"அரசியல் நிர்ணய சபையின் அமர்வில் நிகழ்த்தப்பட்ட மிக நீண்ட உரையில் டாக்டர் அம்பேத்கார் இதனை ,மிகத்தெளிவாக பின்வருமாறு விளக்கியுள்ளார், "இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவின் முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்திய தேசமானது பல மாநிலங்களின் ஒருங்கிணைந்த அமைப்பே (as a union of states) என்ற விளக்கத்திற்கு, ஒரு சில விமர்சகர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆனால் "ஒருங்கிணைந்த" (union) என்னும் இச்சொற்றொடர் வரைவுக்குழுவால் நன்கு அறிந்தே சேர்க்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தும் இவ்வேளையில், அவ்வாறு பயன்படுத்தியதற்கான காரணத்தையும் . இங்கு என்னால் சொல்ல முடியும்....இந்திய தேசம் ஒரு கூட்டமைப்பு என்று கொண்டாலும், அந்தக் கூட்டமைப்பு ( federation) , அதில் பங்குபெற்ற மாநிலங்கள் இடையிலான ஒப்பந்தத்தின் விளைவாக உருவானதல்ல என்பதையும் அவ்வாறிருக்கையில் எந்த ஒரு மாநிலமும் அக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோர இயலாது என்பதையும் இவ்வரைவுக்குழு தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்தக் கூட்டமைப்பு அழிக்க முடியாதது. எனவே இது ஒரு ஒன்றுபட்ட அமைப்பு ! UNION
இந்திய தேசமானது நிர்வாகத் தேவைக்காகவும் வேறு பல வசதி அடிப்படையிலான காரணங்களுக்காகவும் பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டாலும், , இந்த நாட்டின் மக்கள் அனைவரும், ஒரே அதிகார ஊற்றுக்கண்ணில் தோன்றிய ஒரே ஆட்சி அதிகாரத்தின் ஆளுமையில், வாழும் ஒரே மக்களே!
. இவ்வாறான மாநிலங்கள் பிரிவினைகோரும் உரிமையை மறுக்கும், அழிக்க முடியாத கூட்டமைப்பை நிறுவ அமெரிக்கர்கள் ,ஒரு பெரும் உள்நாட்டுப் போர் மூலம் அதை நிறுவ வேண்டியிருந்தது.
எனவேதான்,எந்தவிதமான வேறுவிதமான வியாக்கியானங்களுக்கும், ஐயங்களுக்கும் வரும் காலங்களில், இடமளிக்கா வண்ணம், திட்டவட்டமாக இதைத் தெளிவு படுத்துவது ,நல்லது என்று அரசியல் சாசன வரைவுக் குழு தீர்மானித்தது
**********************************************************
Dr Ambedkar, during the course of a long and fine speech in the Constituent Assembly makes this very clear.
“Some critics have taken objection to the description of India in Article 1 of the Draft Constitution as a Union of States.
It is said that the correct phraseology should be a Federation of States.
It is true that South Africa which is a unitary State is described as a Union. But Canada which is a Federation is also called a Union. Thus the description of India as a Union, though its constitution is Federal, does no violence to usage.
But what is important is that the use of the word Union is deliberate. I do not know why the word 'Union' was used in the Canadian Constitution. But I can tell you why the Drafting Committee has used it.
The Drafting Committee wanted to make it clear that though India was to be a federation, the Federation was not the result of an agreement by the States to join in a Federation and that the Federation not being the result of an agreement no State has the right to secede from it. The Federation is a Union because it is indestructible.
Though the country and the people may be divided into different States for convenience of administration,
the country is one integral whole,
its people a single people living under a single imperium derived from a single source.
The Americans had to wage a civil war to establish that the States have no right of secession and that their Federation was indestructible.
The Drafting Committee thought that it was better to make it clear at the outset rather than to leave it to speculation or to dispute.”