காரடையான் நோன்பு
காரடையான் நோன்பு
Welcome to Srikalabairavan Astrology
மாசி மாதத்தில் உபநயனம் செய்வதும் நோன்புக் கயிறு கட்டிக் கொள்வதும்சகல பாக்கியத்தை கொடுப்பதாகும்.மாசி கயிறு பாசி படரும் (விருத்தியாகும்).பார்வதி தேவி ஒரு சமயம் ஏகாம்பர நாதனை காஞ்சியில் பூஜை செய்தாள்.
அதனால் பரமேஸ்வரன் பார்வதியை விட்டு ஒரு நிமிடமும் பிரியாமல் இருந்தார்.அது போலவே பெண்கள் தங்கள் கணவர் தன்னை விட்டு பிரியாமலும், கணவர் நீண்ட ஆயுளுடனும் இருக்க இந்த விரத்தை மேற்கொள்ளலாம். அந்த தினத்தில் விரதம் இருப்பது காரடை நோன்பு அல்லது காமாக்ஷி விரதம் ஆகும்.
கார் அரிசியை கொண்டு மாவாக்கி புதியதாக விளைந்த துவரையுடன் அடை போல் தட்டி அதில் காமாக்ஷியை ஆவாகனம் செய்து நோன்பு கையிற்றை அதன் மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் அந்த காமாக்ஷி நோன்பு கையிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம்.