நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சியஞ்சிச் சாவார் -- இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே!
வஞ்சனைப் பேய்கள் என்பார் -- இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்,
துஞ்சுது முகட்டில் என்பார் -- மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்
----------------------------------------------------
நெஞ்சு பொறுக்கு திலையே -- இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் -- அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே -- நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே -- இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. !
'நெஞ்சு பொறுக்குதில்லையே ! நெஞ்சு பொறுக்குதில்லையே! "
1952...பராசக்தி .....கவியரசன் பாரதி கவிதை . ..சிதம்பரம் ஜெயராமனின் உணர்ச்சிவசப்பட்ட பாடல். கலைஞரின் கனல் தெறிக்கும் சமூக விமர்சனம்.
---------------------------------------------------------------------------
நெஞ்சு பொறுக்குதில்லையே ! நெஞ்சு பொறுக்குதில்லையே! " ...இன்று செப்டம்பர் 5 ம் தேதிதானே! ...
...ஆசிரியர் தினம் என்ற பெயரில் , ராதாக்ருஷ்ணன் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.!..ஆனால், ராதாக்ருஷ்ணன் , இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்த பங்கு , பூஜ்யம்
இதே செப்டம்பர் 5ம் தேதியில்தான், இணையில்லா தேசபக்தர் , இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு , செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளையும் பிறந்தார். ஏதேனும் தமிழ் தினசரியில், அவரது தியாக வாழ்வு நினைவு கூறப் படுகிறதா ?. .ஒன்றும் காணவில்லை. 1905- 1917ம் ஆண்டுகளின் பிரிட்டிஷ் அரசின் அரக்கத்தனமான கொடுங்கோன்மை ஆட்சிக் காலத்தில், திலகர், வங்கப் புரட்சியாளர்கள், போன்று வ.உ.சி. மற்றும் அவரது தோழர்கள், பாரதி, சுப்பிரமணிய சிவா போன்றோர் அனுபவித்த துன்பங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ...ஆனால், இன்றைய தினசரிகளில், சினிமா, வெட்டி 'இலக்கியம்', 'தமிழ்ப் பற்று' .....பத்திபத்தியாய்! சிதம்பரம் பிள்ளையும் தமிழ் அறிஞர் தான்.! ..இன்றைய அரை வேக்காட்டுப் பதர்களை விட, ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்டவர்.! பல தமிழ் நூல்கள் எழுதி வெளியிட்டவர். .அன்றைய காலத்தில், தமிழ்நாட்டின் உண்மையான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களின் இதய தெய்வம். !
சிறையில் இருந்து வெளிவந்தபோது, அவரை வரவேற்றவர்கள், ஐந்து பேர் கூட இல்லை! ..
கவியரசன் பாரதி இறந்தபோது, சடங்கில் பங்கேற்றவர்கள் பத்தே பேர்கள்தான். ..
வீரத் துறவி சுப்பிரமணிய சிவா சிறைக்கொடுமையால், தொழுநோய் கண்டு துவண்டபோது, கவனிப்பார் யாரும் இல்லை. .!...
இதுவும் ஒரு சமூகம்.! இதுவும் ஒரு நாடு!
(RSR)
-----------------------------------------------------------------------------------