ஜாதுக்கண்ணின்-மாணவ-பூச்சா Jatukanni-manava-puccha

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 5.11

ஜாதுக்கண்ணின்-மாணவ-பூச்சா: ஜாதுக்கண்ணின் கேள்வி

Jatukanni-manava-puccha: Jatukannin's Question

Translated from the Pali by: Thanissaro Bhikkhu

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு

* * *

[ஜாதுக்கண்ணின்:]

புலன் இன்பங்களை வேண்டாத,

வெள்ளத்தைத் தாண்டிய

வீரரைப் பற்றிக் கேள்விப்பட்டு நான்

ஒரு கேள்வியுடன் வந்துள்ளேன்:

அமைதி நிலையைப் பற்றிக் கூறுங்கள்,

பிரகாசமான ஞானக்கண் உடையவரே.

அண்ணலே,

உள்ளது உள்ளபடி அதைப் பற்றிக் கூறுங்கள்.

ஏனென்றால் பகவர்

புலன் இன்பங்களுக்கு மேம்பட்டு

வாழ்கின்றவர்,

பிரகாசிக்கும் கதிரவன்

அதன் ஒளிச்சுடரின் காரணமாகப்

பூமியைவிட மேம்பட்டு இருப்பது போல.

எனது விவேகம் எல்லையுடையது,

உங்கள் மெய்ஞ்ஞானமோ ஆழமானது.

தம்மத்தை -

பிறப்பையும், மூப்பையும்

கைவிடும் அந்த வழியைக் கற்பியுங்கள்.

[Jatukannin:]

Hearing that there was a hero —

desiring no sensuality,

having crossed over the flood —

I've come with a question:

Tell me the state of peace,

O One with quick eyes. O Blessed One,

tell me

as it actually is.

For the Blessed One lives

having surpassed sensuality,

as the radiant sun, in its radiance,

the earth.

Limited my discernment,

O One whose discernment's profound.

Teach me to know the Dhamma,

the abandoning here

of birth

and aging.

[புத்தர்:]

புலன் இன்பங்களுக்கான அவாவை அடக்கி,

துறவறத்தை (எளிமையை) ஓய்வென்று கருதிக்கொள்.

எதனையும் பற்றவும் வேண்டாம்,

நிராகரிக்கவும் வேண்டாம்.

முடிந்து போனதை எரித்துவிடு,

வரப்போவதற்கு ஏங்காதே.

இரண்டுக்கும் இடையில் உள்ள எதையும்

பற்றிக் கொள்ளா விட்டால், [1]

அமைதியாக இருப்பாய்.

அரு-வுருவுக்கு (அருவம் - மனம், உருவம்- உடல்) முழுமையாக ஆசைப்படாத

பிராமணர்

மாரனின் வலையில்

சிக்கிக் கொள்ளும் மாசுகள் இல்லாதவர்.

[The Buddha:]

Subdue greed for sensual pleasures,

and see renunciation as rest.

Let there be nothing grasped

or rejected by you.

Burn up what's before,

and have nothing for after.

If you don't grasp

at what's in between, [1]

you will go about, calm.

One completely devoid of greed

for name and form, brahman,

has

no effluents

by which he would go

under Mara's sway.

* * *

விளக்கம்:

Note:

1. According to Nd.II, "before" stands for defilements related to the past, "after" for defilements related to the future, and "in between" for the five aggregates — form, feeling, perception, thought-fabrications, sensory consciousness — in the present.

"முடிந்தது" என்பது கடந்தகாலத்தில் நிகழ்ந்த கிலேசங்களையும்,

"வரப்போவது" என்பது எதிர்காலத்தில் உருவாகக்கூடிய கிலேசங்களையும்,

"நடுவில்" என்பது நிகழ்கால ஐந்து கந்தங்களான - உருவம், நுகர்ச்சி, குறிப்பு, எண்ணக்கட்டுமானங்கள் மற்றும் உணர்வையும் குறிக்கும்.

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1994 Thanissaro Bhikkhu. See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.