august

புத்தரின் வார்த்தைகள்

புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை

ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய எஸ். தம்மிக்கா

தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.

THE WORDS OF THE BUDDHA

Daily Readings from the Buddhist Scriptures

By Bhante S. Dhammika

ஆகஸ்டு 213-243 August

213. நான் உண்மையான அந்தணன், ஒருவர் வந்து உதவி கேட்கும் நிலையிலிருப்பவன், திறந்த கரங்கள் உடையவன், கடைசி உடலைத் தாங்கிக் கொண்டிருப்பவன், ஒப்புவமையற்ற மருத்துவன் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணன். நீங்கள் என்னுடைய உண்மையான குழந்தைகள். என் வாயிலிருந்து பிறந்தவர்கள். அறத்திலிருந்து பிறந்தவர்கள். அறத்தால் உருவாக்கப் பட்டவர்கள். சமய வாரிசுகள். உலகப் பொருள்களின் வாரிசுகள் அல்லர்.

I am a true brahmin, one to ask a favour of, pure handed, wearing my last body, an incomparable physician and surgeon. You are my own true children, born of my mouth, born of Dhamma, created by Dhamma, heirs to spiritual things, not heirs to material things.

It.100

214. பிறர் நலனில் அக்கறை கொள்ள ஆறு வழிகள் உள. அவை யாவை?

புனிதமான வாழ்க்கையில் ஒருவனின் செயலில், வெளிப்படையாகவும், தனிமையிலும் அன்பிருக்கும்.

புனிதமான வாழ்க்கையில் ஒருவனின் சொல்லில், வெளிப்படையாகவும், தனிமையிலும் அன்பிருக்கும்.

புனிதமான வாழ்க்கையில் ஒருவனின் எண்ணத்தில், வெளிப்படையாகவும், தனிமையிலும் அன்பிருக்கும்.

ஒருவன் சரியான முறையிலும், நேர்மையான முறையிலும் சேகரித்த பொருள்களை - அவை இரந்து பெற்ற சிறிதளவு உணவாக இருந்தாலும் - அன்புடன் பாராபட்சமின்றிப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்.

மேலும், ஒருவரிடம் முழுமையான ஒழுக்கம் இருக்கிறது. குறைபாடின்றி, கறையின்றி, பழிச்சொல் இன்றி வரும் சுதந்திரம் மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவுகிறது. இவற்றுடன் ஒருவன் இசைவுடன் தன் சக நண்பர்களுடன் புனிதமான வாழ்க்கை வாழ்கிறான்.

இறுதியாக ஒருவனிடம் சுதந்திரத்திற்கு இட்டுச் செல்பவை பற்றிய, துக்கத்தை அறவே ஒழிப்பவை பற்றிய அறிவு இருக்கிறது. இத்தகைய நோக்கங்களுடன் ஒருவன் தன் நண்பர்களுடன் புனிதமான வாழ்க்கை வாழ்கிறான்.

இவையே பிறரின் நலனில் அக்கறையும், மரியாதையும் அன்பும் உடைய ஆறுவழிகளாம்.

There are these six ways of being considerate. What six? One has love in deed toward one’s companions in the holy life, both openly and in private. One has love in word toward one’s companions in the holy life, both openly and in private. One has love in thought toward one’s companions in the holy life, both openly and in private. Then, things acquired rightly and properly, be they only scraps in one’s bowl, one gladly and impartially shares it with them. Also, one has those virtues that are unbroken, without flaw, spotless, without blemish, bringing freedom, conducive to concentration, and with these one lives in harmony with one’s fellows in the holy life. And finally, one has that noble understanding that is liberating, leading those who acts accordingly to it the complete overcoming of suffering; and one lives with this understanding among one’s companions in the holy life. These are the six ways of being considerate.

A.III,288

215. புத்தபெருமான் தளராமல் பயத்திலிருந்து பாதுகாப்புத் தருகிறார். அறம் அந்தப் பாதுகாப்பைப் போன்றது. சங்கம் பயத்திலிருந்து பாதுகாப்பைப் பெற்றவர்களைப் போன்றது. புத்த பெருமான் நல்ல ஆறுதலை அளிப்பவரைப் போன்றவர். அறம் ஆறுதலைப் போன்றதாகும். சங்கம் ஆறுதலைப் பெற்றவர்களைப் போன்றவர்கள் ஆவர். புத்தபெருமான் உண்மையான நண்பனைப் போன்றவர். அறம் உதவும் போதனையைப் போன்றது. சங்கம் போதனைகளின் உதவியுடன் நோக்கத்தை அடைந்தவர்களுக்குச் சமமாகும்.

The Buddha is like a steadfast man who gives protection from fear. The Dhamma is like the protection from fear, and the Sangha is like those who have found protection from fear. The Buddha is like a good consoler, the Dhamma is like consolation, and the Sangha is like those who have been consoled. The Buddha is like a true friend, the Dhamma is like helpful advice, and the Sangha is like those who have achieved their wishes by heeding that helpful advice.

Pmj.22*

216. அடக்கமற்ற, கட்டுப்பாடற்ற, தணியாத ஒருவன் மற்றவர்களை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ, தணிக்கவோ இயலாது. ஆனால், ஒருவன் அடக்கமும், கட்டுப்பாடும், பேராசையற்றவனாகவும் இருந்தால் மற்றவர்களையும் அவனைப் போன்று கொண்டு வரலாம்.

It is not possible that one who is himself unrestrained, undisciplined and unquenched could restrain, discipline and quench others. But it is very possible that one who is himself restrained, disciplined and quenched could make others like that also.

M.I,45

217. அண்ணல் துறவிகளிடம் கூறினார்: "ஒரு முறை இந்த சிராவஸ்தி நகரை ஆண்டு வந்த ஒரு மன்னன் அங்கு வாழ்ந்த ஒருவனை அழைத்து: 'நல்லவனே, இங்கு வா. இந்த சிராவஸ்தி நகரத்தில் குருடாகப் பிறந்த அனைவரையும் அழைத்து ஓரிடத்தில் ஒன்று சேர்.' என்று கட்டளையிட்டான். 'நன்று அரசே.' என்று கூறிய அவன் அரசர் கூறிய செயலைச் செய்து முடித்தபின் அரசரிடம் அவர் கடமையை நிறைவேற்றி விட்டதாகக் கூறினான். அப்பொழுது மன்னர்: 'நன்று. இக்குருடர்களுக்கு ஒரு யானையைக் காட்டு.' என்று கட்டளையிட்டான். அவன்: 'சரி அரசே.' என்று கூறி அரசர் கூறியதை நிறைவேற்றினான்.

அவன் குருடுடர்களில் ஒருவனை யானையின் தலை அருகே நிற்க வைத்தான். மற்றவனைக் காதிடமும், ஒருவனைத் தந்தங்களிடமும், ஒருவனைத் துதிக்கையிடமும், ஒருவனைக் கால் அருகேயும், ஒருவனை உடலின் பின் பகுதியிலும், இன்னொருவனை யானையின் வாலிடமும், மற்றொருவனை வாலின் நுனியிடத்திலும் நிறுத்திவிட்டு ஒவ்வொருவரிடமும் 'கண்தெரியாதவரே, இது ஒரு யானை.' என்று கூறினான். பின் அரசரிடம் சென்று 'ஐயா, குருடர்களுக்கு யானையைக் காண்பித்து விட்டேன். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யலாம்.' என்றான்.

அரசன் அக்குருடர்களிடம் சென்று 'நீங்கள் யானையைப் பார்த்துவிட்டீர்களா?' என்று கேட்டான்.அவர்கள் அனைவரும் 'ஆம்,ஐயா. நாங்கள் பார்த்துவிட்டோம்.' என்றனர். 'அப்படியென்றால் யானை எப்படியிருக்கிறதென்று என்னிடம் கூறுங்கள்.' என்றான்.

அப்பொழுது தலையின் அருகில் நின்றவன்: 'அது ஒரு பானையைப் போல் இருக்கிறது.' என்றான்.

காதருகில் நின்றவன்: 'நெல்லிலிருந்து உமியைப் பிரிக்கும் விசிறியைப் (முறம்) போன்றது.' என்றான்.

மேலும் தந்தங்களைக் கலப்பை போன்றதென்றும், துதிக்கையை ஏர்க்கால் (யுகந்திரம்) போன்றதென்றும், உடல் தானியக் களஞ்சியத்தைப் போலவும், கால் தூணைப்போலவும், யானையின் பின்பகுதி உருளை போலவும், வால் உலக்கையைப் போன்றதென்றும், வாலின் நுனி துடைப்பத்தைப் போன்று இருப்பதாகவும் கூறினர்.

அவர்களுக்குள்ளேயே வாதம் செய்து சத்தம் போட்டுக் கொண்டு: 'அதுவல்ல யானை. ஆம். அதுதான்! இதுவல்ல. இல்லை இதுதான்.' என்ற வாதம் முற்றி விரைவில் அடிதடி சண்டையும் அவர்களுக்குள்ளே ஆரம்பித்துவிட்டது. அந்தக் கேளிக்கையைப் பார்த்து அரசன் ஆனந்தப் பட்டான்.

