மஹா பரிநிப்பாண சூத்திரம் - முன்னுரை

முகப்பு முன்னுரை I II III IV V VI

மஹா பரிநிப்பாண சூத்திரம்

மகத்தான முழு வீடுபேறு பிரசங்கம்

Mahā Parinibbāna Sutta (DN 16)

The Great Total Unbinding Discourse

முன்னுரை

Introduction

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு

translated from the Pali by Thanissaro Bhikkhu

Source

Source

பாலி மொழியில் நிப்பாண என்றால் நெருப்பை அணைத்தல் என்று பொருள்படும். அக்காலத்தில் நிலவிய நெருப்பைப் பற்றிய கருத்துக் கேற்ப, புத்தர் தான் கற்பித்த ஆன்மீக வாழ்க்கையின் குறிக்கோளுக்குக் கொடுத்த பல பெயர்களுள் 'நிப்பாண' என்பதும் ஒன்று. அதாவது எரியும் நெருப்பு தனது எரி பொருளோடு பற்றுக் கொண்டுள்ளபடியால் சூடான கிளர்ச்சியான நிலையில் உள்ளது. நெருப்பு அணையும் போது, எரி பொருளோடு உள்ள பற்றினை விட்டுவிட்டு விடுதலை நிலையை அடைந்து, குளுமையாகி, அமைதியடைகிறது. பற்றை விட்டு, விடுதலை அடைவதும், அமைதி பெறுவதும் தான் பௌத்த வாழ்க்கையின் நோக்கம் என்பதால் நிப்பாண என்ற வார்த்தை இங்கு மிகப் பொருத்தமாக உள்ளது. மேலும் இந்தச் சொல்லின் இலக்கணத்தைப் பொறுத்தவரை, இது இரண்டு வார்த்தைதளின் சேர்க்கையினால் தோன்றியதாகக் கருதப் படுகிறது. அதாவது 'நிர்' + வாண என்பதன் கூட்டு. ‘நிர்’ என்பது எதிர்ச்சொல். மற்றும் 'வாண' - கட்டு. ஆக நிர் + வாண என்பது கட்டு என்பதற்கு எதிர்ச்சொல் என்பதால் 'கட்டு நீக்குதல்' அல்லது விடுதலை பெறுதல் அல்லது வீடுபேறு என்று பொருள் படும். [1]

Nibbāna originally was the Pali word for extinguishing of a fire. The Buddha employed it as one of the names of the goal he taught, in light of the way in which the processes of fire were viewed at his time: A burning fire was seen as clinging to its fuel in a state of hot agitation. When going out, it let go of its fuel and reached a state of freedom, cooling, and peace. These were thus the primary associations of this term when applied to the Buddhist goal. Given this understanding of fire, the term nibbāna apparently was derived etymologically from the negative prefix, nir, plus the root vāṇa, or binding: unbinding. The associated adjective is nibbuta: unbound. The associated verb, nibbuti: to unbind.

பரிநிப்பாணா - முழு வீடுபேறு - என்ற வார்த்தை திரிபிடகத்தில் இரண்டு பொருள் கொண்டுள்ளது. ஒரு புத்தரோ அவரது அரஹந்து சீடர்களோ முழு விழிப்பை அடையும் கணத்தில் உள்ள விடுதலையை அது குறிக்கும். (மன மாசுகள் நிரந்தரமாக நீங்கிய விடுதலையைக் குறிக்கும்.) இது ஒரு பொருள். அத்தகையோர் (புத்தர் அல்லது அவரது அரஹந்து சீடர்கள்) இறக்கும் போது பெறும் விடுதலையைக் குறிப்பது பிறிதொரு பொருள். (இறக்கும் போது உள்ள விடுதலை என்பது மறுபிறப்பெடுக்காததால் உள்ள விடுதலை. மீண்டும் பிறப்பெடுத்து மூப்பு, பிணி, சாக்காடு என்ற உடல் துக்கங்களை அனுபவிப்பதில்லை) இந்தச் சூத்திரத்தின் தலைப்பு இரண்டாம் பொருளைக் கொண்டது. புத்தரின் மரணத்தை மையமாகக் கொண்டது. தலைப்பில் உள்ள 'மஹா' என்பது அதனைப் பின் தொடரும் இரு வார்த்தைகளான 'பரி நிப்பாணா' மற்றும் 'சூத்திரம்' இரண்டுக்கும் பொருள் சேர்க்கிறது. பௌத்த மரபில் புத்தரின் மரணம் தானே முக்கியமான பரிநிப்பாணம்! மேலும் இந்தச் சூத்திரம் தான் பாலி திரிபிடகத்திலேயே நீளமான சூத்திரம்.

Parinibbāna—total unbinding—carries two meanings in the Canon. On the one hand, it denotes the unbinding that happens at the moment of full awakening, either for a Buddha or for one of his arahant disciples. On the other, it denotes the unbinding that happens when such a person dies and is no longer reborn. In the title of this sutta, the term has this second meaning, centered on the Buddha’s death. The word mahā, “great,” in the sutta’s title modifies both “parinibbāna” and “sutta.” In other words, it states both that the sutta is long—it’s the longest in the Pali Canon—and that the Buddha’s death is the most important parinibbāna in the Buddhist tradition.

