24-FREEDOM OF JUDICIARY?..FREEDOM OF PARLIAMENT? (RSR)
மக்களாட்சி என்ற தத்துவம் கேட்க நன்றாகத்தான் உள்ளது. ..
ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை , 'ஜனநாயக' பிரியர்கள் மறந்துவிடக்கூடாது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. நேர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால், இவ்வாறு நடக்கும் தேர்தல்களில், வேட்பாளர்களின் தகுதி என்ன?
மாநில சட்ட மன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்கள், எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை நமது மக்கள் காணவில்லையா?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் கோடீஸ்வரர்கள், ..
செல்வந்தர்கள் , உழைத்து உண்ணும் எளிய மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள் என்று கூற வரவில்லை.
ஆனால், அது அதிசயமாக நடக்கும், எப்போதுமல்ல.
மேலும், இந்தத் திடீர்ப் பணக்காரர்கள் , மக்களுக்குச் சேவை செய்வதற்காக , தேர்தலில் போட்டியிட்டு , மன்ற உறுப்பினர் ஆகின்றனரா?
புகழுக்காக ஆவது கூட மிகவும் குறைவு. .
உண்மையில், இன்று மக்களாட்சி என்பது, பெரும் பணக்காரர்கள், அவர்களுக்காக நடத்திக்கொள்ளும் ஆட்சி.
மிகப் பெரும் கோடீஸ்வரர்கள், நேரடியாக பங்கெடுக்காமல், தங்களது ஏஜெண்டுகளை அரசில் அமர்த்துகின்றனர். இதன் பெயர் பூர்ஷ்வா ஜனநாயகம். .
--------------------
இரண்டாவது குறைபாடு அதைவிட தீவிரமானது.
மக்களிடையே பிரபலமாகி தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், சமூக நலனில் அக்கறையும், நல்லது செய்யத் தேவையான அறிவும், சுயநலமின்மையும், திறமையும் கொண்டவர்களாக உள்ளனரா?
அது அந்தக் காலம். !
அதெல்லாம் 'பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் ' போனது இன்றைய நிதர்சனம்.
ஏன்? ஏனென்றால், நமது தேர்தல் முறை மிகவும் தவறானது.
முதலில், தேர்தலில் வேட்பாளர்கள் என்ற முறை ஒழிய வேண்டும்.
கட்சிகள் மட்டுமே கொள்கை அடிப்படையில் போட்டியிட வேண்டும்.
அப்போது, ஜாதி, பணம், கையூட்டு போன்ற தீமைகள் தலையிடமுடியாது.
ஒவ்வொரு கட்சியும் தனித்துத் தான் போட்டியிட வேண்டும். கூட்டணி தடை செய்யப் படவேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த வாக்கு அடிப்படையில், கட்சியின் தலைமை , மக்களவைக்கு ,தனது பிரதிநிதியை அனுப்ப முடியும். ,
எந்த நேரத்திலும், வேறு பிரதிநிதியை அனுப்ப முடியும். அப்போதுதான், துறை நிபுணர்கள், நல்லோர், நியாயவான்கள், அவையை அலங்கரித்து, நல்லது செய்ய முடியும்.
பொருளாதார வேறுபாடு மிகுந்த சமூகத்தில் ஜனநாயகம், பணநாயகமாகத்தான் விளங்கும். .
.சட்டமன்றம், நீதிமன்றம், பத்திரிகைகள், இவை யாவும்
இன்று நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ , பணம்படைத்தவர்களுக்கு மட்டுமே பயன்படும் அமைப்புகள் ஆகிவிட்டன.
கண்கூடான உண்மை. !.
.அடிப்படை உரிமைகள், மற்றும் DIRECTIVE PRINCIPLES OF CONSTITUTION என்று , நமது குடியரசின் அரசியல் சாசனம் வகுத்தளித்த மேன்மக்கள், இன்று இல்லை.
.சமூக விரோதிகளுக்காக தவறாது 'திறமையுடன்' வாதிடும் 'வழக்கு 'அறிஞர்' , நீதித்துறையின் சுதந்திரம் பற்றி எக்காளமிடுகிறது. !..
நாடாளுமன்றம், நீதித்த்துறை, பத்திரிகைகள் பற்றியெல்லாம், மக்களுக்கு நம்பிக்கை மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
லஞ்சம், எப்போதும் இருக்கும், என்று மக்கள் நிராசை அடைந்துள்ளனர். ..
விடிவு காலம் தோன்றுவதற்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
எனவே , உழைக்கும் மக்கள் , இந்த நாற்றமெடுக்கும் சமூகத்தை மாற்றியமைக்க , வேறு வழிகளைத் தேடி நேரடி அரசியலில் இறங்க வேண்டும்.
வேறு வழியில்லை.