அ. மார்க்ஸ் முகநூல் பதிவுகளை அன்றாடம் தவறாது தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். .வெகு அபூர்வமாகத் தான், அவருடைய பிதற்றல்களை சகிக்க முடிகிறது. இவர் ஒரு மார்க்சிய வாதி அல்ல. எதுவுமே இல்லை. சாத்தானும் வேதம் ஓதுவது போல , பெரியாரிய வாதிகளும், ஸ்டாலினிச எதிர்ப்பாளர்களும், இன்று தமிழ்நாட்டில், பெரிய முற்போக்காளர்களாக உலா வருகின்றனர். ..இதுபோன்ற கறுப்புச் சட்டைகள், லெனின்-ஸ்டாலின்-மாவோ , காந்தி, அம்பேத்கர், நேரு போன்றவர்களின் பெயரை உச்ச்சரிப்பதற்குக் கூட அருகதை இல்லாதவர்கள். .வெறும் வெறுப்பு அரசியலும் , குழப்ப அரசியலும் மட்டுமே இவர்களின் பங்கு.! நீங்கள் ஒரு உண்மையான இடதுசாரியா என்பதற்கு ஒரே உரைகல், 'தோழர் ஸ்டாலின் வரலாற்றில் ஆற்றியுள்ள பங்கு பற்றி உங்கள் மதிப்பீடு என்ன? " என்பதாகும். நீங்கள் சிகப்புச் ச்ட்டையாகவே இருந்தாலும், ஸ்டாலின் மறுப்பாளராக இருந்தால், நீங்கள் ஒரு போலி இடதுசாரி மட்டுமே!. நேரு, இந்திரா பற்றியெல்லாம் இவர்கள் பேசமாட்டார்கள். ரகசியமாக இல்லாமல், தோழர் ஸ்டாலின் மறைந்த பொது, நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் ஸ்டாலினைப் பாராட்டி நேரு பேசியது, நீங்கள் படிக்க வேண்டும். காந்தி மட்டும்தான் , இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மையை வலியுறுத்தினாரா? நேரு ? காந்திக்கு சர்வதேச அரசியல் அறிவு பூஜ்யம்.' நேருவிடம் இதுபோன்ற பிரச்னைகளை விட்டுவிட்டேன் 'என்பது அவரது வாக்குமூலம். அதுபோன்று தலித் மக்களின் பிரச்னைகளுக்கு, கலப்புத்திருமணம், என்று அம்பேத்கரும், கோவில் நுழைவு என்று காந்தியும், அடிப்படையில் கைவைக்காத தீர்வுகளை வலியுறுத்திய காலத்தில், மிக மிக ஆரம்ப காலத்திலேயே , இந்தியாவின் தலித் பிரச்னை, அவர்களில் மிக மிகப் பெரும்பான்மையான மக்கள், நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களாக இருப்பதுதான் என்றும், அவர்கள், நிலமுள்ள விவசாயிகளாகவும், பொருளாதார சுயசார்பு கொண்டவர்களாகவும் மாறும் வரை, தலித் மக்கள் மீதான அடக்குமுறை தொடர்கதையாகத் தான் இருக்கும் என்பதை திட்டவட்டமாக, சிறந்த லெனினிசக் கண்ணோட்டத்தில், தனது நூலில் அறிவுறித்தியவர் நேரு. மேலும் விவசாயிகள் முதலில் நில உடமைக்காக புரட்சியை ஆதரித்தாலும், அது நீடிக்காது ...பண்ணையார்களுக்கு பதிலாக அவர்கள், எதிர்புரட்சி சக்தியாக மாறுவர் என்பதை, பிரெஞ்ச் புரட்சி, சோவியத் அனுபவங்கள் மூலம் தெளிவாக் உணர்த்தியவர் நேரு.. அறிவிலிகளுக்கு புரியாது
======================================================
உங்கள் கண்ணுக்குப் புலப்படவில்லையா? ,,,,இன்று காந்தி பற்றி புகழ்ந்து எழுதுவது, வலதுசாரி , மற்றும் ஹிந்துத்வா சக்திகள் கூடத்தான் செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ். பிரார்த்தனையில் காந்தி பெயர் சேர்த்துவிட்டார்கள். !..
.ஆனால் கவனியுங்கள், ...எந்த ஒரு ஹிந்துதவ சக்தியும், நேரு, இந்திரா பற்றி சாதகமாக பேசுவதில்லை,! ஏன்?
..1990க்குப் பிந்திய காங்கிரஸ்காரன் கூட, இன்று நேருவை உண்மையில் பின்பற்றுவதில்லை. . நேருவின் கொள்கையை மதச் சார்பின்மை என்று மட்டும் சுருக்கிக்கொண்டு,' நானும் ஒரு காங்கிரஸ்காரன்' என்று கூவுகிறார்கள்.
நாஜிகளின் முதல் எதிரி பொதுவுடைமை. ..பொதுவுடமைக் கொள்கை, அன்றைய சோவியத் யூனியனின் மகத்தான சாதனைகள் பற்றியெல்லாம் அறியாதவர்கள், அல்லது அறிந்தும் மறைப்பவர்கள், வெறுக்கும் philistines , ஏதோ கம்யூனிஸ்டுகள் என்றால் வன்முறையாளர்கள் என்று முட்டாள்தனமாகப் புரிந்துகொண்டு , நாசிசத்தின் உண்மையான ஆணிவேர் , குட்டி முதலாளிய lumpen bourgeois சிந்தனை , சமதர்ம எதிர்ப்பு என்று நேரு விளக்கியதை வசதியாக மறைத்து ஆட்டம் போடுகின்றனர்.
உண்மையில் காந்தியம் , நாஜிகளுக்கு எதிரான போரில் வெற்றி தந்திருக்குமா?