இந்தச் சூத்திரம் புத்தர் பரிநிப்பாணம் அடைந்ததற்கு முந்தைய ஓராண்டு காலத்தில் நடந்த சம்பவங்களையும், அதற்குப்பின் சில வாரங்களில் நடந்த சம்பவங்களையும் விவரிக்கிறது. புத்தரின் மறைவுக்குக் கொஞ்ச காலத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள் துல்லியமாக நடந்தவை நடந்தபடியே விவரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவையாகத் தெரியவில்லையென்றாலும் அவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால் சூத்திரத்தை முழுமையாகப் பார்க்கும் போது சம்பவங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப் பட்டதாகவே தெரிகிறது. திரிபிடகத்தின் மற்ற சூத்திரங்களிலிருந்து அப்போது நடந்த அனைத்துச் சம்பவங்களும் இந்தச் சூத்திரத்தில் முழுமையாகச் சேர்க்கப் படவில்லையென்பதும் நமக்குத் தெரிய வருகிறது. உதாரணமாக, போ.சாரிபுத்திரர் இந்தச் சூத்திரத்தின் முற்பகுதியில் தோன்றுகிறார். ஆனால் SN.47.13 தின்படி (சங்குயத்த நிகாயத்தில் வரும் ஒரு சூத்திரம்) சாரிபுத்திரர் புத்தர் இறப்பதற்கு முன்பே இறந்து விட்டதாகவும், அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது புத்தர் சாவத்தியில் இருந்ததாகவும் தெரிய வருகிறது. ஆனால் இந்த இரண்டு செய்திகளும், (போ. சாரிபுத்திரர் இறந்ததும், அந்தச் செய்தி புத்தருக்குத் தெரிய வந்ததும்) இந்தச் சூத்திரத்தில் சேர்க்கப் படவில்லை. அதே சமயம் இந்தச் சூத்திரத்தின் தொடர் நடை, பழங்காலத்தில் இந்திய இலக்கியங்களின் கவிதை நடைமுறையைப் பின்பற்றி உள்ளது. அதாவது இந்தச் சூத்திரம் இவ்வாறு தொகுக்கப் பட்டதற்கான காரணம், வியப்பை அல்லது உணர்ச்சி வசப்படுத்துகிற சுவையை உண்டாக்குவதற்காகவே எனத் தோன்றுகிறது.

எந்த ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதின் நோக்கமும் இரண்டு நிகழ்ச்சிகளில் அக்கறை செலுத்துகின்றன. இந்த சூத்திரமும் அதே நோக்கத்தின் அடிப்படையையே அக்கறையாகக் கொண்டுள்ளது. (1) மறைந்தவர் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர் என்பதைக் காட்ட, மற்றும் (2) அந்த மாமனிதர் காட்டிய நல்வழிப்படி தொடர்ந்து நாம் நடந்து காட்ட வேண்டியதின் முக்கியத் துவத்தை விளக்கிக் கூற.

Two main concerns seem to have determined the shape of the narrative, concerns that are common to any memorial: the desire (1) to show that the person memorialized was worthy of love and respect, and (2) to indicate the importance of continuing to live by the good traditions that the person established.

இந்த இரன்டு நோக்கங்களும் சூத்திரத்தின் துவக்கத்தில் விவரிக்கப்படும் சம்பவத்தில் அடங்கியுள்ளன: வஜ்ஜியர்களைத் தாக்க வேண்டும் என்று (மகத) மன்னன் அஜாதசத்து உணர்ச்சிகரமாகப் பேசுகிறான். அவனுடைய முதல் மந்திரியான வஸ்ஸகாரரை அனுப்பி இதைப் பற்றிப் புத்தரின் அறிவுரையைக் கேட்டுவரக் கட்டளையிடுகிறான். போரைப் பற்றிப் புத்தரிடம் அறிவுரை கேட்க வேண்டும் என்று நினைப்பதே இந்த அரசன் ஒரு ஆன்மீகக் குருடன் என்பதைத் தெளிவு படுத்துகிறது. அதே சமயம் இந்தச் சம்பவம் பல முக்கியமான காரியங்களைத் தெளிவு படுத்துகிறது. முதலில் சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பலரும், புத்தருக்கு மரியாதை காட்டினார்கள் என்பதை இது தெரிவிக்கிறது. புத்தருக்கு இருந்த செல்வாக்கை அவர் நன்கு பயன் படுத்தி, அவர் தந்த மறைமுகமான பதில்களின் மூலம் போரைத் தடுத்து விடுகிறார். ஆனால் பிற்காலத்தில் நடந்த வரலாற்றின்படி வஸ்ஸகாரரும், அஜாதசத்துவும் இரத்தம் சிந்தாமலேயே (போர் புரியாமல்) வஜ்ஜியரைத் தோற்கடித்து விடுகின்றனர். எப்படி? வஜ்ஜியரின்நல்ல பண்புகளைச் சீர்குலைப்பதன் மூலம் அவரை வென்று விடுகின்றனர். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்

1. நல்ல பழக்கங்கள் தானாகப் பராமரிக்கப் படுவதில்லை. 2. அவற்றைச் சீர்குலைக்க உலகில் சில தீயசக்திகள் உள்ளன.

