22-*- வாசுதேவன் அவதரித்தான் -film- க்ருஷ்ண விஜயம்

https://www.youtube.com/watch?v=w7N0iU8n8Kc

UPLOAD BY VEMBAR MANIVANNAN

THERE IS VIDEO CLIP FOR THE SONG FROM THE FILM

DO NOT MISS

NCV song in Krishna vijayam

ragam mohanam

(thamizh lyrics .. thanks to Prof.Rajagopalan -PonBairavi)

வாசுதேவன் அவதரித்தான்

மணி வண்ணன் கண்ணன்

தேவகி மைந்தனாய்

வானவர் மலர் மழை பொழிய

தேவகி வசுதேவர் தம் துயர் ஒழிய

அருவிபோல் ஆனந்த கண்ணீர் வடிய

நள்ளிரவு வேளையிலே ,சிறைச்சாலை யிலே

நான்கு கைகளுடனே ஜெகன் மொஹனராக

நாராயணன் சனகாதி நால்வரும் காண அரும்

விஸ்வரூப தரிசனம் தந்தருளி

தந்தையே என்னை நந்த கோபன் மனையில்

கொண்டு இக்கணமே சேர்த்தங்கு

பிறந்த குழந்தை யுடன் திரும்ப வாரும் என்றான்.

மாதவ மைந்தனை நந்தகோபன்

அரண்மனையின் உள்ளே யசோதை அருகிலே

மாதவ மைந்தனை இன்ப துன்பம் கலந்த

ஆனந்த கண்ணீர் ததும்பிடவே விடுத்தான்

மாய பெண்ணை அன்புடன் வாரி எடுத்தான்

திரும்ப நடை தொடுத்தான்

இதய ம் உருகும் தேவி கரத்தே கொடுத்தான்.

காலை உதறி ஓர் உதை கொடுத்தாள்

கம்சன் உருண்டு புவியில் படுத்தான்

தேவி கலகல என நகைத்தாள்

நால் இரு (4 x2 )கைகளுடன் காட்சி அளித்தாள்

கம்சா தேவகி மைந்தன் உன்னை கொல்ல}

முன்பே ஊரில் வந்தான்

விதி பொல்லாதடா.