அதைப்போலவே சுற்றித் திரியும் மற்ற சமயவாதிகளும் குருடர்களே. அவர்கள் சரியாகப் பார்ப்பதில்லை. அவர்கள் திறனையோ அல்லது திறனற்ற நிலையையோ பார்ப்பதில்லை. அவர்களுக்கு அறத்தில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதும் தெரியாது. அதனால் அவர்களின் அறியாமையினால் இயற்கையாகவே வாதிடுகின்றனர், சண்டை போடுகின்றனர், பூசலை ஏற்படுத்திக் கொள்கின்றனர். "

பின் கீழ்க்காணுமாறு அண்ணல் கூறினார்:

துறவிகள் என்றும், அந்தணர் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒரு சிலர்

தங்கள் கருத்துக்களோடு ஆழ்ந்த பற்றுக்கொண்டு

அவர்கள் ஒருபக்கம் மட்டுமே பார்க்கின்றனர்.

இதனால் சண்டையும், பூசலும் உண்டாக்கிக் கொள்கின்றனர்.

Once The Lord addressed the monks saying: “Once there was a certain king in this very city of Savatthi. He called someone, saying: ‘Come my good man, go and gather together in one place all the men in Savatthi who were born blind.’ ‘Very good,’ said the man, and he did as the king commanded. When he had done so the king said to him: ‘Now, my good man, show these blind men an elephant.’ ‘Very good,’ said the man, and he did as the king commanded. He presented one blind man with the head of the elephant, one with the ear, one with the tusk, another the trunk, the foot, the back, the tail and the tuft of the tail, saying to each other as he did so, ‘O blind man, this is an elephant.’ Having done this the man went to the king and said: ‘Sir, the elephant has been presented to the blind men. Do what you will.’ So, the king went to the blind men and said to each: ‘Oh blind men, have you seen the elephant?’ ‘Yes, Sir, we have,’ they replied: ‘Then tell me what an elephant is like.’ The one who had been presented with the head said: ‘An elephant is like a pot.’ The one who has been presented with the ear said: ‘An elephant is like a winnowing basket.’ They said the tusk was like a ploughshare, the trunk like a plough pole, the body like a granary, the foot like a pillar, the back like a mortar, the tail like a pestle, and the tuft of the tail like a broom. Then they began to argue with each other, shouting as they did: ‘It is!’ It is not!’ ‘An elephant is not like that!’ ‘Yes it is!’ Soon they began to hit each other, and the king was delighted with what he saw. In the same way, wanderers of other sects are blind, they do not see, they do not know the skillful or the unskillful. They do not know what is Dhamma or what Dhamma is not and because of their ignorance they are by nature argumentative, quarrelsome and contentious, wounding each other with the weapon of the tongue.” Then the Lord spoke this verse:

“Some so-called monks and brahmins

Are deeply attached to their own opinions

They see only one side of things

And thus end up with quarrels and contention.”

Ud.68

218. தச்சனோ அல்லது அவனிடம் வேலை கற்பவனோ அவர்களின் கருவியின் கைப்பிடியில் இவர்கள் பெருவிரலும் மற்ற விரல்களும் பட்டுத் தேய்வதை உணருவர். ஆனால் இன்று எவ்வளவு தேய்ந்தது, நேற்று எவ்வளவு தேய்ந்தது அல்லது வேறொரு நாள் எவ்வளவு தேய்ந்தது என்று தெரிந்திருக்க மாட்டார்.

அதைப் போலவே தியானத்தைப் பழகி அதற்காகத் தன்னை அற்பணித்துக் கொண்டவன், இன்று எவ்வளவு மாசு குறைந்திருக்கிறது, நாளை எவ்வளவு மாசு குறையும், இன்னொரு நாள் இவ்வளவு குறையும் என்று கணக்கிட முடியாது. ஆனால் அம்மாசு அழிந்து போகிறது என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்.

The carpenter or his apprentice sees that the handle of his tool is being worn away by his fingers and thumb, but he does not necessarily know how much has been worn away today, how much yesterday and how much at another time. In the same way, one living devoted to the practice of meditation does not know how much of the defilements have been worn away today, how much yesterday and how much at another time. He merely has the knowledge that they are being worn away.

S.III,154

219. அன்பைப் பயின்று, அன்பை வளர்த்து, அன்பைப் பெரிது படுத்தி, அன்பை ஒரு வாகனமாக, அடித்தலமாக அமைத்து, அன்போடு நெருங்கியிருப்பதால், அதனை நன்கு நிறுவுவதால் மனம் விடுதலையடைகிறது. அதனால் விளையும் பதினோறு அனுகூலங்களைப் பார்க்க வேண்டும்.

அந்தப் பதினோறு அனுகூலங்களும் எவை?

ஒருவன் மகிழ்ச்சியாகக் தூங்குகிறான், மகிழ்சியாக விழிக்கிறான். கெட்ட கனவுகள் காண்பதில்லை. மனிதர்களும் மனிதரல்லாதவரும் அவனை நேசிக்கின்றனர். தேவர்களால் அவன் காக்கப் படுகிறான். நஞ்சு மற்றும் கத்தி ஆகியவை அவனை ஒன்றும் பாதிப்பதில்லை. மனத்தை விரைவாக ஒரு நிலைப்படுத்துகிறான். அவனது தோற்றம் தூய்மையாக இருக்கிறது. தடுமாற்றம் ஏதுமின்றி அவன் இயற்கையெய்துகிறான். மேற்கொண்டு அவன் அன்பை வளர்த்துக் கொள்ளாமலிருந்தாலும், குறைந்தபட்சம் அவன் பிரம்மலோகத்தையாவது அடைவான்.

Eleven advantages are to be looked for in the freedom of mind through the practice of love, by making love grow, by making much of it, by making love a vehicle and basis, by persisting in it, by becoming familiar with it, and by establishing it well. What eleven? One sleeps happily, one wakes happily, one has no bad dreams, one is dear to both humans and non-humans, one is guarded by the gods, fire, poison and swords do not affect one, the mind concentrates quickly, the complexion becomes radiant, one dies without bewilderment, and if one develops no further, one will reach at least to the Brahma world.

A.V,342

220. விடுதலை பெற்ற உள்ளத்தையுடைய ஒருவன் எவரிடமும் வாதிடமாட்டான். கருத்து வேறுபாடு கொள்ளமாட்டான். உலகவழக்கைப் பயன்படுத்திக் கொள்வான். ஆனால் அவற்றோடு பற்றுக் கொள்ள மாட்டான்.

One whose mind is freed does not argue with anyone, he does not dispute with anyone. He makes use of the conventional terms of the world without clinging to them.

M.I,500

221. மகதத்தில் முக்கியப் புள்ளியான, அந்தணர் வஸாக்கரா அண்ணலிடம் கூறினார்: "நற்கௌதமரே, என் பங்குக்கு நான் இதைக் கூறுகிறேன். இது என் கருத்து. ஒருவன் தான் பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததைக் கூறினால் தவறொன்றும் இல்லை, 'நான் இதைப் பார்த்தேன், நான் இதைக் கேட்டேன், நான் இதை உணர்ந்தேன்.' என்று கூறுவதில் ஒரு ஆபத்தும் வராது."

பின் அண்னல் பதில் அளித்தார்: "என் பங்குக்கு அந்தணரே, ஒருவன் பார்த்த, கேட்ட, உணர்ந்த எல்லாவற்றையும் கூற வேண்டும் என்று கூற மாட்டேன். அப்படிக் கூற வேண்டாம் என்றும் கூற மாட்டேன். ஒருவன் பேசிப் பலனற்ற நிலை உருவானால் அவன் பேசக் கூடாது. ஒருவன் பேசி இலாப நிலை உருவானால் ஒருவன் பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை, விளங்கிக்கொண்டதைத் தாராளமாகப் பேசலாம்."

The Brahmin Vassakara, an important man in Magadha, came to the Lord and said: “Good Gotama, for my part I say this, this is my opinion. If anyone speaks of what he has seen, heard or sensed, there is no harm in him saying: ‘This is what I saw. This is what I heard. This is what I sensed.’ No harm can come from that.”

The Lord then replied: “For my part, brahmin, I do not say that everything one has seen, heard or sensed should be spoken of, and nor I do not say it should not be spoken of. If one speaks and unprofitable states grow, then one should not speak. If one speaks and profitable states grow, then one should speak of what one has seen, heard, sensed and understood.”

A.II,172

222. ஒருமுறை பாஞ்சால நாட்டு விசாகா என்னும் பௌத்தத் துறவி பலரும் கூடும் மண்டபத்தில் அறத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், தனிமையில் தியானம் செய்து கொண்டிருந்த அண்ணல் எழுந்து மண்டபத்திற்குச் சென்று அவருக்கென அமைக்கப் பட்டிருந்த இருக்கையிலமர்ந்து, 'அறத்தை இவ்வளவு சிறப்பாகப் போதித்தது யார்?' என்று கேட்டார்.

"அண்ணலே, அது துறவி விசாகா ஆவார்கள்."