புத்தரும் வஜ்ஜியர்களுக்குத் தான் கற்பித்த நல்ல பழக்கங்களையும் - அவர்கள் பிற்காலத்தில் பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர் - சங்கத்திற்குத் தான் கற்பித்த நல்ல பழக்கங்களையும் ஒப்பிடுகிறார். இவை இரண்டும் சமமானவை என்பதையும் புத்தர் சுட்டிக் காட்டுகிறார். முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவெனில் புத்தர் சங்கத்தை நல்ல நிலையில் விட்டுச் சென்றிருந்தாலும், சங்கம் தொடர்ந்து உயிர்ப்போடு செயற்பட்டிருக்க வேண்டு மென்றால் அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து கவனமாக, விழிப்புடன், எச்சரிக்கையுடன் (ஒழுக்கம் கெடாமல், தவறான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல்) நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்.

ஆக இந்தச் சூத்திரத்தின் முதல் அக்கறையை – அதாவது, புத்தருக்கு மரியாதை செலுத்துவது மிகவும் பொருத்தமானது என்பதை - தெளிவாகக் காட்டினாலும், இரண்டாவது அக்கறையை - அவர் போதனைகள் அழியாது தொடர்ந்து இருக்க வேண்டியது பற்றி - ஒரு திறந்த கேள்வியாகவே விட்டு விடுகிறது. இதனால் அக்கறையுடன் இந்தச் சூத்திரத்தைப் படிப்பவர் இந்தப் போதனைகளைக் காப்பாற்றுவதில் தங்களுக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை உணர வேண்டும். (அதாவது படிப்பவர் புத்தரின் போதனைகளின் படி அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் போதனைகளும் நாளடைவில் மறைந்துபோய் விடும்.)

இந்தச் சூத்திரத்தில் தொடர்ந்து வரும் சம்பவங்கள் எல்லாம் இந்த இரண்டு நோக்கங்களைக் (புத்தருக்கு தரும் மரியாதை, அவர் போதனைகளை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம்) கருத்தில் கொண்டே நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன.

புத்தர் மரியாதை பெறுவதற்குத் தகுதியானவர் என்பதைக் காட்ட இந்தச் சூத்திரத்தைத் தொகுத்தவர்கள் முதல் சம்பவத்தில் காட்டப் பட்டது போல இரண்டு வழிகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். ஒரு வழி நேரடியான வழி: புத்தர் தனது வாக்கினாலும், நடத்தையினாலும் தனது மேன்மையான இயல்பினைக் காட்டுகிறார். இரண்டாம் வழி மறைமுகமான வழி: மரியாதைக்குரிய மக்கள் புத்தருக்கு எப்படி அஞ்சலி செலுத்தினார்கள் என்பதைக் காட்டி, புத்தர் எப்படி மரியாதைக்குரியவர் என்பதை விளக்கு கின்றனர்.

புத்தர் மரியாதைக்குரியவர் என்பதை நேரடியாக எவ்வாறு காட்டுகிறது? அவர் ஒரு ஆசிரியர் என்பதால் அவரது கற்பிக்கும் ஆற்றலைத் தெளிவு படுத்துகின்றனர் – ‘தம்ம’ விளக்கங்களில் அவருக்கிருந்த முழுமையான அறிவு, ஆழமான நினைவாற்றல், அவருக்குத் தெரிந்ததைச் சோர்வடையாமல் கற்பிக்க அவருக்கிருந்த விருப்பம் ஆகியவை இதைத் தெளிவு படுத்துகின்றன. மேலும் புத்தருக்கிருந்த ஆழமான தியான ஆற்றலையும் இந்தச் சூத்திரம் சுட்டிக் காட்டுகிறது. மனதை ஒருமுகப் படுத்துவதில் அவருக்கிருந்த ஆற்றலையும் (புக்குஸ மல்லபுத்திரர் என்பவரிடம் அவர் பேசியதை வைத்தும், அவர் இறப்பதற்கு முன் மனத்தை ஒருமுகப் படுத்துவதில் அவர் பெற்ற பேற்றினையும் கடைசியாக ஒரு முறை காட்டுவதிலிருந்தும்) மற்றும் அந்த ஒருமுகப்படுத்துதலினால் அவர் அடைந்த சித்த சக்திகளையும் காட்டுகிறார்: தேவர்களைக் காண்கிறார், அவர்கள் அறியாமலேயே அவர்கள் வாழும் சொர்க்கலோகங்களுக்குச் செல்கிறார், நதியைச் சித்த சக்தியால் கடக்கிறார், எதிர்காலத்தில் நடைபெற இருப்பதைப் பற்றிக் கூறுகிறார், முற்பிறவிகளைப் பற்றிக் கூறுகிறார், மற்றவர் மனத்தைத் தெரிந்திருக்கிறார். மேலும் தனது மரணத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு வைத்திருக்கிறார்: அவர் தான் கடைசி முறையாக நோய்வாய் படுவதற்கு முன் நோயைக் கட்டுப் படுத்துவதிலிருந்தும், தான் எங்கு எப்பொது மரணமுறுவது என்பதை அவரே முடிவு செய்வதிலிருந்தும் இது தெரியவருகிறது. மேலும் மீண்டும் பிறப்பெடுக்காவண்ணம் இறப்பதும், அவரது கட்டுப் பாட்டிலேயே அவரது மரணம் நிகழ்கிறது என்பதை விளக்குகிறது.

