Dr.KALAAM
:நண்பர்களே, சமீபத்தில் ஒரு செய்தியை படித்தேன். உத்திர பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். அதாவது ஒருவர் வெளிநாட்டில் இருந்து தனது கிராமத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து வருகிறார். வந்த உடன் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சென்று மனு கொடுத்தார். என்ன வென்று தெரியுமா, அதாவது சிறுவயதில் தான் குளித்து, நீந்தி விளையாடிய கிராம ஊரணியை காணவில்லை என்று, புகார் பண்ணியிருக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவருக்கோ மிக்க அதிர்ச்சி, அவர் உடனடியாக அந்த கிராமத்தை பார்வையிட வந்து பார்த்தால், ஆமாம் அவருக்கும் அதிர்ச்சி அங்கு அரசு பதிவேட்டில் இருக்கின்ற ஊரணியை காணவில்லை தான். ஆமாம், அங்கு மிகப்பெரிய சாப்பிங் காம்லக்ஸ் அனுமதியில்லாமல் எழும்பியிருக்கிறது. அந்த ஊரணிக்கு வரவேண்டிய கால்வாய்கள், அதிலிருந்து போகும், போக்கு கால்வாய்களெல்லாம் மூடப்பட்டு, ஊர் எங்கும் சாக்கடைக்கழிவுகள் கலக்கப்பட்டு, சுகாதரம் அற்று இருக்கிறது ஊர். உடனே அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஆக்கிரமிப்பை அகற்றி ஊரணியை சீர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம், நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை. உண்மை சுடும். இது போல் நம் நாட்டில், தமிழ்நாட்டில் எத்தனை ஊரணிகள் காணமல் போய்விட்டனவோ தெரியவில்லை. அதை கண்டுபிடித்து தூர்வார அரசுக்கு பத்திரிக்கைகள் உதவவேண்டும்.
-------------------------------------------------------------------------------------