பிறகு அண்ணல் விசாகரைப் பார்த்து, "நன்று செய்தீர், விசாகரே, நன்று செய்தீர். மெருகூட்டும் மொழியில் நீங்கள் போதித்தீர்கள். உயர்த்தினீர்கள், அறிவைப் புகட்டினீர்கள், துறவிகளுக்கு ஊக்கமளித்தீர்கள். தெளிவாக இருந்தது, கடுமையற்றிருந்தது, விரிவான விலக்கத்துடன், பாரபட்சமற்ற முறையில் உங்கள் போதனை இருந்தது." என்று பாராட்டிய பின், மேலும் தொடர்ந்தார்:

"ஒருவன் பேசாவிட்டால், அவனைப் பற்றி மற்றவர் அறியார்,

அவன் முட்டாள்களுடன் கலந்த அறிஞனாவான்.

ஆனால் அவன் அழிவற்ற தன்மையைப் பேசிப் போதித்தால்,

மற்றவர் அவனைப் பின்பற்றுவர்.

ஆகையால் அறவொளியை ஏற்றுங்கள்,

அவன் ஞானிகளின் பதாகையைத் தூக்கிக் பிடிக்கட்டும்.

ஞானிகள் ஒளிவீசும் சொற்களையே தங்கள் கொடிகளாகக் கொண்டிருக்கின்றனர்.

அறமே ஞானிகளின் கொடிகளாம்."

On one occasion, the monk Visakha of the Pancalas was teaching Dhamma in the assembly hall. As the evening approached, the Lord rose from solitary mediation, went to the hall and sat down on a seat made ready for him. Then he asked: “Who was teaching Dhamma so well?”

“It was, Lord, the monk Visakha.”

Then the Lord said: “Well done, Visakha, well done. Well have you instructed and uplifted, enlightened and inspired the monks in language polished, distinct, free from roughness, revealing the meaning, comprehensive and unbiased.” Then the Lord said further:

“If he does not speak, others will not know him,

He is just a wise man mixed up with the fools.

But if he speaks about and teaches the Immortal,

Others will know him.

So light up the Dhamma,

Lift the banner of the sages high.

Sages have illuminating speech as their banner.

Dhamma is the banner of sages.”

A.II,51

223. நான் அறத்தை முழுமையாகப் போதித்திருக்கிறேன். யாராவது அவ்வறத்தின் நான்கு வரிகளுடைய ஒரு பத்தியின் பொருளை மட்டுமே புரிந்துகொண்டு அதைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்களேயானால், அவர்களைப் பரவலாகப் படித்தவர்கள் என்று கூறலாம். அவர்களுக்கு அறம் உள்ளப்பூர்வமாக தெரியும்.

I have taught the Dhamma in full, and if one understands the meaning of even a four-line stanza of Dhamma and resolves to live in accordance with it, that one may be called widely learned, one who knows Dhamma by heart.

A.II,178

224. ஒரு முறை கோசம்பிக்கு அருகில், கோசித வனத்தில் அண்ணல் தங்கியிருந்தபோது போற்றுதற்குரிய உதாயின் சாதாரண மனிதர்கள் நிறைந்த பெருங்கூட்டமொன்றில் அமர்ந்து அறத்தைப் போதித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட ஆனந்தர், அண்ணலிடம் சென்று தான் பார்த்ததைக் கூறினார். அண்ணல் சொன்னார்:

"உண்மையிலேயே ஆனந்தா, அறத்தை மற்றவர்க்குப் போதிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, அறத்தை மற்றவர்க்குப் போதிக்கும்போது ஐந்து பொருள்களை நிலை நாட்ட வேண்டும், பிறகே போதிக்க வேண்டும். அவ்வைந்தும் எவை? கீழ்க்காண்பனவற்றை நினைவிற் கொண்டு அறத்தைப் போதிக்க வேண்டும். 'நான் அறத்தைப் படிப்படியாகக் கூறுவேன். நான் குறிக்கோளை மனத்தில் கொண்டு கூறுவேன். நான் அன்புடன் பேசுவேன். கேவலமான இலாபத்தை எதிர்பார்த்துப் பேச மாட்டேன். நான் எனக்கோ அல்லது மற்றவர்க்கோ தீமை விளையுமாறு பேச மாட்டேன்.' உண்மையிலேயே ஆனந்தா, அறத்தை மற்றவர்க்குப் போதிப்பது அவ்வளவு எளிதான காரியமன்று. ஆகையால் அறத்தை மற்றவர்களுக்குப் போதிக்கும்போது இவ்வைந்தையும் நிலை நிறுத்த வேண்டும்."

Once, while the Lord was staying near Kosambi in the Ghostia Park, Venerable Udayin, sat teaching the Dhamma surrounded by a great gathering of lay people. Now Ananda saw this and he went to the Lord and told him what he had seen, and the Lord said: “Truly, Ananda, it is not easy to teach Dhamma to others. In teaching Dhamma to others, first establish five things and then teach. What five? Teach Dhamma to others thinking: ‘I will speak Dhamma in a gradual way. I will speak with the goal in mind. I will speak with kindliness. I will not speak as a means of gain. I will speak neither to my own harm, nor to the harm of others.’ Truly, Ananda, it is not easy to teach Dhamma to others. So in teaching Dhamma to others, first establish well these five things.’

A.III,184

225. யாராவது ஒருவன் உங்களைத் திட்டினாலோ, தாக்கினாலோ, உங்கள் மீது கல்லெறிந்தாலோ, கட்டையாலோ, வாளாலோ தாக்கினாலோ உங்கள் உலக ஆசாபாசங்களையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டுக் கீழ்க்காணுமாறு உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்: என் மனம் தடுமாற்றமற்றிருக்கும், தீய வார்த்தைகளைப் பேசமாட்டேன். வெறுப்பைப் புறம் தள்ளி மற்றவரின் நலனுக்காக அன்புடனும், கருணையுடனும் வாழ்வேன் என்று பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.

If anyone abuses you to your face, strikes you with a fist, throw clods of earth at you, beats you with a stick or gives you a blow with a sword, you must put aside all worldly desires and considerations and train yourself like this: ‘My heart will be unwavering. No evil words shall I speak. I will live with compassion for the good of others, with a kindly heart, without resentment.’ Thus must you train yourself.

M.I,124

226. உடன் வாழும் ஆன்மீக நண்பர்களுடன் எப்படி இணக்கத்துடன் வாழ்கிறார் என்று புத்தர் அநுருத்தரைக் கேட்டார். அவர் சொன்னார்: "இவ்வகையான ஆன்மீக நண்பர்களுடன் வாழ்வது ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். பொதுவிடத்திலும் தனிமையிலும் அவர்களுடன் மனதாலும், பேச்சாலும் நடத்தையாலும் அன்போடு நடந்து கொள்கிறேன். என் விருப்பங்களை ஒதுக்கி வைத்து அவர்கள் விருப்பங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்கிறேன். இதனால் நாங்கள் பல உடல்களைக் கொண்டிருந்தாலும் ஓர் உள்ளத்தைக் கொண்டுள்ளோம்."

The Lord asked Anuruddha how he was able to live in such harmony with his fellow monks and he replied: “I always consider what a blessing it is, what a real blessing, that I am living with such companions in the holy life. I think, speak and act with love towards them, both in public and private. I always consider that I should put aside my own wishes and acquiesce to what they want, and then I do that. Thus we are many in body but one in mind.”

M.III,156*

227. ஊர் சுற்றித்திரியும் பொட்டாலியா அண்ணலிடம் வந்து, மரியாதையுடன் வணங்கி ஒருபக்கம் அமர்ந்தார். அவர் அமர்ந்தவுடன் அண்ணல் அவரை நோக்கி: "பொட்டாலியா, உலகில் நான்கு வகை மனிதர்களைக் காணலாம். எந்த நால்வர்?

இது குறித்து, ஒருவன் எதைத் திறனாய்வு (குறை) செய்ய வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் திறனாய்வு செய்வான். நடந்ததை நடந்தவாறும், உண்மையையுமே கூறுவான். ஆனால் அவன் போற்றக்கூடியதைப் போற்றமாட்டான்.

மறுபடியும் ஒருவன் புகழுக்குரிய ஒன்றைப் புகழவேண்டிய சரியான நேரத்தில் புகழ்வான். நடந்ததை நடந்தவாறும், உண்மையையுமே கூறுவான். ஆனால் திறனாய்வு செய்யவேண்டிய ஒன்றைத் திறனாய்வு செய்யமாட்டான்.

மேலும் ஒருவன் குறைகூற வேண்டியதைக் குறைகூற மாட்டான், புகழ வேண்டியதையும் புகழமாட்டான்.

இறுதியாக ஒருவன் எதைக் குறைகூற வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் குறை கூறுவான். புகழுக்குரிய ஒன்றைப் புகழவேண்டிய சரியான நேரத்தில் புகழுவான். மேலும் அவன் நடந்ததை நடந்தவாறும், உண்மையையுமே கூறுவான். இப்பொழுது இந்த நால்வரில் எவர் மிகவும் அரியவன், போற்றக் கூடியவன் என்று நினைக்கிறாய்?"

