.ஆந்திரா மாநிலம், சீமாந்திரா மற்றும் தெலுங்கானா
என்று பிரிக்கப்பட்டிருப்பது போல, இன்றைய தமிழ்நாடும், பிரிக்கப்பட்டு ,,, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்கள் கொண்ட 'தென் தமிழ்நாடு ' என்ற புதிய மாநிலம் , இந்தியத் திருநாட்டின் கூடுதல் மாநிலமாக அறிவிக்கப் படவேண்டும். உண்மையில், இது பண்டைய பாண்டியநாடு. தொன்மைச் சிறப்பும் , தொடர்ச்சியான குறைந்த பட்சம் 2500 ஆண்டுகளுக்குண்டான, வரலாற்றுச் சிறப்பும் கொண்ட நாடு, ...பாரதி பாடியபடி, "தமிழ் கண்டதோர் வைகை, பொருநைநதி, ' கொண்ட நாடு,. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாடு. சங்க காலக் கவிஞர்கள் பெரும்பாலானவர்கள், பாண்டியநாட்டைச் சேர்ந்தவர்கள். பாண்டிய நாடுதான், உண்மையில் தமிழ்நாடு, .தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடர்ச்சியாக , கடந்த 50 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. நெஞ்சில் நேர்மையும், உரமும் இருந்தால், 1967 முதல் இன்றுவரை, தென் மாநிலங்களில் வளர்ச்சிக்கான முயற்சிகள், முதலீடுகளை சென்னைப் பகுதியோடு ஒப்பிட்டு , அறிக்கை தரமுடியுமா?