மேலும் அவரது தனிப்பட்ட பண்புகளை இந்தச் சூத்திரத்தில் நடைபெறும் சம்பவங்கள் தெளிவு படுத்துகின்றன. கடைசியாக இருமுறை நோய்ப்படுவதற்கு முன் புத்தர் காண்பிக்கும் பொறுமை - குறிப்பாகச் சீதபேதியினால் துன்புற்றிருந்தும் தமது கடைசி ஓய்விடம் செல்ல நாள் முழுவதும் நடந்து செல்வதும், அதே சமயம் தான் இறக்கும் அன்றைக்கும் தமது அன்பை, செய்நன்றி மறவாமல் அவரது அணுக்கத் தொண்டரான போ. ஆனந்தருக்கும், அவருக்குக் கடைசியாக ஆகாரம் தந்த இல்லறத்தார் சுண்டருக்கும் ஆறுதல் கூறுகிறார்; முன்கூட்டியே மல்லர்களுக்குத் தெரியப் படுத்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பைத் தருகிறார்; சுபத்தர் என்ற புதிய மாணவருக்கு இறுதியாக ஒருமுறை கற்பிப்பதும்; இறப்பதற்கு முன் எதேனும் கேள்விகள் இருந்தால் தான் பதில் கூறுவதற்கு விருப்பம் தெரிவிப்பதும் - அவரது பண்புகளைத் தெளிவு படுத்துகின்றன.

இந்தச் சூத்திரத்தில் புத்தருக்கு எத்தகைய மரியாதை காட்டப் படுகிறது? முக்கியமாகப் பல அற்புதங்கள் நடைபெறுவதாகப் பல இடங்களில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. அதாவது இயற்கைச் சக்திகளும் அவருக்கு மரியாதை காட்டுவதாகத் தெரிவிக்கிறது: மண் கலந்திருந்த நதியின் நீர் அவர் குடிப்பதற்காகவே தெளிவடைகிறது; அவரின் ஒரு முக்கிய சீடரான போ. மஹா கஸ்ஸப்பர் (நீண்ட தூரத்திலிருந்து வந்து) அவருக்கு மரியாதை செலுத்தியவுடன், பகவரது ஈம விறகு தானாகப் பற்றி எரிகிறது.

அரசர்களும், அமைச்சர்களும், இளவரசர்களும் போட்டி போட்டுக் கொண்டு புத்தருக்கு மரியாதை செலுத்துகின்றனர். தேவர்களும் அவருக்கு மரியாதை செலுத்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இவர்களெல்லாம் புத்தருக்குச் செய்த அஞ்சலி முறைகளைக் கொண்டு இந்தச் சூத்திரம் பல பௌத்த தலைமுறையினருக்கு எப்படி மரியாதை செலுத்துவது என்பதைக் கற்பித் திருக்கிறது. குறிப்பாக ஐந்து செய்திகளைக் குறிப்பிடலாம்:

In showing how these figures paid homage to the Buddha, the sutta has taught many generations of Buddhists the etiquette of respect. Five points in particular stand out:

1. புத்தரின் அருகிலிருந்து விடைபெறும்போது அவரை வலம் சுற்றி வருதல். பிற்காலத்தில் புத்தர் தகனம் செய்யப்பட்ட பிறகு அங்கிருந்த சாம்பலையும், எலும்பு, பல் போன்ற மீதமிருந்தவைகளைப் பிரித்து அவற்றைப் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் சென்று அதன்மீது ஸ்தூபிகள் கட்டப் பட்டன. இந்தச் சூத்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதுபோல, புத்தர் உயிருடன் இருந்த போது அவரிடமிருந்து விடைபெறுமுன் அவரை வலம் வந்தது போலவே ஸ்தூபிகளும் வலம் வரப்பட்டன.

Most common is the act of circumambulation on leaving the Buddha’s presence. This became the common way of showing respect to the Buddha’s remains and to the stupas, or memorials, that enshrined them.