"என் பார்வையில் நற்கௌதமரே, குறைகூற வேண்டியதைக் குறைகூறாமலும், புகழ வேண்டியதைப் புகழாமலும் இருப்பவனே போற்றுதற்குரியவன். ஏனென்றால் அவனுடைய அலட்சியத்தன்மை போற்றுதற்குரியது."

அதற்கு அண்ணல்கூறினார்: "நான் வலியுறுத்துவது என்னவெனில் சரியான நேரத்தில் குறை கூற வேண்டியதைக் குறை கூறி, புகழுக்குரிய ஒன்றைப் புகழ்பவனே சிறந்தவன். ஏன்? ஏனென்றால் அவனது காலத்தன்மை போற்றுதற்குரியது."

Potaliya the wanderer came to visit the Lord, greeted him courteously, sat down at one side, and as he did, the Lord said to him: “Potaliya, there are these four persons found in the world. What four? Concerning this, one criticizes that which deserves criticism at the right time, saying what is factual and true, but he does not praise that which deserves praise. Again, one speaks in praise of the praiseworthy at the right time, saying what is factual and true, but does not criticize that which deserves criticism. And again, one neither criticizes that which deserves criticism, nor praises the praiseworthy. And finally, one criticizes that which deserves criticism and praises the praiseworthy, at the right time, saying what is factual and true. Now of these four persons, which do you think is the most admirable and rare?”

“In my opinion, good Gotama, the one who neither criticizes that which deserves criticism nor praises the praiseworthy is the most admirable and rare. And why? Because his indifference is admirable.”

Then the Lord replied: “Well, I maintain that he who criticizes that which deserves criticism and praises the praiseworthy, at the right time, saying what is factual and true, he is the best. And why? Because his timing is admirable.”

A.II,100

228. கங்கையாறு ஓடுகிறது. தாழ்வான பகுதியை நோக்கி ஓடுகிறது. கிழக்கு நோக்கி ஓடுகிறது. அதைப்போலவே அட்டாங்கமார்க்கமென்னும் அந்த உயர்ந்த எட்டு வழிகளை எவரெவர் பண்படுத்திப் பின்பற்றி வளர்த்துக் கொள்கின்றனரோ, அவர்கள் நிருவாண நிலை என்னும் திசை நோக்கிச் செல்கின்றனர்.

Just as the River Ganges flows towards, inclines towards, tends towards the east, so too, one who cultivates and develops the Noble Eightfold Path flows towards, inclines towards and tends towards Nirvana.

S.V,38

229. நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன். அறிவுள்ள ஒருவன் என்னிடம் வரட்டும். அவன் உண்மையானவனாகவும், நேர்மையானவனாகவும் இருக்கட்டும். அவனுக்குப் போதிக்கிறேன். அவனுக்கு நான் அறத்தைக் கற்பிக்கிறேன். அவனுக்குக் கற்பித்ததை அவன் பயிற்சி செய்து கொண்டால், ஏழு ஆண்டுகளில் அவன் இதே வாழ்க்கையில் சொந்த அறிவாலும் நோக்கத்தாலும் எந்தக் காரணத்திற்காக இளைஞர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்கின்றனரோ (துறவறம் செல்கின்றனரோ) அதனை இவன் நிரந்தரமாக அடைவான். ஏழு ஆண்டுகள் தேவையில்லை. ஏழு நாட்களிலேயே அதை அவன் அடைந்து விட முடியும்.

இப்பொழுது நீங்கள்: 'துறவி கௌதமர் தனக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக வேண்டியே இப்படிச் கூறுகிறார்,' என்று நினைக்கலாம். ஆனால் அது அப்படியன்று. எவர் உங்களுக்கு ஆசிரியரோ அவரே உங்களுக்கு ஆசிரியராக இருக்கட்டும்.

'நமது ஆன்மீகக் கட்டளைகளை அவர் விட்டுவிடச் சொல்கிறார்,' என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் அது அப்படி அன்று. நீங்கள் தொடர்ந்து உங்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டே வாழுங்கள்.

'நமது வாழ்க்கை முறையை விட்டுவிடச் சொல்கிறார்,' என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் அது அப்படி அன்று. உங்கள் வாழ்க்கை முறையிலேயே நீங்கள் தொடர்ந்து வாழுங்கள்.

'நாம் பயின்ற போதனைகளுக்குப் புறம்பானதாகத் தவறானவற்றைப் பயிற்சி செய்யச் சொல்வார், சரியானவற்றைப் பயிற்சி செய்யச் சொல்லமாட்டார்,' என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அப்படி அன்று. உங்கள் போதனைப்படி தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்து விடுங்கள், பயில வேண்டியதைத் தொடர்ந்து பயிலுங்கள்.

ஆனால் திறனற்ற காரியங்கள் இன்னும் விட்டுவிடப் படவில்லை. கறைபடிந்த செய்கை, மறுபிறப்புக்கு இட்டுச்செல்பவை, அச்சம் கொண்ட எதிர்காலத்தில் வேதனை தரக்கூடிய பிறப்பு, அழிவு, மரணம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை ஆகியவற்றை விட்டுவிடுவதற்காக வேண்டியே நான் அறத்தைப் போதிக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சரியான முறையில் பயின்றால் கறை படிந்த இவை மறைந்து விடும், தூய்மைக்கு நம்மை அழைத்துச் செல்லும் பொருள்கள் வளர்ந்து விரிவடையும். இவ்வாழ்க்கையிலேயே முழுமையான பூர்த்தியான அறிவை உங்கள் சொந்த முயற்சியாலும் நோக்கத்தாலும் அடையலாம்."

I tell you this. Let an intelligent person who is sincere, honest and straightforward come to me, and I will instruct him, I will teach him Dhamma. If he practices as he is taught, then in seven years he will attain in this very life by his own knowledge and vision that goal for the sake of which young men go forth from home into homelessness, and he will abide in it. Never mind seven years, he will be able to do it in seven days. Now, you may think: ‘The monk Gotama only says this in order to get disciples.’ But this is not so; let he who is your teacher be your teacher still. You may think: ‘He wants us to give up our commandments.’ But this is not so; continue to live by your commandments. Or you may think: ‘He wants us to give up our way of life.’ But this is not so; continue to live your way of life. Or perhaps you will think: ‘He wants us to practice things that are wrong or not practice things that are right, according to our teachings.’ But this is not so; continue to avoid the things your teaching considers wrong, and practice the things that your teaching considers right. But there are unskillful things not yet given up, things tainted, leading to rebirth, fearful, with painful result in the future, things associated with birth, decay and death. And it is for the giving up of these things that I teach Dhamma. However, if you practice correctly, these tainted things will be given up, and the things that lead to the purification will grow and develop. You will attain the fullness of perfected wisdom by your own knowledge and vision, and abide in it in this very life.

D.III,55

230. மனிதர்கள் எது நடக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்களோ,

அதற்கு முரணாகவே நிகழ்வுகள் அமையக்கூடும்.

இப்படித்தான் ஏமாற்றம் எழுகிறது.

இப்படித்தான் இவ்வுலகம் செயல்படுகிறது.

What people expect to happen

Is often different from what actually happens.

Thus does disappointment arise.

This is the way the world works.

Sn.588

231. உலகில் இப்படிப்பட்ட மூன்றுவித நோயாளிகள் இருக்கின்றனர். எப்படிப்பட்ட மூவர்?

ஒரு நோயாளி சரியான உணவோ, மருந்தோ, சரியான சிகிச்சையோ கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவன் நோயிலிருந்து குணமாகமாட்டான்.

இன்னொரு நோயாளி சரியான உணவோ, மருந்தோ, சரியான சிகிச்சையோ கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவன் எப்படியாவது நோயிலிருந்து குணமாகிவிடுவான்.

மூன்றாமவன் சரியான உணவும், மருந்தும், சரியான சிகிச்சையும் கிடைத்தால் தான் அவன் பூரண குணமாவான்.

இந்த மூன்றாமவனுக்குச் சரியான உணவும், சரியான மருந்தும், சரியான சிகிச்சையும் தரவேண்டும். மற்றவர்களையும் கவனிக்கத்தான் வேண்டும்.

இப்பொழுது உலகில் உள்ள மூன்று விதமான மனிதர்களை இந்த மூன்று வித நோயாளிகளுடன் ஒப்பிடலாம்.

அந்த மூவர் யார்?

ஒருவன் ததாகதரைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ இல்லையோ, அறத்தைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ இல்லையோ, அறத்தின் வழியில் வாழும் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ இல்லையோ திறன் மிக்க முழுமையான வாழ்வில் நுழையவே மாட்டான்.

இன்னொருவன் ததாகதரைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ இல்லையோ, அறத்தையும், அறத்தின் வழியிலும் பயிலும் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ இல்லையோ, இவன் திறனுடைய முழுமையான வாழ்வில் நுழைந்து விடுவான்.

