Welcome to Srikalabairavan Astrology
சஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும்.பகலில் பழம் அல்லது பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். மதியம் பச்சரிசி சாதமும் தாளிக்காத துவையல் வைத்து சாப்பிடலாம்.
திருப்புகழ்,கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம் போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம்.மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம்.
இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் பகலில் உபவாசம் இருந்து சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பானகாரம் வீட்டில் வைத்து பூஜை செய்து முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும்.
புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் இதனால் தான் சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும் என்பர். சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பார்கள்.