2. பாகம் ஐந்தில் (V) தேவர்கள் "கண்" பார்க்க விரும்புவதும் ஒரு பண்டைய வேத காலத்திலிருந்து தொடரப்பட்ட வழக்கமாகும். புனிதமான ஒருவர் 'சுற்றியுள்ள அனைத்தையும் பார்க்கும் ஞானக் கண் படைத்தவர்' (ஆரம்பகாலப் பாலி செய்யுட்களில் இது புத்தரின் ஒரு விகடப்பெயர்) எனக் கருதப் பட்டது. அப்படிக் கண்ணைப் பார்ப்பது மங்களகரமான செயல் என்றும் கருதப் பட்டது. (பெரியோரைத் தரிசித்தல்). பிற்காலத்தில் புத்தரின் உருவச்சிலையைப் பார்த்து அல்லது அந்த உருவச்சிலையின் கண்களைப் பார்த்துத் தியானம் செய்வது பொதுவான வழக்கமானது.

When, in Part V, the devas want to gaze at the “Eye,” they are carrying on an ancient Indian tradition, going back to Vedic times, of regarding a holy being as an all-around eye (one of the epithets of the Buddha in early Pali poetry) and the act of gazing into such an eye as an auspicious one. In later centuries, it became a common meditation practice to stare at a Buddha image or into the image’s eyes.

3. மல்லர்கள் புத்தருக்கு அஞ்சலி செலுத்தும் போது ஒவ்வொருவராக அவர்கள் பெயரைச் சொல்வதும், ஒரு பழங்கால இந்திய மரபு வழியாகும். புத்தருக்கு முன் தலை வணங்குவதை அவர்கள் வெட்கிக்கத் தக்க செயல் என்று கருதவில்லை என்பதைத் தெரிவிக்கின்றனர். பிற்காலத்தில் ஸ்தூபிகளுக்குத் தானமாக வழங்கப்பட்ட பொருட்களில், தங்கள் பெயர்களைப் பொதிந்து வைப்பது பழக்கமானது. அப்பொருட்கள் கண்களுக்குத் தெரியவில்லையென்றாலும் பெயர் எழுதி வைக்கப்பட்டது. தானப்பொருளின் மீது பெயரை எழுதிவைப்பது இக்காலத்திலும் பௌத்த உலகில் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகிறது.

When the Mallans call out their names while paying final homage to the Buddha, they are also carrying on an ancient Indian tradition, proclaiming that they are not ashamed to be known for bowing down to the Buddha. This later led to the tradition of inscribing one’s name on items donated to stupas, even if the items were to be placed where the inscription could not be seen. The act of putting one’s name on a donation continues within the Buddhist world to this day.

4. புத்தரின் மரணத்திற்குப் பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்ட பின்பும், மல்லர்கள் அவரது உடலுக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்தும் வகையில் ஆடல், பாடல், இசை, பூமாலைகள், வாசனைத்திரவியம், துணியிலான பந்தல், நினைவிடங்களில் வைக்கப்படும் கொத்துமாலை எனப் பல வழிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இன்றும் ஸ்தூபி விழாக்களின் போது பௌத்த ஆசியாவில் தொடர்ந்து அவ்வாறே கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

When, after the Buddha’s death and again after his cremation, the Mallans venerate his body with dances, songs, music, garlands, & scents, in making cloth canopies and arranging floral wreaths, they are establishing the precedent for the stupa festivals that have been popular throughout Buddhist Asia ever since.

5. இறுதியாகப் புத்தரே தமது ஈமச்சடங்குகள் எப்படி நடத்தப்பட வேண்டும், அவரது ஸ்தூபிகள் எப்படி விஜயம் செய்யப் பட்டு, பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதால் இந்தச் சூத்திரம் ஸ்தூபி மற்றும் கோயில் சமய வழிபாட்டிற்கு ஒரு அடித்தலமானது.

And of course, when the Buddha himself is depicted as describing how his funeral should be held and how his stupas should be visited and contemplated, the sutta establishes a foundation for the cult of stupas and pagodas as a whole.

புத்தர் இங்கு கூறியிருப்பது போல ஸ்தூபிகளைப் பிரதிபலிப்பது மரியாதை செலுத்துவதற்கு மட்டுமல்லாமல், 'சம்வேகா' (saṁvega) என்ற உணர்ச்சியையும் தூண்ட வேண்டும் என்கிறார். ‘சம்வேகா’ என்ற உணர்ச்சியின் பொருள் - நிலையாமையும், நிச்சயமற்ற தன்மையும் வாழ்வில் இருப்பதால் - அதன் காரணமாக ஒரு அவசரமும், அச்சமும் - எப்போதும் இருக்க வேண்டும் என்பது தான். புத்தர் செய்த மனவெழுச்சி பற்றிய பகுப்பாய்வின்படி சம்வேகா, ஆன்மீகப் பயிற்சி செய்வதற்கு, குறிப்பாக 'பசாதா' (pasāda) என்ற மற்றொரு எண்ணத்தோடு சேர்ந்திருக்கும் போது, ஒரு முக்கிய உந்துதலாக இருக்கிறது என்பதுதான். பசாதா என்றால் பயிர்ச்சி செய்தால் அந்த உறுதியற்ற தன்மையிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கை. இந்தச் சம்வேகா மற்றும் பசாதா என்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதால் இந்தச் சூத்திரம் தனது இரண்டாவது அக்கறையைப் பின்தொடர ஊக்குவிக்கிறது - அதாவது நல்ல பௌத்தப் பாரம்பரியத்தை தொடரவேண்டியதன் முக்கியத்துவம் - தனிப்பட்ட ஒருவரின் பயனுக்காகவும், சமூதாயத்தின் நலத்திற்காகவும் அவற்றைத் தொடர வேண்டும் என்று படிப்பவருக்கு ஊக்கமளிக்கிறது.