மூன்றாமவன் ததாகதரைக் காணும் வாய்ப்பைப் பெற்று, அறத்தையும், அறவழியில் பயிலும் சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டுமே, திறன் வாய்ந்த முழுமையான வாழ்வில் நுழைய முடியும். கடைசி மனிதனுக்காகவே அறத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்.

There are these three types of sick person to be found in the world. What three? There is the sick person who, whether or not he obtains the proper diet, medicines and nursing, will not recover from his illness. Then there is the sick person who, whether or not he obtains the proper diet, medicines, and nursing, will recover from his sickness anyway. Lastly there is the sick person who will recover from his illness only if he gets the proper diet, medicines and nursing.

It is for this last type that proper diet, medicine and nursing should be prescribed, but the others should be looked after also.

Now, there are three types of person in the world who can be compared to the three types of sick person. What three? There is the person who, whether or not he gets the chance of seeing the Tathagata and learning the Dhamma and discipline, will not enter the perfection of things that are skillful. Again, there is the person who, whether or not he gets a chance of seeing the Tathagata and learning the Dhamma and discipline, will enter the perfection of things that are skillful.

And again, there is the person who will enter into the perfection of things that are skillful only if he gets the chance of seeing the Tathagata and learning the Dhamma and discipline.

It is on account of this last person that the Dhamma is proclaimed, but it should be taught to others also.

A.I,120

232. ஒருவன் தன்னுடைய நலன் பற்றியும், பிறர் நலன் பற்றியும் எப்படி அக்கறை கொள்கிறான்? ஒருவன் பேராசை, வெறுப்பு, மாயை முதலான தன்னிடமிருக்கும் தீய குணங்ளைக் கட்டுப்படுத்த முயல்கிறான். மற்றவனையும் அப்படியே இருக்க ஊக்கமளிக்கிறான்.

How is a person concerned with his own good and the good of others? Concerning this, one is concerned with the restraint of greed, hatred and delusion in himself, and he encourages others to the same restraint.

A.II,96

233. இந்த ஐந்தும் நல்லவன் கொடுக்கும் பரிசின் இயல்புகள். எந்த ஐந்து?

ஒருவன் மரியாதையுடன் கொடுக்கிறான். ஒருவன் சிந்தித்துக் கொடுக்கிறான். ஒருவன் தன் கைகளாலேயே கொடுக்கிறான். ஒருவன் நல்ல பொருள்களையே கொடுக்கிறான். ஒருவன் விளைவைக் கருதியே கொடுக்கிறான்.

These five things characterize the good person’s gift. What five? One gives with reverence, one gives thoughtfully, one gives with one’s own hand, one gives things that are good, and one gives thinking of the result.

A.III,172

234. வணக்கத்துக்குறிய ஆனந்தர் வீட்டிற்கு சென்று, வாயிற்படியில் சாய்ந்த கொண்டு: "நான் இன்னும் பயில்பவன். நான் இன்னும் முழுமை அடைய வில்லை. ஆனால் ஐயகோ, எனது ஆசிரியர், என் மீது கருணை காட்டுபவர், இறக்கும் தருவாயில் இருக்கிறார்," என்று கூறி அழுதார்.

அண்ணல் துறவிகளை நோக்கி: "ஆனந்தர் எங்கே?" என்று வினவினார். துறவிகள் அவர் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதைச் சொன்னார்கள். உடனே அண்ணல்: "துறவிகளே ஆனந்தரிடம் சென்று: 'நண்பர் ஆனந்தரே, உங்களை அண்ணல் விளிக்கிறார்.' என்று கூறுங்கள்." என்று கூறினார். அவர் வந்த பொழுது ஆனந்தரைப் பார்த்து:

"போதும் ஆனந்தா, அழாதே. நான் உனக்கு ‘நாம் விரும்பும் பொருள்களை எல்லாம் விட்டுப் பிரிய வேண்டும் என்பது இயற்கை,’ என்பதைப் போதிக்கவில்லையா? பிறந்தவை எல்லாம், பல பொருள்களடங்கிய கூட்டாக உருவாகிப் பிறகு அழிந்துவிடும் என்பது தெரியாதா? வேறு எப்படி இருக்க முடியும்? நீண்ட நாட்களாகத் ததாகதருக்கு எண்ணத்தாலும், சொல்லாலும், அன்பான செயலாலும், கருணையுடனும், மகிழ்ச்சியுடனும், முழு மனத்துடனும் எவ்வளவோ பணி விடைகளைச் செய்திருக்கிறாய். நீ அதிக நன்மைகளைச் சேர்த்திருக்கிறாய். நீ இப்பொழுது உன் சக்திகளையெல்லாம் ஒன்று திரட்ட வேண்டும். ஏனென்றால் நீயும் விரைவில் மாசுகளிலிருந்து விடுதலை அடையப் போகிறாய்."

Venerable Ananda went to the house, leaned against the doorpost and wept, saying: “I am but a learner. I still have to attain perfection. But alas, my teacher, he who is so compassionate towards me, is about to pass away.” Then the Lord asked the monks: “Where is Ananda?” and they told him and the Lord said: “Go monk, and say to Ananda, ‘Friend Ananda, the Lord calls you.’ ” When Ananda came, the Lord said to him: “Enough Ananda, do not cry. Have I not taught that it is the nature of all things beloved that we must suffer separation from them and be severed from them? For that which is born, come to be and is compounded is also subject to dissolution. How could it be otherwise? For a long time Ananda, you have served the Tathagata with thoughts of love, with words of love and with deeds of love, graciously, unstintingly and wholeheartedly. You have gathered great good. Now put forth energy and soon you too will be free from the defilements.”

D.II,144

235. அண்ணல் கூறினார்: "யாராவது என்னையோ, அறத்தையோ அல்லது சங்கத்தையோ குறை கூறினால் நீ கோபப்படவோ, ஆத்திரப்படவோ, மனம் நோகவோ கூடாது. ஏனென்றால் அத்தகைய செயல் உன்னைத் தெளிவற்றவனாக்கி அவர்கள் கூறியது நன்மையா, தீமையா என்று விளங்காமற் செய்து விடும். விளங்குமா என்ன?"

"இல்லை, அண்ணலே."

"ஆகவே, யாராவது என்னையோ, அறத்தையோ அல்லது சங்கத்தையோ குறை கூறினால், அவர்களுக்கு எளிமையாக அவர்கள் கூற்றில் உள்ள தவற்றைப் புரியவை. 'அது தவறு, அது சரியானதன்று, அது எங்கள் வழி அன்று, நாங்கள் அவற்றைச் செய்வதில்லை' என்று கூறு.

அதேபோல் யாராவது என்னையோ அறத்தையோ அல்லது சங்கத்தையோ புகழ்ந்து பேசினால் அதற்காக நீ பெருமைப் படவோ, கர்வம் கொள்ளவோ கூடாது. ஏனென்றால் அத்தகைய செயல் உன்னைத் தெளிவற்ற வனாக்கி அவர்கள் கூறியது நன்மையா தீமையா என்று விளங்காமற்செய்து விடும். அப்படி புகழ்பவர்களுக்கு அவர்கள் கூற்றில் உண்மை இருப்பதைக் கூறு. 'இது சரியானது, அது மிகச் சரியானது, இதுதான் எங்கள் வழி, அதைத்தான் நாங்கள் செய்கிறோம்' என்று கூறு."

The Lord said: “If anyone should criticize me, the Dhamma or the Sangha, you should not because of that be angry, resentful or upset. For if you did, that would hinder you and you would not be able to know whether what they said was right or wrong. Would you?”

“No, Lord.”

“So, if others criticize me, the Dhamma or the Sangha, simply explain what is incorrect, saying: ‘That is incorrect. That is not right. That is not our way. We do not do that.’ But also, if others should praise me, the Dhamma or the Sangha, you should not because of that be pleased, elated or self-satisfied. For if you were, that would hinder you. So, if others praise me, the Dhamma or the Sangha, then simply explain what is correct, saying: ‘That is correct. That is right. That is our way. That is what we do.’ ”

D.I,3

236. மனக்குறை இருந்தால், இத்துன்பத்தைக் காணலாம். ஒருவன் சென்றாலும், நின்றாலும், படுத்திருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சியோ ஆனந்தமோ இருக்காது. ஒருவன் காட்டுக்குச் சென்றாலும், ஒரு மரத்தடிக்குச் சென்றாலும், ஒரு தனிமையான இடத்துக்குச் சென்றாலும், திறந்த இடத்திற்குச் சென்றாலும் அல்லது துறவிகளின் மத்தியில் இருந்தாலும் மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ காண முடியாது.

ஆனால் மனநிறைவு இருக்கும் போது, இந்த நன்மையைக் காணலாம். ஒருவன் சென்றாலும், நின்றாலும், படுத்திருந்தாலும், அவன் காட்டுக்குச் சென்றாலும், ஒரு மரத்தடிக்குச் சென்றாலும், ஒரு தனிமையான இடத்துக்குச் சென்றாலும், திறந்த இடத்திற்குச் சென்றாலும் அல்லது துறவிகளின் மத்தியில் இருந்தாலும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் காண்கிறான்.

