Welcome to Srikalabairavan Astrology
இது திருமாலின் ஏழாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. புகழ்பெற்ற இதிகாச நூலான இராமாயணம் இராமரை மையப்படுத்தியே எழுதப்பட்டது.இறைவன் இவ்வதாரத்தில் ஏகபத்தினி விரதனாகப் போற்றப்படுகிறார். அடக்கம், பொறுமை, ஆற்றல், அரசாட்சி திறமை, எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல் ஆகியவற்றிற்கு உதாரணமாகக் கொள்ளப்படுகிறார்.
அடுத்தவர் மனைவியின் மீது ஆசைப்படுபவன் இறுதியில் மரணத்தை பரிசாக அனுபவிப்பான் என்பதை இராவண வதம் மூலம் இவ்வதாரம் உணர்த்துகிறது.தந்தையின் சொல்லைக் காப்பாற்ற வேண்டும், தீயசக்திகள் அழிக்கப்படும் ஆகியவற்றை இராமாவதாரத்தின் மூலம் இறைவன் உலகிற்கு உணர்த்தினார்.
இவர் சீதா, வட்சுமணன், அனுமான் ஆகியோருடன் கையில் கோதண்டமாகிய வில்லை ஏந்தி காட்சியளிக்கிறார். ராமேஸ்வரத்திலுள்ள கோதண்ட ராமர் கோவிலில் ராமாவதாரத்தில் இறைவன் அருளுகிறார்.