Welcome to Srikalabairavan Astrology
நிழல் கிரகங்கள் ராகு - கேது ஒன்டரை வருடம் ஒரு ராசியில் இருக்கிறார். பின் அடுத்த ராசியில் பெயர்ச்சியாகிறார். ராகுவை போல கொடுப்பரும் இல்லை கேதுவை போல கெடுப்பாரும் இல்லை. ராகு சுக போகத்திற்கு அதிபதி, கேட்டு மோட்சகாரகன்.
ராகு சுக போகத்தை கொடுப்பார். கேது சுகபோகத்தை கெடுப்பார். இவர்கள் பாதிப்பு உலகையே அச்சுறுத்தும். சூரிய-சந்திரர்களையே இவர்கள் கிரகண பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்கள், அந்த சமயம் தெய்வ சன்னதிகள் கூட மூடிவிடுவார்கள்,
ராகு காலத்தில் எந்த செயலும் செய்ய மாட்டார்கள். அதுபோல எம கண்டத்திலும் எந்த செயலும் செய்ய மாட்டார்கள். சிலருக்கு ராகு காலத்திலும் எம கண்ட காலத்திலும் செய்யும் செயல் வெற்றியடையும். காரணம் அவர்களது நட்சத்திரத்திற்கு ராகு கேது அதிபதியாக இருந்தாலும், ராகு கேது சுபராக இருந்தாலும் பாதிப்பு ஏற்படாது.
சார்வரி வருசத்திய ஆவணி 16 ம் தேதி 01.09.2020 செவ்வாய் கிழமை பகல் 02.10 மிருகசீரிஷம் 2 ம் பாதம் ரிஷபத்திற்கு பெயர்சியாகிறார் சார்வரி வருசத்திய ஆவணி 16 ம் தேதி 01.09.2020 செவ்வாய் கிழமை பகல் 02.10 கேட்டை 4 ம் பாதம் விருச்சியகத்திற்கு பெயர்சியாகிறார்