When there is discontent, this woe may be looked for. Whether one goes, stands, sits or lies, one has no happiness or pleasure. Whether one has gone to the forest, to the foot of a tree, to a lonely place, to an open space or among the monks, one finds no happiness or pleasure. But when there is contentment, this good may be looked for. Whether one goes, stands, sits or lies, whether one has gone to the forest, to the foot of a tree, to a lonely place, to an open space or amongst the monks, one finds happiness and pleasure.

A.V,121

237. சாக்கிய இனத்தைச் சேர்ந்த மகானாமா அண்ணலைக் காண வந்தபோது இவ்வாறு கேட்டார்: 'இந்தக் கபிலவாஸ்து நகரம் செல்வம் நிறைந்தது, முன்னேற்றமானது, புகழ்மிக்கது, கூட்டமானது, அதிக மக்களால் நிரம்பப் பெற்றது. இப்பொழுது நான் மாலையில் அண்ணலுக்காகவும், துறவிகளுக்காகவும் காத்திருந்த பிறகு, யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும், வண்டிகளையும், மக்களையும் சந்திக்கிறேன். அவர்கள் அவசர அவசரமாக இங்கும், அங்கும் சென்று கொண்டிருக்கின்றனர். அது போன்ற சமயங்களில் புத்தர் மீதும், அறத்தின் மீதும், சங்கத்தின் மீதும் நிலை நிறுத்தி வைத்திருந்த எண்ணங்கள் தடுமாறுகின்றன. பின் நான் இவ்வாறு யோசிப்பதுண்டு: 'இப்பொழுது நான் இறந்தால் என் நிலை என்னவாகும்? நான் எங்கு மறுபிறப்பெடுப்பேன்?'

"அஞ்சாதே மகானாமா, பயம் கொள்ள வேண்டாம்! உன்னுடைய மரணம் நல்லதாகவே இருக்கும். உன்னுடைய முடிவும் நல்லவிதமாகவே இருக்கும். ஏனென்றால், நீண்ட நாட்களாகவே நம்பிக்கையில், ஒழுக்கத்தில், படிப்பில், தியானத்தில், மெய்யறிவில் பயின்ற ஒரு மனம், நான்கு பூதங்களால் (பூமி, தீ, காற்று, நீர்) ஆக்கப்பட்ட உடல், பறவைகளாலும், மிருகங்களாலும் விரைவாக விழுங்கப்பட்டாலும், அந்த மனம் மேலே நல்ல மறுபிறப்பிற்கு எழுகிறது. சான்றாக, ஒரு மனிதன் ஒரு வெண்ணெய் நிறைந்த அல்லது எண்ணெய் நிறைந்த சாடியை, ஓர் ஆழமான குளத்தில் மூழ்குவிக்கும் போது அச்சாடி உடைந்து விட்டால், அச்சாடியின் துண்டுகள் அடியில் மூழ்கிவிடும். ஆனால் அந்த வெண்ணெய் அல்லது எண்ணெய் மேலே மிதந்து வந்துவிடும். அதைப்போலவே மாகானாமா, உனது உள்ளம் நீண்ட நாட்களாக நம்பிக்கையையும், ஒழுக்கத்தையும், கல்வியையும், தியாகத்தையும், அறிவையும் கடைப்பிடித்து வந்திருக்கிறது. ஆகவே உனக்குப் பயம்வேண்டாம். உன்னுடைய மரணம் நல்லதாகவே இருக்கும். உனது முடிவும் நல்லதாகவே இருக்கும்."

Mahanama the Sakyan came to see the Lord and said: “This town of Kapilavatthu is rich, prosperous, popular, crowded, thickly populated with people. Now when I enter the city in the evening after waiting on the Lord or the monks, I meet with elephants and horses, chariots, carts and people, all hustling and bustling along. At such times, my mindfulness of the Buddha, Dhamma and Sangha become scattered. Then I think: ‘If I were to die at this moment, what would be my destiny? Where would I be reborn?’ ”

“Have no fear, Mahanama, have no fear! Your death will be good, your end will be good. For one whose mind has for long a long time has been given to faith, virtue, learning, renunciation and in wisdom, even though the body made of the four elements is devoured by birds and animals, yet the mind will soar upwards to a good rebirth. It is just as if a man were to plunge a jar of butter or oil into a deep pool of water and it were to be broken; the fragments of the jar would sink to the bottom but the butter or oil would float to the top. Your mind Mahanama, has for a long time been given faith, virtue, learning, renunciation and in wisdom. So, have no fear. Your death will not be bad, your end will not be bad.”

S.V,369

238. ஒரு கீரி, பாம்பை அணுகுமுன் தன் பாதுகாப்புக்கு ஒரு மருந்தை அருந்தி விட்டுத் தான் செல்கிறது. அதைப் போல ஒரு அறிவாளி, தியானம் செய்பவன், உலகை அணுகுமுன் அதில் உள்ள கோபம், பொறாமை, சண்டை சச்சரவுகள், வெறுப்பு போன்றவைகளால் அவன் பாதிக்கப்படாமல் இருக்க, அன்பு என்ற மருந்தை மனதில் நிறைத்துத்தான் அணுக வேண்டும்.

As a mongoose approaches a snake to seize it only after having supplied his own body with an antidote, so too, the earnest student of meditation, on approaching this world abounding as it is in anger and malice, plagued by quarrels, strife, contention and hatred, must first anoint his mind with the antidote of love.

Mil.394*

239. உலகில் இப்படிப்பட்ட நான்குவித மனிதர்களைக் காணலாம். எப்படிப்பட்ட நால்வர்?

ஒருவன் குறைந்த கல்வியுடையவன், தன் கல்வியால் இலாபமடைய முடியாதவன். இன்னொருவன் குறைந்த கல்வியுடையவன், ஆனால் அந்தக் கல்வியால் பயன் பெறக்கூடியவன். மூன்றாமவன் சிறப்பாகக் கல்வி பயின்றவன், தன் கல்வியால் பயனடையாதவன். இறுதியாக, சிறப்பாக கல்வி பயின்ற ஒருவன், தன் கல்வியால் நல்ல பயனடைபவன்.

குறைவான கல்வியுடைய ஒருவன் எப்படி அதனால் பயனடைவதில்லை? இந்த மனிதன் போதனைகளை நன்கு படிப்பதில்லை. அதன் எழுத்தையோ, மெய்க்கருத்தையோ புரிந்து கொள்ளாதவன். அறத்திற்குத் தக்கபடி வாழாதவன்.

குறைந்த கல்வியேயுடைய ஒருவன் எப்படிப் பயனடைகிறான்? இவன் குறைந்த கல்வி உடையவனாக இருந்தாலும் அவன் தான் கற்ற போதனைகளின் எழுத்தையும், கருத்தையும் புரிந்து கொண்டு, அந்தப் போதனைகள் காட்டிய வழியில் வாழ்க்கை நடத்துபவன்.

சிறந்த கல்வியறிவுடைய ஒருவன் ஏன் தன் கல்வியால் பயனடைய முடிவதில்லை? ஏனென்றால், அவன் நிறையப் படித்தாலும், அப்போதனைகளின் எழுத்தையோ அல்லது கருத்தையோ அவன் புரிந்து கொள்ளவில்லை. மேலும் தான் கற்ற போதனைகளுக்கேற்றவாறு அவன் நடப்பதுமில்லை.

இறுதியாகச் சிறப்பாகக் கல்விகற்ற ஒருவன் தான் கற்ற கல்வி மூலமாக எப்படிப் பயனடைகிறான்? சிறப்பாகப் பயின்ற ஒருவன் தான் கற்ற போதனைகளின் எழுத்தையும், கருத்தையும் நன்கு புரிந்து கொண்டு அவ்வறங் காட்டிய வழியில் அவன் வாழ்க்கை நடத்துவதால், அக்கல்வியால் பயனடைகிறான்.

There are these four persons found in the world. What four? One with little learning who does not benefit from his learning, one of little learning who does benefit from his learning, one of great learning who does not benefit from his learning, and one of great learning who does benefit from his learning.

And how does one with little learning not benefit from his learning? In this case, a person is not well-learned in the discourses, he knows neither the letter nor the spirit, and he does not live in accordance with the Dhamma. And how does one with little learning benefit from his learning? In this case, a person is not well-learned in the discourses, but of what he knows he understands both the letter and the spirit and lives in accordance with it. How does one with great learning not benefit from his learning? In this case, a person is widely learned in the discourses, but he understands neither the letter nor the spirit and does not live in accordance with the Dhamma. And finally, how does one with great learning benefit from his learning? Here, a person is widely learned in the discourses, he understands both the letter and the spirit and he lives in accordance with the Dhamma.

A.II,6

240. பரத்துவாசர் அண்ணலை நோக்கி: "நற்கௌதமரே, வாய்மையை அடைவதற்கு எது பேருதவியாக இருக்கிறது? வாய்மையை அறிவதற்கு எது சிறப்பாக உதவுகிறது என்பதைத் தான் நாங்கள் கேட்கிறோம்."

