அம்பபாலி

அம்பபாலி

(பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு)

Ambapali

(translated from the Pali by Thanissaro Bhikkhu)

தேரிகதா 13.1 - அறச்செல்வியரின் கூற்று

Therigatha 13.1 - Voice of the Enlightened Nuns

எனது கருங் கூந்தல்

தேனீக்களின் நிறம் கொண்டிருந்தது;

மயிர் நுனியும் சுழன்றிருந்தது;

வயதான பின்னர்,

கரடுமுரடான சணல் நாரின்

தோற்றம் கொண்டுள்ளது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Black was my hair

- the color of bees

and curled at the tips;

with age, it looked like coarse hemp.

The truth of the Truth-speaker's words

doesn't change.

வாசனை கலந்த கூடையில்

நிரம்பிய பூக்களின்

நறுமணம் கொண்டிருந்தது (என் கூந்தல்):

வயதான பின்னர்,

ஒரு மிருகத்தின் உரோமம் போல

துர்க்கந்தம் வீசுகிறது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Fragrant, like a perfumed basket

filled with flowers:

With age it smelled musty,

like animal fur.

The truth of the Truth-speaker's words

doesn't change.

நன்றாகப் பேணப்பட்ட

செறிந்த சோலையைப்போல

அடர்த்தியான செழிப்பான முடி

அதன் நுனி சீப்பினாலும்

கொண்டை ஊசியாலும்

அலங்காரப் படுத்தப் பட்டிருந்தது.

வயதான பின்னர், அடர்த்தி குறைந்து

இங்கும் அங்கும் வழுக்கை

விழுந்து காணப்படுகிறது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Thick and lush, like a well-tended grove,

made splendid, the tips elaborate

with comb and pin.

With age, it grew thin

and bare here and there.

The truth of the Truth-speaker's words

doesn't change.

தங்கத்தாலான கொண்டை ஊசிகளால்

அலங்கரிக்கப்பட்டு

சடை வாரி நகை பூட்டி

அழகாக இருந்தது.

இப்போது வயதான பின்னர்,

அந்தத் தலை வழுக்கையாகி விட்டது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Adorned with gold and delicate pins,

it was splendid, ornamented with braids.

Now, with age,

that head has gone bald.

The truth of the Truth-speaker's words

doesn't change.

ஓவியர் வரைந்தார்ப் போன்றிருந்த

என் வளைந்த புருவங்கள்

அப்போது அழகாக இருந்தன.

வயதான பின்னர், அவை மடிந்து

தொங்கி விழுகின்றன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Curved, as if well-drawn by an artist,

my brows were once splendid.

With age, they droop down in folds.

The truth of the Truth-speaker's words

doesn't change.

அணிகலன்கள் மினுமினுப்பது போல

ஒளி வீசின என் கண்கள்:

வயதான பின்னர், அவற்றின் அழகு

குன்றிப் போய்விட்டது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Radiant, brilliant like jewels, my eyes:

With age, they're no longer splendid.

The truth of the Truth-speaker's words

doesn't change.

மென்மையான முகடு போன்று

இளமையில் எனது மூக்கு அழகாக இருந்தது.

வயதான பின்னர், அது ஒரு வால்மிளகைப்

போன்று நீண்டு தோன்றுகிறது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Like a delicate peak, my nose

was splendid in the prime of my youth.

With age, it's like a long pepper.

The truth of the Truth-speaker's words

doesn't change.

சிறந்த வேலைபாட்டுடன் நன்கு உருவாக்கப்பட்ட

வளையல்கள் போல எனது காதுகள்

அப்போது அற்புதமாக இருந்தன.

வயதான பின்னர், அவை தொங்கி

மடிந்து விழுந்து விட்டன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Like bracelets, well-fashioned, well-finished,

my ears were once splendid.

With age, they droop down in folds.

The truth of the Truth-speaker's words

doesn't change.

வாழை இளந்தளிர் போன்ற நிறத்துடன்

என் பற்கள் ஒரு சமயம் எழிலோடு இருந்தன.

வயதான பின்னர், அவை பிளவுபட்டு

மஞ்சல் நிறம் பூண்டுள்ளன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Like plaintain buds in their color,

my teeth were once splendid.