As the Buddha states here, the purpose of such contemplation is not simply to show respect but also to give rise to feelings of saṁvega—urgency and dismay—over the impermanence and inconstancy of life. In the Buddhist analysis of emotions, saṁvega is one of the primary motivations for practice—especially when coupled with pasāda, confidence that the practice leads to freedom from that inconstancy. By inducing feelings of both saṁvega and pasāda, the sutta attempts to inspire its listeners to adopt its second major concern—the need to maintain good Buddhist traditions—both for their own individual sakes and for the sake of the common good.

தம்மமும், சங்கமும் நீண்ட காலம் தொடர்வதற்கான புத்தரின் அறிவுரைகளையே இந்தச் சூத்திரத்தின் இறுதிப் பகுதிகள் விவரிக்கின்றன. சூத்திரம் தொடங்கும் போது சங்கம் ஒற்றுமையோடு இருக்கப் பல்வேறு குறிப்புகளைக் கூறுகிறார். தனக்குப் பின்னர் எவரொருவரையும் தலைவராக நியமிக்காமல், தான் கற்பித்த தம்மமும், விநயமும் (ஒழுக்க நியதிகள்) தனக்குப் பின்னர் வழிகாட்டுபவையாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் தம்மமும், விநயமும் எவ்வாறு கருதப்பட வேண்டும் என்பது விழிப்புக்கு எடுத்துச் செல்லும் சிறகுகள் ('Wings to awakening' / 'bodhi-pakkhiya-dhamma') என்பதில் அடங்கும் அவரது போதனைகள் தான் பௌத்தத்தின் முக்கியமான போதனைகள் என்றும் கூறுகிறார். (bodhi வீடுபேறு-pakkhiya எடுத்துச்செல்லும் -dhamma இயல்புகள்). யாராவது போதிப்பது புத்தரது போதனை யென்று கூறினால் சொல்வதைச் சொல்பவரின் அதிகாரத்தை வைத்து நம்பக் கூடாது என்றும், அந்தப் போதனை தரமான, ஏற்றுக் கொள்ளப்பட்ட பௌத்த போதனைகளுக்கு நிகரானவையா என்று பார்த்தபின் அவற்றைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் கூறுகிறார்.

Toward this end, the sutta narrates many of the Buddha’s own instructions for how to maintain the life of the Dhamma and Saṅgha for a long time. As the sutta opens, he provides several lists of instructions for how the Saṅgha is to stay harmonious. Instead of appointing an individual as his successor, he identifies the Dhamma and Vinaya he has taught and expounded as his successor, at the same time establishing standards for how the Dhamma and Vinaya are to be known: citing the Wings to awakening as his most central teachings, and insisting that any teachings claimed to be his should be judged, not on the authority of the person making the report, but on the consistency of those teachings with teachings already known to be standard.

தனிநபர்கள் தம்மத்தை அடைக்கலமாகக் கொள்ள வேண்டியதின் முக்கியத்துவத்தைப் புத்தர் வலியுறுத்துகிறார். தம்மத்தை - மனக்கவனத்தின் அடித்தலங்களைப் (Four foundations of mindfulness) பயில்வதன் மூலம் - உள்வாங்கிக் கொண்டால் ஒவ்வொருவரும் தங்களையே தாங்கள் அடைகலமாக்கிக் கொள்ளலாம் என்கிறார். மேலும் அவர் ஒரு -'தம்ம-கண்ணாடி' யையும் தருகிறார். அதை வைத்து நாம் எந்த அளவுக்கு நமக்கு நாமே அடைக்கலமாக இருக்கின்றோம் என்பதைப் பிரதிபலித்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

For individuals, the Buddha stresses the need to take the Dhamma as their refuge by internalizing the Dhamma in such a way—through the four establishings of mindfulness—that they can take refuge in themselves. He also supplies a “Dhamma-mirror” so that they can judge the extent to which they have succeeded in providing themselves with this refuge.

தனிப்பட்ட துறவிகள் சரியாகப் பயிற்சி செய்தால் உலகில் அரஹந்தர்கள் மறைந்து விடாமல் தொடர்ந்து இருப்பார்கள். இது பொது நன்மைக்கும் உகந்தது.

The pursuit of the common and the individual good overlap in that when individual monks practice rightly, the world will not be empty of arahants.

