00-LIFE SKETCH IN TAMIL

Published on Aug 16, 2015

tamil notes by vembar manivannan

என் சி வசந்தகோகிலம்:

******************************

என் சி வசந்தகோகிலம் அவர்கள் 1919-ம் ஆண்டு கேரளாவில் கொச்சிக்கருகிலுள்ள இரிஞ்சாலக்குடா எனும் ஊரில் பிறந்தவர்...இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் காமாட்சி... சிறுவயதில் இவர் குடும்பம் தமிழ்நாட்டில் நாகப்பட்டனத்திற்கு குடிபெயர்ந்தது.. அங்கே கோபால ஐயர் என்பவரிடம் முறைப்படி சங்கீதம் பயின்றார்... காமாட்சிக்கு அருமையான குரல்வளம்... சிறுவயதிலேயே அவரின் கச்சேரிகளுக்கு ரசிகர்கள் திரண்டார்கள்...அவரின் வசந்தகால குயிலைப்போன்ற இனிய குரலுக்காகவே அவர் வசந்தகோகிலம் என அழகிய பெயரில் அழைக்கப்பட்டார்... என் சி வசந்தகோகிலம்--நாகப்பட்டினம் சந்திரசேகர வசந்தகோகிலம் என்பது முழுப்பெயர்.

1936-ல் அவரது 17ஆவது வயதில் குடும்பம் சென்னைக்குக் குடிவந்தது . பல கச்சேரிகள் செய்தும் இசைத்தட்டுகளில் பாடியும் மிகப்பெரும் புகழ் பெற்றார் வசந்தகோகிலம்...ஆனாலும் இசை வாழ்க்கையை விரும்பாத இவரது கணவரால் மணவாழ்க்கை தோல்வியில் முடிந்தது ...

தேன்குரலும்... தெள்ளிய ரூபமும் கொண்ட என் சி வசந்தகோகிலம் 1940-ல் "சந்திரகுப்த சாணக்கியா" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்... தொடர்ந்து அதே ஆண்டில் "வேணுகானம்" படத்தில் வி.வி.சடகோபனுடன் இணைந்து நடித்தார்.. 1942-ல் சி கே சதாசிவம் இயக்கிய "கங்காவதார்" படத்தில் பூமிக்கு வந்த கங்கையாக நடித்தார்.. சி கே சதாசிவம் அவர்களை மறுமணம் முடித்துக்கொண்டார்.. தொடர்ந்து 1944-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்", 1946-ல் ஹொன்னப்ப பாகவதர் நடித்த "வால்மீகி", "குண்டலகேசி" ஆகிய படங்களில் நடித்தார்.

இசை உலகிலும், தமிழ்த்திரை உலகிலும் புகழேணியில் ஏறிவந்த என் சி வசந்தகோகிலம் யாரும்எதிர்பாராதவண்ணம் 1951 நவம்பர் 8-ம தேதி சென்னையில் கோபாலபுரத்திலிருந்த அவரது வீட்டில் தனது 32-வது வயதில் மரணமடைந்தார்... தமிழ் திரை உலகிற்கும், இசைவுலகிற்கும் இதைவிட மிகப்பெரிய இழப்பு வேறெதுவும் இருக்க முடியாது...

1950-ல் வெளிவந்த "கிருஷ்ண விஜயம்" திரைப்படமே இவரது கடைசிப்படமாக அமைந்துவிட்டது... இதில் அவர் நாரதராக நடித்து தேவகானம் பாடியிருந்தார்.. தமிழிசை உள்ளவரை என் சி வசந்தகோகிலம் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்...