நான்கு தலைமுறையாக , உன்னதமான தலைவர்களையும் த்யாகிகளையும் அளித்த குடும்பம். ( மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி). நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற தங்களது உயிரையும் ஈந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி. .. ஒரு பக்கம் 'நமஸ்தே sadhaa vathsalae மாத்ருபூமி' என்று தினமும் பிரார்த்தனை செய்துகொண்டு, அப்பட்டமான நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் கீழ்த்தர சதிகாரர்களுடன் குலாவும் அற்பத்தனம் ! சுதந்திர பங்களாதேஷ் அமைத்துக் கொடுத்தது இந்திரா காந்தி. இன்று முஜிபுர் ரஹ்மான் அவர்களின் புதல்வி ஆண்டுவரும் பங்களாதேஷில், கேட்டுப் பாருங்கள், இந்திராகாந்தி அங்கு அவர்களுக்கு ஒரு தேவதை போன்றவர். ..பற்றி எரிந்த பஞ்சாபில், சாந்த் லோங்கோவால் -ராஜீவ் காந்தி ஒப்பந்தம் , இன்றைய பஞ்சாபின் செழிப்பிற்கு அடித்தளம் இட்டது. ..வட கிழக்கு மாநிலங்களில், நடந்த பல பிரிட்டிஷ் அரசு- சதியினால் தொடர்ந்து வந்த வன்முறை இயக்கங்கள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டவர் ராஜீவ் காந்தி. .அன்று அவர் முன்வைத்த தீர்வினை , இலங்கைத் தமிழர்கள் ஏற்றிருந்தால், 25 ஆண்டுகால துயரம் நடந்திருக்குமா?
=========================================
THINDU MUNDANGAL CHINTHIKKAVUM!