'வெள்ளையனே வெளியேறு' ( 1942) இயக்கம் நடந்தபோது, பிரிட்டிஷ் அரசாங்கம், காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இந்த இயக்கம் , பிரிட்டிஷ் நலன்களுக்கு கெடுதல் செய்யும் என்று அதன் காரணம். ..உலகப் போர் முடிந்த பிறகு, தடை நீக்கப் படாவிடினும், ஒரு சில காங்கிரஸ் பிரமுகர்கள், சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டார்கள். இவ்வாறு விடுவிக்கப்பட்ட முத்துரங்க முதலியார், பக்தவத்சலம் போன்ற காங்கிரசார் , காங்கிரஸ் சங்கம் என்ற பெயரில், கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
அரியலூரில், எஸ்.கே.பாட்டில், தலைமையில், இயக்கத்தின் முதற்பெரும் செயல்திட்டங்களை வகுக்க , ஒரு மாநாடு கூடியது. அந்த மாநாட்டில், நமது தாயநாட்டின் இக்கட்டான வரலாற்று காலத்தில், 'வெள்ளையனே வெளியேறு' புரட்சி இயக்கத்தில் பங்கெடுக்காத நபர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது . .
.தீர்மானம் 670 உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டு நிறைவேறியது. எதிர்த்து வாக்களைத்தவர்கள் வெறும் 4 பேர் மட்டுமே!