N.C.VASANTHAKOKILAM VINTAGE CLASSICS OF 1940-1952 ERA
பழம்பெரும் பாடகி என். சி. வசந்தகோகிலம்
(1919 - 7 நவம்பர் 1951) அவர்கள் 1948 சனவரியில் காந்தியடிகள் இறந்து ஒரு சில நாட்களில் அவருக்கு நினைவஞ்சலியாகப் பாடியது.
பாடியவர்: என். சி. வசந்தகோகிலம்
பாடல் வரிகள்:
தந்தை தாய் காட்டிடாத
தனிப்பெரும் கருணை தாங்கி வந்தனை
தியாகத்தீயில் வெந்தனை
அகிம்சையாலே இந்திய நாட்டினிற்கு
சுதந்திரம் ஈந்த காந்தி
எந்தமைப் பிரிந்த செய்தி எப்படி நம்புவோமே
சத்தியம் உள்ளமட்டும்
தருமமே வெல்லுமட்டும்
உத்தமர் பொறுமையாலே
உயிர் நலம் உயரும் மட்டும்
வித்தக பரத நாட்டின்
புண்ணியம் விளங்கும் மட்டும்
இத்தலம் உள்ளமட்டும்
எவருன்னை மறப்பார் ஐயா
காந்தி மகாத்மா
எவருன்னை மறப்பார் ஐயா!