Welcome to Srikalabairavan Astrology
இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்றால் மீன் ஆகும். கிருத யுகம் நடைபெறும்போது திருமால் மீன் வடிவில் தோன்றி வேதங்களையும், உலக உயிர்களையும் காப்பாற்றினார்.
குதிரை முகம் கொண்ட சோமுகாசுரன் என்ற அசுரன் படைப்பிற்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட்டான். இந்நிலையில் உலகில் பிரளயம் ஏற்பட்டது
சத்தியவிரதன் என்ற விஷ்ணு பக்தன் மூலம் சப்தரிஷிகள், மூலிகைகள், பலவிதமான வித்துக்கள் ஆகியவற்றைக் கொண்ட படகினை பிரளயத்திலிருந்து மச்சமூர்த்தி காப்பாற்றினார்.மேலும் சோமுகாசுரனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு உலக உயிர்கள் படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனுக்கே வழங்கினார்.
இவ்வதார மூர்த்தியானவர் உடலின் மேல்பாகத்தில் நான்கு கைகளுடன் தேவரூபத்திலும், கீழ்பாகத்தில் மீனின் உருக்கொண்டும் அருள் புரிகிறார்.
திருப்பதிக்கு தென்கிழக்கே 70கி.மீ தொலைவில் நாகலாபுரம் என்னுமிடத்தில் வேதநாரணயன் சுவாமி கோவில் உள்ளது. இங்கே இறைவன் வேதநாராயணன் என்னும் பெயரில் மச்ச அவதாரத்தில் அருள்புரிகிறார்