பொங்கலோ பொங்கல்
Post date: Jan 14, 2013 1:01:12 AM
நல்லதோர் ஆரம்பம் தைமாதம் பிறக்குமென்று
சொல்வதோர் மொழியுமுண்டு வெல்லமுண்டு பொங்கலுண்டு
நல்லதோர் உள்ளம்கொண்டு தூய்மையே மனத்துகொண்டு
வல்லமை பொறுமைஎன்று தொண்டிலே உண்மைகொண்டு
உள்ளமும் புறமும்ஒன்றி சொற்படி செயல்புரிந்து
கள்ளமும் மாசும்நீக்கி வாழுவோர் நட்புகொண்டு
பொங்கலோ பொங்கலென்று கூவுதல் மட்டுமன்றி
பொங்கணும் மாற்றான்-நெஞ்சம் என்றிடும் நல்லோர்வாழ்வை
தங்கமாய்ப் பார்த்துக்கொள் நீ தேவிஸ்ரீ முத்தாலம்மா
எங்குமே அன்புவெள்ளம் பொங்குமுன் சத்தாலம்மா
எங்குமிவ் வுலகில்வாழும் மாந்தர்கள் என்றோஓர்நாள்
தம்பியாய் தந்தைமற்றும் தாயுமாய் உறவுபூண்டு
தங்குமிவ் வுலகம்தன்னில் வாழ்ந்தவர் அன்றோ-நண்பா..!
தருவதில் மகிழ்வுகண்ட மானிடன் தெய்வம்தானே
பெறுவதே நோக்கம்என்று தான்தனது எனக்குஎன்று
இருப்பதை விடுத்து-வாழும் நல்லவர் இருக்கும்முத்து
இலக்குமி நகரம்தன்னில் பொங்கிட மகிழ்ச்சி-என்றும்
துலங்கிட உள்ளம்-மேலும் விளங்கிட இல்லம்-நாளும்
கலங்கிடும் நெஞ்சம்-எல்லாம் பொங்கிட மகிழ்வினாலே
நலங்கிடும் பாதமாதா தேவிஸ்ரீ முத்தாலம்மா
நலம்கொடு நன்றாய்-அன்பின் பலம்கொடு மாந்தர்க்கெல்லாம்
தலமென ஆக்கிடுநீ எங்களின் நெஞ்சம் தன்னை
____________________