4-7-2015 அன்று , மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி வெளியிட்ட தேசிய , மாநில பொருளாதார நிலை பற்றிய அறிக்கையிலிருந்து...
1) தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடி குடும்பங்கள் உள்ளன.
2) 56 லக்ஷம் குடும்பங்களுக்கு சொந்த நிலம் ஏதும் கிடையாது.
இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் , கூலி வேலை செய்தே ஜீவனம் நடத்தி வருகிறார்கள். .
.நிலமற்ற தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் 77%.
3) தேசிய அளவில், பாசன வசதி உறுதிப்படுத்தப்பட்ட நில உடமையாளர்கள் 25%.
ஆனால், தமிழ்நாட்டில் இது 12% மட்டுமே.
4) தேசிய அளவில், பாசன வசதி உறுதிப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நில உடைமையாளர்களின் சதவீதம் 17%. ஆனால், தமிழ்நாட்டில் இது 5% மட்டுமே!
5) 78% குடும்பங்களின் சம்பாதிக்கும் உறுப்பினர்களின் மாதச் சம்பளம் 5000 ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் இடையிலானது.
6% குடும்பங்கள் பத்தாயிரம் ரூபாய்க்குமேல் மாத வருமானம் கொண்டுள்ளனர். ....