23-ஆயர் மனையிலே மாயன் வளர்ந்து-'aayar maNaiyile maayan vaLarnthu'.KRISHNA VIJAYAM

LYRICS BY PAPANAASAM SIVAN

N.C.Vsanthakokilam -ragamalika- 1950-Krushnavijayam. 'aayar maNaiyil maayan vaLarnthu'.

https://sites.google.com/site/4mp3files ... aniyil.mp3

The lyrics in tamiZh given with ragam information at

https://sites.google.com/site/4techstri ... ncv-dkp-ms

----------------------------

1) கரஹப்ரியா

ஆயர் மனையிலே மாயன் வளர்ந்து

விளையாடும் விந்தை என் சொல்வேன்!

பெற்ற தாயினும் ,அந்த யசோதை பரிந்து அமுது ஊட்டிச் சீராட்டித் தாலாட்ட பாலகிருஷ்ணன் -

கம்சன் முதல் -உலகிற்கு இம்சை செய் கொடியவரைக்

கருவறுக்கத் தக்க தருணம் பார்த்துக் கொண்டு

---------------------------

2) கேதாரகௌள

கனவிலும் கண்ணன் நினைவால் கலங்கினான் கம்சன்

கருமுகிலைக் கமல மலரைக்

கன இருளைக்

கண்ணாடியைக் காணும் தோறும்

அஞ்சி நடுங்கினான் --

சபை தனில் ஒருநாள்

---------------------------

3 அடாணா

"எனது வைரி கிட்டன் என்ற பெயருடன்

எங்கோ மறைந்து வளர்கிறானாம்

இருளினும் கரு நிறத்திருடன் ,அவனைக்

கொன்று வந்தாலும்- உயிருடன்

கொண்டு வந்தாலும் -அவரைக்

கொண்டாடுவேன் --அன்றே

திருவிழாக் கொண்டாடுவேன் " என்றான்.

-----------------------------

4) ஹரிகாம்போதி

கும்பலில் நீ முந்தி நான் முந்தி என்று பல

குரலுடன் ஆர்த்தெழுந்தார் கொடும் அசுரர்

கோர சகடாசுரன் ,குருவி பகாசுரன்

வத்சன் வ்ருஷபாசுரன்

தேனுகன், அரிஷ்டன், கேசி,ப்ரலம்பன்

காளியனுடன் -பூதனை

-------------------------------

5) செஞ்சுருட்டி

மெல்ல மெல்ல நந்தகோபன்

அரண்மனைக்குள்ளே புகுந்து

மலர்க கண்ணனைக் கண்டாள்

-------------------------------

6) பெஹாக்

நஞ்சளைந்த பெருந்தனத்தாள் -யது

நாயகனைக் கொல்லும் மனத்தாள்

வஞ்சனையால் கையில் எடுத்தாள் -

மணி வண்ணன் வாய்திறந்து நகைத்தான்

பாலகிருஷ்ணன் பூதனைப் பேயின்

முலைப் பாலுடன் , அவள் ஆவியைக் குடித்தான்

-------------------------------------------------

7) ஸ்ரீரஞ்சனி

கட்டின உரலை இழுத்துக் கொண்டு கண்ணன்

இரண்டு மருத மர நடுவில் தவழ்ந்தான்

வெட்டி முறித்ததுபோல் மரமிரண்டும்

வேருடன் விழ- யமனஅர்ஜுனர் பணிந்தார்

காலில் சதங்கை கொஞ்ச -முடியில் மயில்

பீலியும் ஒளி வீசத் - திருமேனி

முழுதும் புழுதியளைந்தோடி ,யசோதையின்

மேலே சாய்ந்த பாலகோபாலநன் தனை

அண்ணன் பலராமன் --"அம்மா ! இவன்

மண்ணை வாரியுண்டான் "-என்றான்.

கண்ணன் அஞ்சுவான் போல் நகர்ந்தான்

அன்னை சினந்து -'உன் வாய் திற " என்றாள்

---------------------------------

8) கதன குதூகலம்

மாதவன் பவள வாய் திறந்தான்

மாதா அதைக்கண்டு - கண்கள் மருண்டாள்

அண்ட சராசரங்கள் அங்கு கண்டாள்

----------------------------------------------------

This is a very rare record by N.C.Vasanthakokilam, in the film Krushnavijayam, 1950. Sadly, she passed away in 1951 due to illness. She was just 31 then. This was the last of her six films in the decade 1940-1950. Most of her film songs were in chaste carnatic ragams. The lyrics and music for the song were by Papanasam Sivan. NCV acted as Naradhar in this film. and sang two great ragamalikas. Randor Guy is all praise for her music in this film.

The song is 'Ayar maNaiyil mAyan vaLarnthu' . (karaharapriya, kedaaragowLa, ataaNaa,harikambodhi,chenchurutti, behag, sriranjani and kathanakuthookalam ).

https://sites.google.com/site/4mp3files ... aniyil.mp3

http://youtube.com/watch?v=HQFudOhg67w

==========================

Ayar maNaiyile

mAyan vaLarnthu viLaiyAdum vindaien solven!

petra thaayinum antha yasodhai ,parinthu seeraatti ,thaalaatta balakrushnan kamsan muthal ulakirku imsai sey kodiyavarai karuvarukka thakka tharuNam paartthukkondu

------------------

kanavilum kaNNan Ninaivaal kalanginaan kamsan.

gana iruLaik kaNNAdiyaik kaaNum thorum, anji nadunginaan. -sabaithanil oru NaaL

----------------------

"enathu vairi kittan endra peyarudan engo marainthu vaLarkindraanaam

iruLinum kaRu niRatthirudan

avanaik kondru vanthaalum -uyirudan kondu vanthaalum avaraik koNdaaduvaen "endraan.

---------------------

kumbalil Nee munthi-Naan munthi endru pala kuraludan aartthezhunthaar kodum asurar.

gora sakadaasuran, kuruvi bagaasuran vathsan,vrushabaasuran, denukan, arishtan, kesi, pralamban kaaliyaNudan boothaNai

--------------

mella mella nandagopan aranmaNaikkul pukunthu

malark kaNNanai kandAL

-----------------

Nanjalaintha perunthanatthaaL,

yadhu naayakanaik kollum manatthaaL

vanjanaiyaal kaiyil edutthaaL

maNivaNNan vaaythiranthu nakaitthaan

baalakrishnan boothaNaip peyin mulaip paaludan, avaL aaviyaik kuditthaan.

------------------

kattina uralai izhutthuk kondu

kaNNan iraNdu marutha mara naduvil thavazhnthaan.

vetti muRitthathupol

maram iraNdum verudan veezha

yaman-arjunar

paNinthaar.

kaalil sathangai konja -

mudiyil mayil peeliyum oLi veesa -thirumeni muzhuthum puzhuthialainthodi

yasodhayin mele saayntha baalagopaalanthanai

aNNan balaraanan "ammaa! ivan maNNai vaari uNdaan ' endraan.

kaNNan anjuvaan pola

nakarnthaan

annai cinanthu "un vaay thiRa" endraaL.

-----------

maadhavan pavaLa vaay thiranthaan.

maathaa athaik kandu kaNkal maruNdaaL.

-

AnDa charaacharangaL angu kaNdaaL!