Happy New Year - இனிய புத்தாண்டு 2014

Post date: Jan 1, 2014 3:12:57 AM

நான் கரைந்து நாம்ஆகிப் பேர்-மறைந்து ஊர்-ஆகி

தேர்இழுக்க கூடிவரும் பக்தரைப்போல் நாமாகி

பார்புகழ ஒற்றுமையை நன்குதரும் அன்புதனை

தேர்ந்தெடுத்து பகிர்ந்திடுவோம் நாம்கொடுத்துக் களித்திடுவோம்

குற்றம் குறைகாணின் மற்றோர் செய்ததென

ஆங்கோர் நிறை-தோன்றின் நானே செய்ததென

கூவும்-குணம் இல்லா ஆன்றோர் இருக்குமிடம்

பட்டம் பதவி-மோகம் சற்றும் சிறிதுமிலா

நல்லோர் நிறைந்தவிடம் முத்தின் லக்ஷ்மிநகர்

என்றும் செழித்திருக்க ஒன்றாய் அமைந்திருக்க

நம்மை மறந்திடுவோம் பிறரை நினைத்திடுவோம்

நேற்றின் அனுபவத்தில் கற்றே செயல்புரிவோம்

நாளை நமதாகும் எந்நாளும் புதிதாகும் ...!