Welcome to Srikalabairavan Astrology
வரமுனி என்ற முனிவர் தன் தவவலிமையால் தன்னை விட சிறந்த முனிவர்கள் இல்லை என்ற தலைகனத்துடன் எல்லா முனிவர்களையும் ஏளனமாக மதித்தார். ஒருமுறை முனிவர்கள் செய்யும் யாகத்திற்க்கு அருகே எருமை முகத்துடன் சென்று கொடுமை படுத்தினான். முனிவர்கள் இதே போல பிறப்பாய் என சாபமிட்டனர்.
ரம்பன் என்ற அரக்கன் தனக்கு சக்தி வாயந்த குழந்தை வேண்டி அக்னி தேவனை நினைத்து தவமிருந்தான். அக்னி தேவன் வரமழித்தார். வரம்பெற்ற ரம்பன் காட்டில் அழைந்த பெண் எருமையை கண்டான். அதன் மீது ஆசை கொண்டு தானும் ஆண் எருமை வடிவம் கொண்டு அதனுடன் இணைந்தான். அவனுக்கு எருமை தலையும் மனித உடலும் உடைய அரக்க குழந்தை பிறந்தது. அவனுக்கு மகிஷாசூரன் என பெயரிட்டான்.
அவன் வளர்ந்து பெரியவனானதும் பிரம்மனை நோக்கம் கடுமையான தவமிருந்தான். காட்சியளித்த பிரம்ம தேவன் அவன் வரும்பிய வரத்தை கேட்டார். மகிஷாசூரன் தனக்கு மரணமே நிகழக்கூடாது என்று கேட்டான். மறுத்த பிரம்மன் உலகில் பிறந்த எல்லா உயிர்களும் இறப்பது உறுதி வேறு வரம் கேட்குமாறு கூறினார். அதற்கு கன்னிப்பெண்ணால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்றான்.
வரம் கொடுத்தார் பிரம்மன். வரத்தை பெற்று தேவர்களையும், முனிவர்களையும் கொடுமை படுத்தினான் மகிஷாசூரன். இவனது கொடுமைகளை தாங்க முடியாமல் மும்மூர்த்திகளிடம் சென்றார்கள். அவர்கள் மகிஷாசூரனை அழிக்க தங்கள் மனைவியை அழைத்தனர். சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி ஆகிய மூவரும் தங்களது சக்தியை ஒன்றாக்கி துர்க்கை அம்மனை தோற்றுவித்து மகிஷாசூரனை அழிக்க கூறினார்கள்.
பின்னர் எல்லா தேவர்களும் தங்கள் ஆயுதங்களை கொடுத்தனர். ஒன்பது நாட்கள் ஊசி மேல் தவமிருந்தாள். அனைத்து தேவர்களும் அசையாமல் நின்றனர். இதனால்தான் நாம் வீடுகளில் கொலு பொம்மை அடுக்குகிறோம். பத்தாவதுநாள் துர்க்கை அம்மன் ஆக்ரோசமாக போரிட்டு மகிஷாசூரனை அழித்தாள். அன்றைய தினம் விஜயதசமி ஆகும்.
வீடுகளில் கொலு வைக்க வசதிகள் இல்லாதவர்கள் கோவிலிலோ கொலு பொம்மை வைத்து இருப்பவருக்கோ வாங்கி கொடுக்கலாம். கொலு வைத்தவர்கள் உறவினர் மற்றும் தெரிந்த நண்பர்களை வீட்டிற்க்கு அழைத்து பிரசாதம் கொடுக்கலாம். அவர்கள் முகமலர்ச்சியுடன் வாங்கி இறைவனின் அருளை அனைவரும் பெறலாம்.