SILLY ARTICLES ON GANDHIJI... BY PERIYARISTS, PSEUDO NAXALS AND ILLITERATE DO-GOODERS....thindu
---------------------------------------
A REBUTTAL TO CHAMAS HERE.
-----------------------------------------
Claims that Gandhiji did not hate any individual but only the system....What is so special here? Bolshevism aims at capturing power for the cause of proletarians.. It was not the Bolsheviks who started the civil war but the possessing classes.
Should we then meekly surrender and seek a place in heaven?
Even JESUITS would scoff at it.
In Latin America, it is the Church fathers who are fighting injustice and imperialism not through sermons but with guns!
=======================================================
'PHILISTINES! AND CHARLATANS ' is the word used by LENIN to describe pseudo-Tolstoyans!
பொதுவுடமைப் புரட்சியாளர்களுக்கு, இது ஒன்றும் புதிய விஷயமில்லை. மார்க்சியர்கள் வெறுப்பது , தனிப்பட்ட அளவில் முதலாளிகளை அல்ல. ஆனால், முதலாளித்துவம் என்ற அமைப்பையும் , கடந்த நூற்றாண்டுகளாக அதைத் தாங்கிப்பிடிக்கும் உள்நாட்டின், மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய ஆயுத அடக்குமுறையும் . ஒரு சிறிய கிராமத்தில், நடக்கும் நிலமில்லாத தலித் குடும்பத்திற்கு இழைக்கப்படும் அவமானம், கொடுமை முதல், சர்வதேச அளவில், கோடி கோடி மக்கள் அகதிகளாக அனைத்தும் இழந்து தவிக்கும் கொடுமைகள் வரை அனைத்துமே , பொருளாதார அடிப்படைக்காரணங்கள் கொண்டவை. வர்க்க அடிப்படை கொண்டவை. வர்கப் பார்வை இல்லாமல், இந்த நிகழ்வுகளையும், அவற்றின் பின்னணியையும் புரிந்து கொள்ள முடியாது. வர்கப் பார்வைக்கு அப்பாற்பட்ட' மனித நேயத்தையும்', 'அஹிம்சைத்' தத்துவத்தையும், புரட்சியாளர்கள் ஏற்கமுடியாது...இது வஞ்சம் தீர்ப்பதற்கான வன்முறை அல்ல. ..சமூக அமைப்பை மாற்றி அமைக்க முயற்சி,. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, சட்டங்கள் இயற்றி, பொதுவுடைமை சமூகம் அமையவேண்டும் என்றுதான் புரட்சியாளர்கள் விரும்புகிறார்கள். .வன்முறையை முதலில் ஏவுவது, முதலாளிகளின் அரசு
---------------------------------------------------------------------------------------
பொருளாதார சமத்துவமின்மையும் , தனிச் சொத்துரிமையும் கொண்ட ஒரு சமூகத்தில், உண்மையான உழைக்கும் மக்களின் மக்களாட்சி இருக்க முடியுமா?
இருக்கிறதா?
'தனிச் சொத்துரிமை தவறுதான் ! ஆனால் , செல்வந்தர்களாக மனம் மாறி , தர்மகர்த்தாவாக வேண்டும்' ..'சட்டமியற்றி அவர்களின் சமூக நிலையை மாற்றுவது...ஜனநாயக முறையாக இருந்தாலும் கூட , தவறானது. ' இதுதான் காந்தியத்தின் சாரம்!
ஏற்கமுடியுமா?
நேரு தனது சுயசரிதையில் இந்தச் சிந்தனையை வெறுத்து ஒதுக்குகிறார். .
தோழர் ஸ்டாலின் , கிருஸ்தவ மதப்போதனைப் பள்ளியில், இளம்வயதில் கற்றவர். விவிலியத்தை நன்கு அறிந்தவர். அவர் விவிலியத்தின் உழைக்கும் மக்கள் சார்பினை நன்கு உள்வாங்கியிருந்தார். ஆனால் ,
'அந்தச் செய்தி, நடைமுறைக்கு ஒவ்வாதது. ஒரு கன்னத்தில் அறைபவனக்கு இன்னொரு கன்னத்தையும் காண்பி என்பதெல்லாம், அநியாயங்களுக்குத் துணை போவது போலத்தான் .'என்றார்..
முதலாளித்துவ தேர்தல் முறையில் , ஏழை மக்களும், பொதுவுடைமை வாதிகளும், நேர்மையாளர்களும், வெற்றி பெற முடியுமா? அப்படியே பெரும்பான்மை பெற்றாலும், அரசியல் சட்டத்தை 'தனி சொத்துரிமை , அடிப்படை உரிமை இல்லை' என்று இந்திரா காந்தி நிறைவேற்றியது போல செய்ய முடியுமா?
சர்வதேச முதலாளித்துவ நாடுகள் , உடனே மனித சுதந்திரம், ஜனநாயகம் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு , பொதுவுடைமை அரசைக் கவிழ்க்க மாட்டார்களா?
மார்கியத்தின் அடிப்படையே விவிலியம் என்கிறார். பாரதி.
..அரசியல் அதிகாரம் கிட்டாமல், உடமை வர்க்கத்தை ஒழிப்பது எப்படி?
பணநாயக தேர்தல் மூலம்தான் என்று கூறினால், போகாத ஊருக்கு வழி சொல்வதுதான்.
இன்றளவும், உயிர்ப்புடன் விளங்கும், ஜைனத் துறவிகளின் கொல்லாமைத் தத்துவம் காந்தியம். அதன் பின்னர் விவிலியத்தின் மலைப் பிரசங்கம்.
..விவிலியமே கூறுவது போல , அது ஒரு வாழ்க்கை மறுப்புத் தத்துவம். வேண்டாம் என்பதல்ல. ஆனால், it is not pre-communist-anarchist stage but post-communist-anarchist stage.
முதலில், அகில உலகத்திலும், சொத்துரிமை எனும் நச்சரவம் கொல்லப்படவேண்டும். பிறகு ஏற்படும், சமூகத்தில், ஒவ்வொரு மனிதனும், தானாகவே தனது இயற்கையை உணர்வான்.
..வண்டியைக் குதிரைக்கு முன்னால் பூட்டிவிட்டு, இப்படித்தான் என்பது, துறவிகள், சித்தர்களின் வாழ்க்கையோடு முடிந்துவிடும். ..
கவனிக்கவும். இது வன்முறைக்கு வக்காலத்து அல்ல. கிட்டத்தட்ட 100% நேருவின் சிந்தனை. !