர்தலுக்குப் பிறகு வெற்றியின் பரிணாமத்தைப் பொறுத்து உருவாக வேண்டியது. ஒரு கட்சி முழுப் பெரும்பான்மை பெற்றுவிட்டால், அப்போது, கூட்டணி ஆட்சி தேவையில்லை. எந்தக் கட்சிக்கும் முழுப் பெரும்பான்மை கிடைக்காதபோது கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது. கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றதும் உண்டு.. தோல்வி அடைந்ததும் உண்டு. .
./ யாருக்கும் பிடி கொடுக்காமல் இருக்கும் தேதிமுக தலைவர் விஜயகாந்தின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? /
,,,,,"அவசரப்படுவது ஆக்கபூர்வமான விளைவுகளைத் தராது என்ற எண்ணம் இருக்குமே தவிர ,எதிர்பார்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை."
/..தமிழக அரசியலில் 'இலவசங்கள் ' தவிர்க்க முடியாததாகிவிட்டது. இலவசங்கள் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சிக்கும் தைரியம் இல்லையே ! ஏன்? /...
"மக்களிடம் இல்லாமையும் போதாமையும் இருக்கின்ற வரை இலவசங்கள் தவிர்க்க முடியாதவைதான். இலவசங்களைக் காலப் போக்கில் குறைக்கின்ற அதே நேரத்தில், மக்களின் ஏழ்மை நிலையைப் போக்கிட முயற்சிக்க வேண்டும். "
/ இந்த முறை ,உங்கள் கட்சி சார்பில் 'இலவசம்' உண்டு எனில் 'ப்ரிட்ஜ் ' தருவீர்களா? / //
" தேர்தல் அறிக்கை வெளியானவுடன் தெரிந்து கொள்க! " .
./ லோக்சபா தேர்தலின் போது, உங்களுடன் கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் , உங்களை விட்டு விலகிச் செல்ல யார் காரணம்? மற்ற ஜாதியினரின் ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்காது என்பதால், அவரை திமுக ஒதுக்கியதா? / .
.." திருமாவளவன் நல்ல நண்பர். தனிப்பட்ட முறையில் என்னிடம் ஆழ்ந்த அன்பு மிகுந்தவர். சிறந்த பேச்சாளர். அவரை திமுக எப்போதும் ஒதுக்கி வைத்து விடவில்லை. அரசியலில் கூட்டணியில் சேருவதும், விலகுவதும் சகஜமாகிவிட்ட பிறகு, அதற்கு யார் காரணம் என்று தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை"