N.C.VASANTHAKOKILAM VINTAGE CLASSICS OF 1940-1952 ERA
https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE
(BY
Jothi Themozhi)
---------------------------------------------------------------------
பாடியவர்: N.C. வசந்தகோகிலம்
பாடல்: தந்தை தாய் இருந்தால்
இயற்றியவர்: பொன்னையாப்பிள்ளை
இராகம்: சண்முகப்ரியா
___________________________________________________
தந்தை தாய் இருந்தால்
உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா..............................
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
அந்தமில் நடம் செய்யும்
அம்பல வாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அருமையுடனே பெற்று
பெருமையுடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால்
உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
கல்லால் ஒருவன் அடிக்க ......
கல்லால் ஒருவன் அடிக்க
உடல் சிலிர்க்க
காலில் செருப்பால்
ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க
உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க
காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை
கோடாலியால் வெட்ட
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன்
பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
வீசி மதுரை மாறன்.....
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....
பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
*********************************************