Welcome to Srikalabairavan Astrology
இது திருமாலின் மூன்றாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம் கிருத யுகத்தில் நடைபெற்றது. வாரகம் என்பதற்கு பன்றி என்று பொருள்.இரண்யாட்சன் என்ற அரக்கன் பிரம்ம தேவரிடம் பெற்ற தவத்தின் வலிமையால் மூன்று உலகையும் ஆட்டிப்படைத்தான். இரண்யாட்சன் பூமியை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான்.
அப்போது பிம்மாதிதேவர்கள் எல்லோரும் இரண்யாட்சனிடமிருந்து தங்களையும், உலகஉயிர்களையும் காப்பாற்றுமாறு திருமாலிடம் வேண்டினர்.இறைவன் வெள்ளைநிறப் பன்றியாக வாரக அவதாரம் செய்தார். இரண்யாட்சனுக்கும் வாரக மூர்த்திக்கும் ஆயிரம் ஆண்டுகள் கடும் போர் நடந்தது.
இறுதியில் வாரகமூர்த்தி இரண்யாட்சனை வெற்றி கொண்டு பூமியை தன் கொம்புகளில் தாங்கி வெளிக்கொணர்ந்து உலக உயிர்களைக் காத்தார்.இவ்வதார மூர்த்தியானவர் பன்றி முகத்துடன் கொம்புகளில் பூமியைத் தாங்கிய வண்ணம் நான்கு கைகளுடன் ஆஜானுபாகுவான உடல்வாகுடன் அருள் புரிகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் உள்ள லட்சுமி வராகப் பெருமாள் கோவிலில் வாரகமூர்த்தி அருள்புரிகிறார். ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வாரக ஷேத்திரமாகப் போற்றப்படுகிறது.