இந்தச் சூத்திரத்தின் முக்கிய குறிக்கோள்கள் இரண்டும் (1. புத்தருக்குத் தரும் மரியாதை, 2. அவர் போதனைகளைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம்) ஒன்றோடொன்று மோதிக் கொள்வதையும் இறுதிப் பகுதிகளில் பார்க்க முடிகிறது: அரசர்களும், பிராமணர்களும் புத்தரின் உடல் தகனம் செய்யப்பட்ட பின் மிச்சம் இருந்தவற்றை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள விரும்பியதால் புத்தரின் போதனைகளை மறந்து கிட்டத் தட்ட, சண்டையிடுகின்ற அளவுக்குச் சென்று விடுகின்றனர். பௌத்த வரலாற்றிலிருந்து நமக்கு என்ன தெரிகிறதென்றால்: மிகுந்த ஆவலுடனும், பக்தியுடனும் பௌத்தத்தைப் பின்பற்றும்போது அது பௌத்தப் பயிற்சிக்கே கேடாக அமைவதைக் காண முடிகிறது. பக்திக்காகத் தொடங்கப்பட்ட பௌத்த ஆலயங்கள், காட்டில் வாழ்ந்து பயிற்சி செய்யும் துறவிகளுக்குப் பல இன்னல்களை உருவாக்குகின்றன. வன விகாரைகள் பலவும் பக்தி விகாரைகளாகி விட்டன. இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தச் சூத்திரம் ஒரு பொதுநிலையைக் கற்பிக்கிறது. கடைசி இரவில் புத்தர் தன்னை வணங்க வந்த தேவர்களுக்குக் கொடுத்த பதிலிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்: அவர்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் தனது அணுக்கத் தொண்டரைத் தள்ளி நிற்கச்சொல்கிறார்; அதே சமயம் தம்மத்தின் படியே தம்மத்தைப் பயில வேண்டும் [2] என்றும் ஆனந்தரிடம் கூறுகிறார். அதுவே சிறந்த வழிபாடென்றும் கூறுகிறார். இவ்வாறு வெளிப்படையாக உள்ள பக்தி வழிகளுக்கும் இடம் தந்து, அதே சமயம் அவற்றை முழு விடுதலைக்காகச் செய்யும் பயிற்சிக்குக் கீழ்ப்பணியவும் வைக்கிறார்.

One of the instructive ironies of the sutta is the way in which its two main concerns come into conflict toward the end: Kings and brahmans become so intent on gaining possession of the Buddha’s relics that they forget his teachings and almost come to war. We know from Buddhist history that devotional Buddhism has threatened the practice in other ways as well. Time and again, monks in charge of devotional centers have made life difficult for monks in the forest; forest monasteries have, with the passage of generations, devolved into devotional centers. To resolve this conflict, the sutta recommends a compromise position, shown most clearly in the Buddha’s response to the worship given by the devas on his last night: On the one hand, he honors their desire to gaze on him by telling his attendant monk to get out of the way; on the other, he tells Ānanda that the most genuine form of worship is to practice the Dhamma in accordance with the Dhamma. In this way, he makes room for external expressions of devotion, at the same time subordinating them to the practice of the Dhamma for the purpose of full liberation.

போ. மஹா கஸ்ஸபர் இந்த இரண்டு வழிபாட்டு முறைகளையும் அறிந்த ஒரு துறவியாகத் திகழ்கிறார். புத்தர் மீது அவருக்கு அளவு கடந்த பக்தியிருந்தது. அதே சமயம் அவர் மிகவும் ஒழுக்கத்துடன் பயிற்சியும் செய்பவர். அவர் இந்த இரண்டு கொள்கைகளும் முரண்பாடற்றவையாக இருக்கலாம் என்பதை வாழ்ந்து காட்டுகிறார். இந்தச் சூத்திரத்தின் முடிவில் புத்தரின் வாக்குப்படி அவருக்குப் பின் தம்மமும் விநயமும் தலைமை தாங்க வேண்டும் என்று புத்தர் கூறியபடியால், மஹா கஸ்ஸபர் அந்த தம்மமும் விநயமும் தொடர்வதற்கு வேண்டிய வழிமுறைகளைச் செய்தார். எப்படி? ஒரு வயதான துறவி புத்தர் இறந்த பின் அவரைக் குறை கூறுகிறார் - 'புத்தர் இறந்தது சங்கத்திற்கு நல்லது. ஏனென்றால் அவர் எப்போதும் எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது என்று கூறித் துறவிகளைத் தொந்தரவு செய்தார்,' என்றார். – இதைக் கேட்ட மகா கஸ்ஸபர் ஊக்கத்துடன் முதல் சங்கக் கூட்டத்தை விரைவிலேயே கூட்டினார். தம்ம, விநய விதிமுறைகள், அனைவரும் ஒத்துக் கொள்ளுமாறு ஓதப்பட்டு சீர் செய்யப்பட்டன. அந்த முதிய துறவியின் குறையைக் கேட்ட பிறகு மஹா கஸ்ஸப்பருக்கு விளங்கியது என்னவெனில் - பௌத்தத்தின் நல்ல மரபுகளுக்கு உண்டாகக் கூடிய ஆபத்து சங்கத்தின் புறத்திலிருந்து மட்டுமல்ல சங்கத்தினுள்ளேயே இருக்கக் கூடும் என்பதுதான். இந்தச் சூத்திரத்தின் முக்கிய இரு நோக்கங்களைப் பாதுகாக்க, சங்கத்தினர் எந்த அளவுக்கு முயல வேண்டும் என்பதையும் அவர் காட்டுகிறார்.

