31-சின்னஞ்சிறு கிளியே ! CHINNANCHIRU kiLiye

If there is any difficulty in playing the mp4, look for popup arraow at right-corner and click.

Then click on download.

After some time, it will connect to VLC

You can listen or download and listen.

==========================================

கமாஸ்

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே! (

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்!

காபி

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!

பேசும் பொற்சித்திரமே!

அள்ளி யணைத்திடவே-என்முன்னே

ஆடிவருந் தேனே

சிம்மேந்திரமத்யமம்

ஓடி வருகையிலே- கண்ணம்மா!

உள்ளம் குளிருதடீ;

ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்

ஆவி தவிழுதடி

அடாணா

உச்சிதனை முகந்தால் - கருவம்

ஓங்கி வளருதடி

மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ.

ஹுசேனி

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்

உதிரங் கொட்டுதடி;

என் கண்ணில் பாவையன்றோ? - கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ!

Grateful acknowledgement

( ragam information by Dr.Pasupathy)

uploaded to tube on 30-august-2017

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா! பேசும் பொற்சித்திரமே!

அள்ளியணைத்திடவே-என்முன்னே ஆடிவரும் தேனே

ஓடி வருகையிலே- கண்ணம்மா! உள்ளம் குளிருதடீ;

ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடி

மெச்சியுனை யூரார்- புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் உதிரங் கொட்டுதடி;

என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ!

================================================================