"வாய்மையை அறிவதற்கு, பரத்துவாசா, சிறப்பாக உதவுவது விடா முயற்சியே. விடா முயற்சி செய்யாத ஒருவன் வாய்மையை அறிய முடியாது. ஆனால் ஒருவன் உண்மையிலேயே கடுமையாக முயன்றால் அவன் வாய்மையை அடைய முடியும்."

"ஆனால் விடா முயற்சி செய்வதற்கு எது சிறப்பாக உதவுகிறது?"

"விடா முயற்சி செய்வதற்குச் சிறப்பாக உதவுவது எடை போட்டுப் பார்ப்பது தான். அப்படி எது முக்கியம் எது முக்கியமற்றது என்று எடை போடா விட்டால் ஒருவன் விடா முயற்சி செய்ய முடியாது. ஆனால் ஒருவன் உண்மையிலேயே அப்படி எடை போட்டுப் பார்த்தால் அவன் விடா முயற்சி செய்ய முடியும்."

"ஆனால் எடை போட்டுப் பார்ப்பதற்கு எது சிறப்பாக உதவுகிறது?"

"எடை போட்டுப் பார்ப்பதற்குச் சிறப்பாக உதவுவது முயற்சியே. முயற்சி செய்யாத ஒருவன் எடை போட்டுப் பார்க்க முடியாது. ஆனால் ஒருவன் உண்மையிலேயே முயன்றால் அவன் எடை போட்டுப் பார்க்க முடியும்."

"ஆனால் முயற்சி செய்வதற்கு எது சிறப்பாக உதவுகிறது?"

"முயற்சி செய்வதற்குச் சிறப்பாக உதவுவது விருப்பம் தான். அப்படி விருப்பம் இல்லாவிட்டால் ஒருவன் முயற்சி செய்ய முடியாது. ஆனால் ஒருவன் உண்மையிலேயே விரும்பினால் அவன் முயற்சி செய்ய முடியும்."

"ஆனால் விருப்பம் உண்டாக்க எது சிறப்பாக உதவுகிறது?"

"பொருட்களை அங்கீகரிப்பதே விருப்பம் உண்டாக்கப் பேருதவியாகிறது. ஒரு பொருளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒருவன் விருப்பம் உண்டாக்க முடியாது. ஆனால் ஒருவன் ஒரு பொருளை ஏற்றுக்கொள்வதால் விருப்பம் உண்டாகிறது."

"ஆனால் பொருட்களை அங்கீகரிக்க எது சிறப்பாக உதவுகிறது?"

"பொருளின் அர்த்தத்தைப் பரிசோதிப்பதே பொருட்களை அங்கிகரிக்க உதவுகிறது. அப்படிச் செய்யாவிட்டால் பொருட்களை அங்கீகரிக்க முடியாது. ஆனால் பொருளின் அர்த்தத்தைப் பரிசோதிப்பதால் பொருட்களை அங்கீகரிக்க முடிகிறது."

"ஆனால் பொருளின் அர்த்தத்தைப் பரிசோதிக்க எது சிறப்பாக உதவுகிறது?"

"அறத்தை நினைவு கூர்வதால் பொருளின் அர்த்தத்தைப் பரிசோதிக்க முடிகிறது. அப்படிச் செய்யாவிட்டால் பொருளின் அர்த்தத்தைப் பரிசோதிக்க முடியாது. ஆனால் அறத்தை நினைவு கூர்வதால் பொருளின் அர்த்தத்தைப் பரிசோதிக்க முடிகிறது."

"ஆனால் அறத்தை நினைவு கூர எது சிறப்பாக உதவுகிறது?"

"அறத்தைக் கேட்பதால் அறத்தை நினைவு கூர முடிகிறது. அறத்தைக் கேட்காவிட்டால் அறத்தை நினைவு கூர முடியாது. ஆனால் அறத்தைக் கேட்பதால் அறத்தை நினைவு கூர முடிகிறது."

"ஆனால் அறத்தைக் கேட்க எது சிறப்பாக உதவுகிறது?"

"காது கொடுப்பது அறத்தைக் கேட்கப் பேருதவியாயிருக்கிறது. காது கொடுக்காவிட்டால் அறத்தைக் கேட்கமுடியாது. ஆனால் காது கொடுப்பதால் அறத்தைக் கேட்க முடிகிறது."

"ஆனால் காது கொடுக்க எது சிறப்பாக உதவுகிறது?"

"அருகில் நெருங்கி வருவதே காது கொடுக்கப் பேருதவியாயிருக்கிறது. அருகில் நெருங்கி வராவிட்டால் காது கொடுக்க முடியாது. ஆனால் அருகில் நெருங்கி வருவதால் காது கொடுக்க முடிகிறது."

"ஆனால் அருகில் நெருங்கி வருவதற்கு எது சிறப்பாக உதவுகிறது?"

"அறத்தைக் கேட்க வருவதே அருகில் நெருங்கி வருவதற்குப் பேருதவியாயிருக்கிறது. அறத்தைக் கேட்க வராவிட்டால் அருகில் நெருங்கி உட்காரமுடியாது. அறத்தைக் கேட்க வருவதால் அருகில் நெருங்கி உட்காரமுடிகிறது."

"ஆனால் அறத்தைக் கேட்க வருவதற்கு எது சிறப்பாக உதவுகிறது?"

"நம்பிக்கை தான் அறத்தைக் கேட்க வருவதற்குப் பேருதவியாயிருக்கிறது. நம்பிக்கை இல்லாவிட்டால் அறத்தைக் கேட்க வரப் போவதில்லை. நம்பிக்கை இருப்பதால் ஒருவர் அறத்தை கேட்க வருகிறார்."

Bharadvaja asked the Lord: “What, good Gotama, is of great help in the attainment of truth? We are asking about the thing that is of great help in the attaining of truth.”

“Striving, Bharadvaja, is of great help in the attainment of truth, for if one did not strive one would not attain truth. But if one does strive one will attain truth.”

“But what is of great help to striving?”

“Weighing things up is of great help in the attainment of striving, for if one does not weigh things up one would not strive. But if one does weigh things up one will strive.”

“But what is of great help in weighing things up?”

“Making an effort is of great help in weighing things up, for if one does not make an effort one would not weigh things up. But if one does make an effort one will weigh things up.”

“But what is of great help in making an effort?”

“Desire is of great help in making an effort, for if one had no desire one will not make an effort. But if one desires one will make an effort.”

“But what is of great help in generating desire?”

“Approving of things is of great help in generating desire, for if one did not approve of something one would not generate desire. But when one approves of something one generates desire.”

“But what is of great help in approving of things?”

“Testing the meaning is of great help in approving of things, for if one does not test the meaning one will not approve of things. But if one does test the meaning one will approve of things.”

“But what is of great help in testing the meaning?”

“Remembering the Dhamma is of great help in testing the meaning, for if one does not remember the Dhamma one could not test its meaning. But if one does remember the Dhamma one can test it.”

“But what is of great help in remembering the Dhamma?”

“Hearing the Dhamma is of great help in remembering the Dhamma, for if one did not hear the Dhamma one could not remember it. But if one does hear one can remember it.”

“But what is of great help in hearing the Dhamma?”

“Lending an ear is of great help in hearing the Dhamma, for if one did not lend an ear one would not hear the Dhamma. But if one does lend an ear one will hear the Dhamma.”

“But what is of great help in leading an ear?”

“Drawing close is of great help in lending an ear, for if one did not draw close one could not lend an ear. But if one did draw close one can lend an ear.”

“But what is of great help in drawing close?”

“Visiting is of great help in drawing close, for if one did not visit one could not draw close. But if one does visit one will be able to draw close.”

“Then, what is of great help in visiting?”

“Faith is of great help in visiting, for if one did not have faith one would not visit. But if one has faith one will visit.”

M.II,174

241. அண்ணல் லோகிச்சாவைப் பார்த்து: "நீ இவ்வாறு எண்ணுவது உண்மையா? 'ஒரு துறவியோ அந்தணனோ ஒரு முக்கிய வாய்மையைக் கண்டு பிடித்தால் அதனை மற்றவருக்குத் தெரியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் ஒரு மனிதன் மற்றவனுக்கு என்ன செய்து விடப் போகிறான்? அது ஒரு பழைய பற்றைக் கத்தரித்து விட்டுப் புதிய பற்றை உண்டாக்குவது போலாம். அப்படிப்பட்ட செயல் ஒரு பற்றில் வேர் விட்ட தீய செயலாகும். ஒரு மனிதன் இன்னொருவனுக்கு என்ன செய்துவிடமுடியும்?' "

"ஆம், நற்கௌதமரே. என் எண்ணம் அதுதான்."

"லோகிச்சா இதைபற்றி நீ என்ன நினைக்கிறாய்? நீ இங்கு சாலவத்திகாவில் வாழ்கிறாய். யாராவது: 'அந்த அந்தணன் லோகிச்சா சாலவத்திகாவில் வரும் எல்லா வருவாய்களையும், உற்பத்தியாகும் பொருட்களையும் அவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும் மற்றவர்களுக்குக் கொடுக்கவே கூடாது என்று எண்ணுகிறான்,’ என்று கூறுகிறான். இப்படிப் பேசுகிறவன் உன்னுடைய வாடகைக்காரர்களுக்கு ஆபத்தாகவல்லவோ இருப்பான்."