With age, they're broken and yellowed.

The truth of the Truth-speaker's words

doesn't change.

அடர்ந்த காட்டிலும், புதர்களிலும்

அங்கும் இங்கும் பறந்து திரியும்

குயிலின் இனிமையான குரல்

போன்றிருந்தது எனது குரல்.

வயதான பின்னர், அது கரடு முரடாகிவிட்டது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Like that of a cuckoo in the dense jungle,

flitting through deep forest thickets:

sweet was the tone of my voice.

With age, it cracks here and there.

The truth of the Truth-speaker's words

doesn't change.

மெருகூட்டப்பட்ட சங்கின் மேலோடு போல

பளபளப்பாக அழகு பெற்றிருந்தது எனது கழுத்து.

வயதான பின்னர் அது, ஒடுங்கி மடங்கி விட்டது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Smooth, like a conch shell well-polished,

my neck was once splendid.

With age, it's broken down, bent.

The truth of the Truth-speaker's words

doesn't change.

தச்சன் செதுக்கிய உருளைக் கட்டை போன்று

அழகாக இருந்தன என் இரு கைகளும்.

வயது முதிர்ந்த பின், அவை காய்ந்து போன

பாதிரி மரத்தைப் போலக் காணப்படுகின்றன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Like rounded door-bars, both of them,

my arms were once splendid.

With age, they're like dried up patali trees.

The truth of the Truth-speaker's words

doesn't change.

பொன்னாலும், கங்கணங்களாலும்

அலங்கரித்து அழகுபடுத்தப்பட்டிருந்தன

எனது கைகள்.

வயதான பின்னர், அவை வெங்காயம்,

முள்ளங்கிகளைப் போன்று சுருங்கித்

தோன்றுகின்றன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Adorned with gold and delicate rings,

my hands were once splendid.

With age, they're like onions and tubers.

The truth of the Truth-speaker's words

doesn't change.

திரண்டு, உருண்டு, உறுதியாக, உயர்ந்து

எழிலோடு இருந்தன எனது இரு மார்புகளும்

முதுமை என்ற வரட்சியில் அவை வெறுமையான

நீர்ப்பைகளைப் போலத் தோன்றுகின்றன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Swelling, round, firm, and high,

both my breasts were once splendid.

In the drought of old age, they dangle

like empty old water bags.

The truth of the Truth-speaker's words

doesn't change.

தங்கத்தகடு போல மெருகூட்டப் பட்டிருந்த

எனது உடல் பளப்போடு அழகாக இருந்தது.

இப்போது உடல் முழுதும் மெல்லிய

சுருக்கங்கள் விழுந்து காணப்படுகிறது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Like a sheet of gold, well-burnished,

my body was splendid.

Now it's covered with very fine wrinkles.

The truth of the Truth-speaker's words

doesn't change.

யானைத் தந்தங்களைப் போன்று

மென்மையாக வழவழப்பாக இருந்தன

எனது இரு தொடைகளும்.

முதுமையில், அவை முடிச்சு நிறைந்த

மூங்கில்களைப் போலத் தோன்றுகின்றன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Smooth in their lines, like an elephant's trunk,

both my thighs were once splendid.

With age, they're like knotted bamboo.

The truth of the Truth-speaker's words

doesn't change.

தங்கச் சிலம்புகள் அணிந்த

எனது கால்கள் அழகாக இருந்தன.

முதுமையில், அவை காய்ந்த எள்ளுக்

குச்சிகளைப் போலத் தோன்றுகின்றன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Adorned with gold and delicate anklets,

my calves were once splendid.

With age, they're like sesame sticks.

The truth of the Truth-speaker's words

doesn't change.

இலவம் பஞ்சு போன்று மென்மையோடும்,

அழகோடும் இருந்தன எனது பாதங்கள்.

முதுமையில் அவை சுருங்கி

வெடிப்புகளோடு காணப்படுகின்றன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

As if they were stuffed with soft cotton,

both my feet were once splendid.

With age, they're shriveled and cracked.

The truth of the Truth-speaker's words

doesn't change.

அன்று: அப்படி இருந்தது இந்த உடற் குவியல்.

இன்று: அது ஒரு காரை பெயர்ந்து

விழுந்து விட்ட பாழ் வீடு.

