RSR
====
அரசியலை ஆழ்ந்து கவனித்தால், கட்சிகள் உடைவதற்கு , கொள்கை வேறுபாடுகளே காரணம் , என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
உண்மையில், கொள்கை வேறுபாடுகள் , வர்க்க அடிப்படை கொண்டவை...வர்க்க அடிப்படை என்பது, சர்வதேச அரசியல் பற்றிய புரிதலையும் கொண்டது. ,
மேலோட்டமான தனிநபர் அரசியலுக்குப் பின்னணியில், எவ்வாறான வர்கங்கள் முட்டி மோதுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள , முதற்கண், அவ்வாறான வர்க்க அடிப்படை காண முயற்சியும் பயிற்சியும் வேண்டும்...
KARL MARX EIGHTEENTH BRUMAIRE OF LOUIS BONAPARTE ஒரு சிறந்த உதாரணம். .
இந்திய , மாநில அரசியலில் பல்வேறு அரசியல் இலக்குகள் இருப்பதும் ,..இலக்குகளை அடைவதில் வழிமுறை வேறுபாடுகள் இருப்பதும் இயல்பானதுதான்.
1885 காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கப்பட்ட போது ஆங்கிலம் கற்றறிந்த அறிஞர்கள் மட்டுமே அதில் பங்காற்றினர்.
1895ஆம ஆண்டிலேயே ,மராட்டியத்தில் திலகர் பெருமான் அதை ஒரு மாபெரும் மக்களியக்கமாக மாற்றியிருந்தார்.
1905ல் வங்காளப் பிரிவினை , அரவிந்த கோஷ் தலைமையில் அனுஷீலன் சமிதி, ஜுகாந்தர் சமிதி போன்ற , ஆயுதப் புரட்சிக் குழுக்கள தோன்ற வழிகண்டது..
.1907 சூரத் காங்கிரசில், தேசியகாங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டாகப் பிளந்தது.
.முதல் உலகப் போர் 1914ம் வருடம் தொடங்கியபோது, ஜெர்மனியின் உதவியுடன், ஆயுதப் புரட்சி நடத்த செண்பகராமன் பிள்ளை , முயன்று வெளிநாடு சென்றார் .
1917ம் ஆண்டில், சோவியத் புரட்சி வெற்றி பெற்றதினால், தேசிய இயக்கம் வர்கப் பார்வையும் கொண்டு வலுவடைந்தது.
1917-1944 இடைப்பட்ட காலத்தில்,
பாட்டாளி வர்க்க அரசியல்,
ஹிந்து தேசிய அரசியல்,
காங்கிரசின் வெகுஜன மக்கள் அரசியல்,
ஆயுதப் போராட்ட அரசியல்
போன்ற பல போக்குகளும் நிலவி ஒத்துழைத்தும் , போட்டியிட்டும் வளர்ந்தன. .
சர்வதேச சூழல், நாட்டு நிலவரம் போன்ற விஷயங்களை கணிப்பதில், திறமை மிகுந்த இயக்கங்கள் வெற்றி பெற்றன.
ஆய்தக் குழு போராட்ட வீரர்கள், பலர் புரட்சிகர பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தனர்
. கூடவே மதம், பிராந்தியம் , சாதியம் ,போன்ற கருத்துகளும் நுழைந்தாலும், இவை அனைத்தும்
பிராந்திய முதலாளித்துவம்,
நில உடமை பிரச்னை ,
இவற்றிற்கு மேற்கத்திய ஏகாதிபத்திய ஆதரவு பெற முயற்சி என்று பிறப்பெடுத்தன.
இவற்றில் நேரு-இந்திரா வழிகாட்டிய மத நல்லிணக்கம், தேசிய சுயசார்பு, வல்லமை, பிரிவினைவாத எதிர்ப்பு, சோஷலிசப் பாதை, வென்றது. +
1990 சர்வதேச அளவில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. ..சோவியத் யூனியன், அமெரிக்க - சீன கூட்டுச் சதியால், உடைந்தது.
சர்வதேச வர்க்க அரசியலை விட , தனது நாட்டின் முதலாளித்துவமே முதன்மை என்ற சீனப் பார்வை( இன்றும் தொடர்கிறது) .
.சோவியத் யூனியன் இருபக்கமும் நெருக்கடியில் உடைந்தது.
இதன் விளைவாக, இந்திய தேசியக் காங்கிரசும், சில அணுகுமுறை மாற்றங்கள் கொள்ள அவசியம் நேர்ந்தது.
பெயரளவில், தேர்தல் முறை ஜனநாயகம்,
கிராமப்புற குலாக்குகள்,
பெட்டி பூர்ஷ்வா ,
தேசிய , சர்வதேசிய முதலாளித்துவம்
போன்ற சக்திகளுக்கு வளர வாய்ப்பளித்து,
இன்று அதீத தேசியத்தை ( மத அடிப்படையில்) வளர்த்து, மேற்கத்திய வல்லரசுகளுடன் கைகோர்த்து , தானும் ஒரு ஏகாதிபத்தியமாக மாறும் பாதையில் நமது நாட்டின் போக்கு செல்கிறது.
அந்நிய முதலாளித்துவம்,
தேசிய முதலாளித்துவம்,
பிராந்திய முதலாளித்துவம்,
கிராமங்களில், பணக்கார விவசாயிகளின் ஆதிக்கம்,
சிறு முதலாளியம்,
உற்பத்தியில் சற்றும் பங்கில்லாத , லும்பன் முதலாளியம்,
இவை யாவும் சேர்ந்து தத்தமது நலன்களை முன்னெடுத்து வருகின்றன.
, தலைவர்கள் வருவார்கள் போவார்கள்,
TACTICAL CHANGES OCCUR. - BASICS REMAIN.