43- தூண்டில் புழுவினைப் போல் -- பாரதி பாடல் thoondil puzhuvinaippol

from

( வேதாள உலகம் )FILM

MP3 contributed by Sri.D.P.RANGAN

21-8-2019

uploaded to gdrive as mp3

-----------------------------------------------

https://drive.google.com/file/d/1yLvkP6aLmW8HRqlqOgHDH-YLZKDQ2-KN/view?usp=sharing

( வேதாள உலகம் )

If there is any problem in playing the mp3,

copy and paste the following URL in your browser. It may connect and play.

https://drive.google.com/file/d/1yLvkP6aLmW8HRqlqOgHDH-YLZKDQ2-KN/view?usp=sharing

**************************************************

தூண்டிற் புழுவினைப்போல் ---

வெளியே சுடர்விளக்கினைப் போல் ,

நீண்ட பொழுதாக-- எனது நெஞ்சந்துடித்ததடீ!

கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை

கொண்டு மிகவும் நொந்தேன் ;

வேண்டும் பொருளையெல்லாம்--

மனது வெறுத்து விட்டதடீ!

பாயின்மிசை நானும் --தனியே படுத்திருக்கையிலே, தாயினைக்கண்டாலும்,--சகியே! சலிப்பு வந்ததடீ!

வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே! வளர்த்துப் பேசிடுவீர்; நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!

நுங்களுறவையெல்லாம் . உணவு செல்லவில்லை ;--சகியே!

உறக்கங் கொள்ளவில்லை.

மணம் விரும்பவில்லை;--சகியே! மலர் பிடிக்கவில்லை;

குணமுறுதி யில்லை ;--எதிலும் குழப்பம் வந்ததடீ !

கணமும் உள்ளத்திலே --சுகமே காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!--சகியே! படுக்கை நொந்ததடீ!

கோலக்கிளி மொழியும் --செவியில் குத்தலெடுத்ததடீ !

நாலு வயித்தியரும் --இனிமேல் நம்புதற்கில்லைஎன்றார்;

பாலத்துச் சோசியனும் --கிரகம் படுத்துமென்றுவிட்டான்

கனவு கண்டதிலே-- ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்,

இனம் விளங்கவில்லை --எவனோ என்னகந் தொட்டுவிட்டான் .

வினவக் கண் விழித்தேன் ;--

சகியே! மேனி மறைந்து விட்டான்;

மனதில் மட்டிலுமே --புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ !

உச்சி குளிர்ந்ததடீ;--சகியே! உடம்பு நேராச்சு ;

மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்

மனத்துக் கொத்ததடீ! இச்சை பிறந்ததடீ!--

எதிலும் இன்பம் விளைந்ததடீ! அச்சமொழிந்ததடீ!--சகியே! அழகு வந்ததடீ ! எண்ணும் பொழுதிலெல்லாம் --அவன்கை இட்ட விடத்தினிலே தண்ணென்றிருந்ததடீ !--புதிதோர் சாந்தி பிறந்ததடீ!

எண்ணி எண்ணிப் பார்த்தேன் ;--அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்; கண்ணன் திருவுருவம் --அங்கனே கண்ணின் முன் நின்றதடீ

========================================================