வாய்மை பேசியவரின் வார்த்தைகளில்

உள்ள உண்மை மாறுவதில்லை.

Such was this physical heap, now:

A house with its plaster all fallen off.

The truth of the Truth-speaker's words

doesn't change.

* * *

Inspiration from Enlightened Nuns

By Susan Elbaum Jootla

https://www.accesstoinsight.org/lib/authors/jootla/wheel349.html

The Danger in Attachment to One's Beauty

(excerpts)

உடலழகின் மீது ஏற்படும் வேட்கையில்

உள்ள ஆபத்து (சுருக்கம்)

தற்காலப் பெண்களைப் போலவே முற்காலங்களிலும், வாழ்வில் எந்த நிலையிலிருந்த பெண்களும் பல வழிகளில் வயோதிகத்தை மறைக்கவும் தங்கள் அழகை மேம்படுத்தவும் முயன்றார்கள். ஆனால் இது தங்களுக்கு வயதாகவில்லை, அழகு குலைந்து போகவில்லை என்று பாசாங்கு செய்யும் பயனற்ற முயற்சியேயாகும். இப்படித் திராவகங்களுக்கும், முகப்பூச்சுகளுக்கும் பதிலாக வயதாகும் செயல் முறையை மெய்யறிவோடு காண்போமேயானால் எல்லா நிலைகளிலும் உள்ள அநிச்சத் (நிச்சயமற்ற) தன்மையை நாம் புரிந்து கொள்ள உதவும்.

In ancient times as well as at present, women in all stations of life have used various means to enhance their beauty and to hide the signs of advancing age. This, however, is just a futile attempt to pretend that the body is not growing old, to keep it from showing outwardly that it is actually falling apart. But if, instead of creams and lotions, wisdom is applied to the aging process, it can deepen our understanding of impermanence on all levels.

அம்பபாலி புத்தர் காலத்தில் வாழ்ந்த அழகும் பெருஞ்செல்வமும் கொண்டிருந்த கணிகை. புத்தரின் போதனைகளைக் கேட்பதற்கு முன்பு தன் புகழ்பெற்ற அழகைப் பேணிக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதே அவள் முக்கிய நோக்கமாக இருந்தது. புத்தரின் போதனைகளைக் கேட்ட பின் அழகு குன்றுவதையும், வயோதிகத்தையும், முதுமையில் உண்டாகும் துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அவளுக்கு உண்டானது. அவள் மெய்யறிவோடு கூறும் வார்த்தைகள் நமது அறிதலையும் வெகுவாக ஊக்குவிக்கும்.

Ambapali was a wealthy and beautiful courtesan during the time of the Buddha. Before she heard the Buddha preach, her main concern had been to cultivate and maintain her renowned beauty. With the Buddha's guidance, she was able to face the inevitability of aging and the loss of her beauty and to comprehend the suffering of old age. Her verses can also stimulate our own understanding:

என் நீண்ட கருத்த கண்கள் ஆபரணங்களின் ஜொலிப்பைப்போலப் பளபளத்தன. மூப்பின் காரணத்தால் அவை அழகற்றவையாகி விட்டன.

வாய்மைபேசியவரின் வார்த்தைகள் இதற்கு மாறுபட்டதல்ல.

My eyes were shining, very brilliant like jewels, very black and long. Overwhelmed by old age, they do not look beautiful. Not otherwise is the utterance of the speaker of truth...

முன்பு தங்கத்தாலும், முத்திரை மோதிரங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்த என் கைகள்

அழகாக இருந்தன.

மூப்பின் காரணத்தால், இப்போது அவை வெங்காயங்களைப்போலவும் முள்ளங்கிகளைப் போலவும் தோன்றுகின்றன.

வாய்மை பேசியவரின் வார்த்தைகள் இதற்கு மாறுபட்டதல்ல.

Formerly my hands looked beautiful, possessing delicate signet rings, decorated with gold. Because of old age they are like onions and radishes. Not otherwise is the utterance of the speaker of the truth...

தங்கத்தகடு போல மெருகூட்டப் பட்டிருந்த எனது உடல் அழகாக இருந்தது.

இப்போது உடல் முழுதும் மெல்லிய சுருக்கங்கள் விழுந்து காணப்படுகிறது.

