39- வேலன் வருவாரடி- * VELAN VARUVAARADI

(JUST DRAFT.YET TO BE COMPLETED) ( 4-10-2017)

---------------------------------------------------------------------------------

audio link from soundcloud

https://soundcloud.com/archive-of-indian-music/dk-pattammal-velan-varuvaradi

youtube as on 17-8-2019

======================

(thanks to Dr.Pasupathy for the lyrics)

( thanks to Dr.Pasupathy and Sri.SrinathK for Ragam information)

வேலன் வருவாரடி வேலன் வருவாரடி

வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி!

வள்ளிமேல் மோகம் கொண்டு வேடனான

வடி வேலன் வருவாரடி!

மானோடி வந்ததனால்

நானோடி வந்தேனென்று

வானோங்கும் தினையில்

மன்மதனால் மலைத்த

வேலன் வருவாரடி!

மங்கை மனதறிந்து எங்கும் தொடர்ந்தலைந்து

வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த வடி

வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி!

பண்டாரமாய் சிவனை கொண்டாடியே அமுது

உண்டோடி அமுது

உண்டோடி என்றோடி மன்றாடி நின்றவடி

வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி

வேலன் வருவாரடி!

வேலன் வருவாரடி

தேனும் தினைமாவும் உண்டு தாங்காத விக்கல் கொண்டு

கூனும் நிமிர்ந்து கொண்டு காவி உடுத்தவடி

வேலன் வருவாரடி!

வஞ்சியரின் கைபிடித்து குளக்கரையில்

வஞ்சியரின் கைபிடித்து கெஞ்சிக் கரையேறி

கொஞ்சுமொழி நங்கையுடன்

இன்சொல் புரிந்த

வேலன் வருவாரடி!

அண்ணனருளால் குறப் பெண்ணை மணக்கவென்று

எண்ணித்துதித்த திருக்கண்ணன் கொண்டாடும்

வேலன் வருவாரடி!

யானை மருட்டி தினைக் கானில் விரட்ட

மடமானை மகிழ்ச்சியொடு மார்போடணைத்த வடி வேலன் வருவாரடி!

நம்பியவர் துதிக்க நாரதர் ஆனந்திக்க

தம்பிக்குகந்த மயிலாடப் பணியாற்றும்

வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி

வேலன் வருவாரடி!

-------------------------------------------------------------------------------------------------------------

ஜோன்புரி காம்போதி ஸரஸ்வதி பிலஹரி ஸாவெரி கேதாரகொஉள காபி தன்யாஸி மோஹனம்

jOnpuri (velan varuvAraDi), வேலன் வருவாரடி--ஜோன்புரி

kAmbhOji (mAnODi), மானோடி வந்ததனால்-காம்போதி

sarasvati (mangai manad-arindhu)மங்கை மனதறிந்து-ஸரஸ்வதி

bilahari (panDAramAna sivanai)பண்டாரமாய் சிவனை-பிலஹரி

sAvEri (tEnum tinai mAvum)தேனும் தினைமாவும்-ஸாவெரி

kEdAra gauLa (vanjiyarin kai piDittu)வஞ்சியரின் கைபிடித்து-கேதாரகொஉள

kApi (aNNan aruLAl) அண்ணனருளால்-காபி

dhanyAsi (yAnai mAruti thinai)யானை மருட்டி தினைக் கானில் விரட்ட-தன்யாஸி

mOhanam (nambiyavar tudikka)நம்பியவர் துதிக்க நாரதர் ஆனந்திக்க-மோஹனம்