Ven. Mahā Kassapa, who appears at the end of the sutta, provides the ideal monastic figure to embody its dual ideals. Known both for his fierce devotion to the Buddha and for his strict practice, he shows that these two ideals need not be in conflict. The concluding part of the narrative also hints at the role he later played in shouldering the Buddha’s concern for the survival of the Dhamma and Vinaya that were to be the Saṅgha’s teacher in the Buddha’s place. Cv.XI tells us that the remarks made by the elderly monk after the Buddha’s passing and recorded here—that the Saṅgha is well rid of the Buddha and his harassment over what should and shouldn’t be done—were Mahā Kassapa’s inspiration for calling the First Council to standardize the Dhamma and Vinaya. As he realized from those remarks, the threats to the survival of the Buddha’s good traditions came not only from outside the Saṅgha but also—and more seriously—from within. In this way he shows the lengths to which members of the Saṅgha should be prepared to go in furthering the sutta’s two main ideals.

இந்த இரண்டு கொள்கைகளுக்கு, இல்லறத்தார் ஒருவரும், நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகிறார். அவர் தான் ‘தோனர்’ என்ற பிராமணர். அவர் புத்தரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு எஞ்சியவற்றை அமைதியாகவும், நேர்மையாகவும் தகுதியானவர்களுக்குப் பிரித்துத் தருகிறார். இவ்வாறு இல்லறத்தாரும் புத்தர் உண்டாக்கிய நல்ல மரபுகளைக் கடைப்பிடிக்க உதவ முடியும் என்பதைக் காட்டுகிறார். இந்தச் சூத்திரம் முதலில் புத்தர் ஒரு போரைத் தடுப்பதாகத் தொடங்கி, முடிவில் தோனரும் ஒரு போரைத் தடுப்பதாக் காட்டி முடிகிறது.

* * *

விளக்கம்:

வீடு - Emancipation, freedom, liberation; விடுதலை

பேறு - Receiving, obtaining; பெறுகை

[1] ( மொ.ஆ.கு: நிப்பாண என்ற வார்த்தைக்கும் ஆடையணியாமல் இருப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகப் பரவலான கருத்து உள்ளது. நிப்பாண என்பது சமஸ்கிருதத்தில் நிர்வாண எனப்படும். தமிழில் நிர்வாணம் என்றால் முத்தி நிலை என்றும், அம்மணம், (ஆடையில்லாமல் இருப்பது, பிறந்தகோலம்) என்றும் இரு பொருள் உள்ளது. இந்தக் குழப்பத்திற்கு இது ஒரு காரணம். மற்றொரு காரணம் சமணம் என்றால் சைன மதத்தை குறிப்பதாகக் கருதப் படுகிறது. ஆனால் சமணம் என்பது பௌத்தம், சைனம், (மறைந்துவிட்ட) ஆஜீவகம் போன்ற சமயங்களை குறிக்கும் பொதுச் சொல்லாகும். நிப்பாண/நிர்வாணம் என்பது சைன, பௌத் தர்கள் முத்தி அடைவதற்குப் பெயர். சைனம் இன்னும் தமிழகத்தில் முழுமையாக மறைந்து விட வில்லை. இன்றும் சுமார் எழுபது ஆயிரம் தமிழ் சைனர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பௌத்தம் தமிழகத்திலிருந்து சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முழுமையாக மறைந்து விட்டது. இதனால் சமணம் என்றால் சைனம் என்பதே பரவலாக உள்ள கருத்து. மேலும் சைன ஆண் துறவிகளில் ஒரு பிரிவினர் ஆடையில்லாமல் நாட்டில் உலவுவது இன்றும் உள்ள வழக்கம் என்பதால் நிப்பாண என்றால் ஆடையில்லாமல் இருப்பது என்ற தவறான கருத்து இடம்பெற்றதற்கு மற்றொரு காரணமாகும். பௌத்த துறவிகள் எப்போதும் சீவர ஆடைகளோடு தான் காணப் படுவார்கள். )

[2] தம்மத்தின் படியே தம்மத்தைப் பயில வேண்டுமென்றால் புத்தரின் போதனைக் கேற்ப நாம் தம்மத்தைப் பயில வேண்டும். நம் விருப்பங்களுக்கு ஏற்றது போலத் தம்மத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது; மாறாக தம்மத்துக்கு ஏற்றார்ப்போல் நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

Practicing the Dhamma in line with the Dhamma

Practicing the Dhamma in line with the Dhamma. This is the teaching that's stressed over and over again in the forest tradition: You don't change the Dhamma to suit yourself; you change yourself to fit with the Dhamma, i.e., you change your actions to fall in line with the Dhamma. That's how you develop your inner powers that can lead to true happiness, the happiness we all want. ஆதாரம் Source

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு.

Mr. P. K. Ilango M. A., Erode.