வாய்மைபேசியவரின் வார்தைகள் இதற்கு மாறுபட்டதல்ல.

Formerly my body looked beautiful, like a well-polished sheet of gold. (Now) it is covered with very fine wrinkles. Not otherwise is the utterance of the speaker of the truth...

அப்படி இருந்தது என் உடல். (இப்போது) தள்ளாத கிழப்பருவத்தில், பல இன்னல்களின் இருப்பிடமாக, காரை பெயர்ந்த பழைய வீடாகி விட்டது.

வாய்மை பேசியவரின் வார்த்தைகள் இதற்கு மாறுபட்டதல்ல.

Such was this body. (Now) it is decrepit, the abode of many pains, an old house with its plaster fallen off. Not otherwise is the utterance of the speaker of the truth.

(vv. 257, 264, 266, 270)

புத்தர் கற்பித்தது போலவே மூப்பின் செயற்றொடரினால் இந்த உடலின் கவர்ச்சி மங்கி அதன் இடத்தில் அவலட்சணமும், துன்பமும் தோன்றுவதை அம்பபாலி காண்கிறாள். எவ்வளவு தான் அழகாக இளமையில் பிறந்திருந்தாலும் அது நிரந்தரமானது அல்ல. கட்டழகின் உச்சத்திலும் கண்களின் பிரகாசம் நாம் அறியாமலே மங்கத் தொடங்கி விடுகிறது; கால்களின் உறுதியான நிலையும் வாடத் தொடங்குகிறது; மென்மையான தோலும் சுருங்கத் தொடங்குகிறது. நிச்சயமற்ற தன்மையும், அழிவும் இந்த உடலின் இயற்கை குணம் மட்டுமல்ல; பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அதே இயற்கைக் குணமுடையவை என்று அம்பபாலி நினைவூட்டுகிறாள்.

Ambapali sees how all the body's charms give way to ugliness and pain as the aging process takes its toll, as the Buddha teaches it must. All physical beauty, no matter how perfect it might seem at one youthful moment, is utterly impermanent. Even at its peak, the brilliance of the eyes is already, if invisibly, starting to grow dim; the firmness of limbs is withering; the smoothness of skin is wrinkling. Impermanence and decay, Ambapali reminds us, is the nature of all bodies and of everything else in the universe as well.

* * *

From:

https://tricycle.org/magazine/ambapali-buddhist-song/

Ambapali was a courtesan living in the city of Vesali who is portrayed in the Pali literature as a woman of considerable wealth and influence. She had been left to die as a baby in a mango (amba) grove, no doubt the illegitimate offspring of influential people, but was discovered and rescued by the gardener or guardian (pali) of the mango grove, from whom she got her name. She grew up to be a woman of great beauty, and princes fought over who would have the privilege of marrying her. Their disputes were settled only when she became a courtesan and could be shared by them all. She received large sums for her companionship because of her beauty and accomplishment, and she became famous throughout the land.

பாலி மொழி இலக்கியங்களில் அம்பபாலி என்ற கணிகை வைசாலி நகரில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப் படுகிறது. அவள் பெரும் செல்வமும், செல்வாக்கும் உடையவளாக இருந்தாள். செல்வாக்கான மக்களின் சோரத்தில் பிறந்த பிள்ளை என்பதால் பிஞ்சுக் குழந்தையாக இருந்தபோது ஒரு மாந்தோப்பில் கைவிடப் பட்டிருந்தாள். ஆனால் அந்த மாந்தோப்பின் காவல்காரனால் கண்டெடுக்கப்பட்டுக் காப்பாற்றப் பட்டாள். இதன் காரணமாகவே அவள் அம்பபாலி என்றழைக்கப் பட்டாள். அம்ப என்றால் மா, பால என்றால் காவல்காரன். அவள் பேரழகுடையவளாக வளர்ந்தாள். அவளை மணமுடிக்க இளவரசர்கள் பலர் போட்டி போட்டனர். அவள் கணிகையான பிறகு அந்தப் போராட்டங்களும் முடிவுக்கு வந்தன. அவள் அழகின், அறிவாற்றலின் காரணமாக, அவள் நட்புக்காகவும், தோழமைக்காகவும் அவள் பெரும் வெகுமதி பெற்றாள். நாடெங்கும் அவள் பிரபலமானாள்.