"ஆம், கௌதமரே. அவன் அவர்களுக்கு ஆபத்தானவன் தான்."

"அது அப்படி இருக்க அவர்களுடைய நலன்களை அவன் நாடுகிறானா, இல்லையா?"

"அவன் நாடமாட்டான்."

"அப்படி இருக்கும்பொழுது, அவர்களுடைய நலத்தை நாடாதிருக்கும் பொழுது அவன் உள்ளம் அவர்களிடத்தில் அன்பு நிறைந்து இருக்குமா அல்லது பகைமை நிறைந்து இருக்குமா?"

"அவன் உள்ளம் வெறுப்புடன் இருக்கும், கௌதமரே."

"வெறுப்பு நிறைந்த உள்ளத்தில் தவறான பார்வை இருக்குமா சரியான பார்வை இருக்குமா?"

"தவறான பார்வை தான் இருக்கும்."

"தவறான நோக்கம் கொண்டிருந்தானேயானால் அவனுக்கு இரண்டில் ஒரு முடிவு விடையாகக் கிடைக்கும் - நரகத்தில் அல்லது விலங்காகத்தான் மறுபிறப்பெடுப்பான்."

The Lord said to Lohicca: “Is it true that you think like this: ‘If a monk or brahmin discovers some important truth, he should not teach it to others. For what can one person do for another? It is just as if, having cut through an old bond, one were to make a new bond. Such a thing is an evil action rooted in attachment. For what can one person do for another?’ ”

“Yes, good Gotama, that is my thinking.”

“What do you think about this, Lohicca? You reside here in Salavatika. If someone were to say: “The brahmin Lohicca should enjoy all the revenue and produce of Salavatika, allowing nothing to anyone else,” would one who speaks like this be a danger to your tenants?”

“He would, good Gotama.”

“And as such, would he be considering their welfare or not?”

“He would not.”

“And not considering their welfare, would he have a heart full of love for them, or one full of ill-will?”

“Full of ill-will, good Gotama.”

“And in a heart full of ill-will is there wrong view, or Perfect View?”

“Wrong view.”

“Now, if one holds wrong views, I say that one of two destinies results - rebirth in purgatory or as an animal.”

D.I,227

242. கொஞ்ச நாட்களிலேயே கிசா கௌதமி கர்ப்பமானாள். பத்து மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு மகனைப் பெற்றாள். ஆனால் அந்தக் குழந்தை நடக்கத் துவங்கிய சில நாட்களில் இறந்துவிட்டது. கிசா கௌதமிக்கு அதற்கு முன்பு சாவைப் பற்றித் தெரியாது. ஆதலால் அக்குழந்தையின் உடலை எரியூட்டுவதற்காக மற்றவர்கள் வந்த போது அவள் அவர்களைத் தடுத்தாள். தனக்குள்ளேயே: "என் மகனுக்கு நான் மருந்து கொடுத்துக் காப்பேன்," என நினைத்தாள். அந்தக் குழந்தையை அவள் இடுப்பில் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று: "என் குழந்தையைக் குணப்படுத்த வழி இருக்கிறதா?" என்று கெஞ்சினாள். எல்லோரும்: "பெண்ணே, இறந்த உன் மகனுக்கு நீ மருந்து தேடுவது மடமை," என்றனர். ஆனால் அவள் விடவில்லை. "உண்மையிலேயே, என் மகனுக்குச் சரியான மருந்து கொடுக்க யாராவது இருப்பார்கள். " என்று நினைத்தாள். அப்பொழுது அவளைக் கண்ட ஒரு அறிவுள்ள பெரியவர் நினைத்தார்: "நான் அவளுக்கு உதவ வேண்டும்." அவர் அவளிடம் கூறினார்: "பெண்ணே, இந்நோயைக் குணப்படுத்த எனக்குத் தெரியாதென்றாலும், எனக்குத் தெரிந்தவர் ஒருவரால் குணப்படுத்த முடியும்," என்றார்.

"ஐயா, குழந்தையைக் குணப்படுத்தக் கூடிய அவர் யார்?"

"பெண்ணே, அண்ணலுக்கு தெரியும். அவரிடம் சென்று கேள்."

உடனே அவள் அண்ணலிடம் சென்று, மரியாதை செலுத்தி, ஒரு புறம் நின்று கேட்டாள்: "மரியாதைக்குரிய ஐயா, சிலர் கூறுவதைப் போல என் குழந்தையைக் காப்பாற்ற உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?"

"ஆம், தெரியும்."

"நான் என்ன செய்ய வேண்டும்?"

"சிறிது கடுகு கொண்டுவரவேண்டும்."

"நான் கொண்டு வருகிறேன். நான் எந்த வீட்டிலிருந்து கடுகு வாங்கி வரவேண்டும்?"

"ஒருவரின் மகனோ, மகளோ அல்லது வேறு யாராவதோ இறக்காத வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்."

"நன்று ஐயா," என்று கிசா கௌதமி கூறி அண்ணலை வணங்கி விட்டு அந்த இறந்த குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு கிராமத்துக்குச் சென்று அந்தக் கிராமத்தின் முதல் வீட்டிற்குச் சென்றாள்.

"உங்களிடம் கொஞ்சம் கடுகு இருக்குமா? அது என் குழந்தையைக் குணப்படுத்தும் என்கிறார்கள்." அவர்கள் அவளுக்கு கடுகைக் கொடுத்தார்கள். அப்பொழுது அவள் கேட்டாள்: "நண்பரே, இந்த வீட்டில் மகனோ, மகளோ இறந்திருக்கிறார்களா?"

"என்ன கேள்வி கேட்கிறாய், பெண்ணே. வாழ்பவர்கள் தான் குறைவு. இறந்தவர்களோ அதிகம்." என்றனர். "அப்படியென்றால் நீங்கள் கொடுத்த கடுகைத் திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கடுகு என் மகனைக் குணப்படுத்தாது." என்று கூறி வாங்கிய கடுகைத் திருப்பிக் கொடுத்தாள். இப்படியே ஒவ்வொரு வீடாகச் சென்று அலைந்து பார்த்தும் அவளுக்குத் தேவைப்பட்ட கடுகு கிடைக்கவில்லை.

பின் அவள் நினைத்தாள்: "இது மிகக் கடினமான வேலையாக இருக்கிறதே. நான் நினைத்தேன், நான் மட்டுந்தான் உலகில் குழந்தையை இழந்திருக்கிறேன் என்று. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும், இருப்பவர்களை விட இறந்தவர்களே அதிகம்."

இப்படி நினைத்தவுடனேயே அவளது நடுக்கம் நீங்கி மனம் ஒரு நிலைப்பட்டது.

In due time Kisa Gotami became pregnant and after ten lunar months she gave birth to a son. But the child died as soon as he was able to walk. Kisa Gotami had not known death before and when they came to remove the child's body for cremation, she refused to let them do so, saying to herself: “I will get medicine for my son.” Placing the dead child on her hip, she went from house to house, pleading: “Do you know a cure for my son?” Everyone said to her: “Woman, you are completely mad in seeking medicine for your son,” but she went away, thinking: “Truly, I will find someone who knows the right medicine for my child.” Now a certain wise man saw her and thought to himself: “I must help her.” So he said: “Woman, I do not know if there is a cure for your child, but there is one who will know and I know him.”

“Sir, who is it who will know?”

“Woman, the Lord will know. Go and ask him.”

So, she went to the Lord, paid reverence to him, stood at one side and asked: “Venerable sir, is it true as people say that you will know a cure for my child?”

“Yes, I know.”

“What then do I need?”

“A few mustard seeds.”

“I will get them, Venerable sir, but in whose house?”

“Get them from a house where no son or daughter or any other person has ever died.”

“Very well, sir,” Kisa Gotami said, and having paid reverence to the Lord, and having placed the dead child on her hip, she went to the village and stopped at the very first house.

“Have you any mustard seeds? They say they will cure my child.” They gave her the seeds, and then she asked: “Friend, has any son or daughter died in this house?”

“What do you ask, woman? The living are few and the dead are many.” “Then take back your seeds, for they will not cure my child,” she said, and returned the seeds they had given her. In this way she went from house to house but never did she find one that had the mustard seeds that she needed. Then she thought: “Oh! It is a difficult task that I have. I thought it was only I who had lost a child, but in every village the dead are more than the living.” While she reflected thus, her heart which had trembled now become still.

Dhp-a.273*

243. கேவலமான குற்றவாளி இரட்டைப் பிடியுள்ள இரம்பத்தால் உங்கள் கை கால்களைத் துண்டிக்கும் போது

உங்கள் உள்ளத்தைப் பகைமையால் நிரப்பிக் கொண்டால்

உங்களை என் போதனைகளைப் பின் பற்றுபவராகக் கூறமுடியாது.

Even if low-down criminals should cut you limb from limb with a double-handled saw, if you filled your mind with hatred, you would not be practicing my teachings.

M.I,129