We are told that she had a son by Bimbisara, the king of Magadha, and when he reached the appropriate age he joined the Buddha’s order of monks. Ambapali heard the Buddha’s teaching from her son at some point and became herself a great follower and supporter of the Buddha. On his last visit to Vesali, she met with him in person, prepared a meal for him and his followers at her house the next day, and donated to the order of monks a park of considerable value that became known as Ambapali’s Park.

மகத மன்னன் பிம்பிசாரனுடன் அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. அவன் இளைஞனான பின் புத்த சங்கத்தில் சேர்ந்து துறவறம் பூண்டான். அவன் மூலம் புத்தரின் போதனைகளைக் கேட்ட அம்பபாலி பின்னர் அவளும் புத்தரைப் பின்பற்றி அவரின் பெரும் ஆதரவாளரானாள். வைசாலி நகருக்குக் கடைசியாகப் புத்தர் வந்த போது, அவரை நேரில் சந்தித்து அவருக்கும், அவர் சீடர்களுக்கும் மறுநாள் உணவு படைத்து பின் சங்கத்திற்கு அம்பபாலி பூங்கா என்று அழைக்கப்பட்ட பெருந்தொகை மதிப்புள்ள ஒரு பூங்காவினைத் தானமாக வழங்கினாள்.

Ambapali left us 20 stanzas of poetry in the Therigatha, the collection of verses by the earliest women followers of the Buddha. Presumably composed when she was very old, well after the passing of the Buddha, her verses speak of the former beauty of her body, noting how each feature has withered with age. Each verse concludes with the same line, stating that she is only saying what is true, nothing more. We do not get the impression that she is lamenting the loss of her beauty or complaining about the current state of her great age; her wisdom has carried her beyond such things. Rather, she is just speaking the truth of impermanence and of the inevitable changes of the human body.

அம்பபாலி நமக்கு 20 பாடல்கள் கொண்ட இந்தச் செய்யுளை விட்டுச் சென்றிருக்கிறார். இவற்றைப் புத்தரின் ஆரம்ப காலப் பெண் சீடர்களது கூற்றின் தொகுப்பான ‘தேரிகதா’ என்ற நூலில் காணலாம். இந்தப் பாடல்கள் அவளது வயோதிக காலத்தில், புத்தர் மறைந்து நீண்ட காலத்திற்குப் பின்னர் எழுதப் பட்டிருக்கலாம். இந்த வரிகளில் அவளது முந்தைய அழகும் பின் ஒவ்வொரு உடல் அம்சமும் வயோதிகத்தால் உலர்ந்து போவதும் வர்ணிக்கப் படுகிறது. ஒவ்வொரு பாடலும் அதே வரிகளில் முடிகின்றன. அதாவது தான் கூறுவது உண்மை. வேறெதையும் கூட்டிச் சொல்லவில்லை. தனது அழகு குன்றியது பற்றி அவள் வருத்தப் படுவதாகவோ தனது உடலின் தற்போதைய நிலையைக் குறை கூறுவதாகவோ தெரியவில்லை; தனது மெய்ஞ்ஞானத்தின் காரணமாக அப்படிப்பட்ட மனநிலைகளுக்கு அப்பால் சென்று விட்டதாகத் தெரிகிறது. நிலையாமை என்ற வாய்மையைப் பற்றியும் உடல் தனது இயற்கைக் குணத்திற்கேற்ப மாறும் என்பதையே குறிப்பிடுகிறார்.

* * *

From:

https://www.accesstoinsight.org/tipitaka/dn/dn.16.1-6.vaji.html

Sister Vajira & Francis Story

மஹா பரிநிப்பாண சுத்திரத்திலிருந்து

புத்தரின் கடைசி நாட்கள்

அம்பபாலியும் லிச்சவியரும்

Ambapali and the Licchavis

16. பின் அம்பபாலி என்னும் கணிகை இவ்வாறு தெரியவந்தாள்: "புத்தர் வைசாலி வந்திருப்பதாகவும் தற்போது தனது மாந்தோப்பில் தங்கியிருப்பதாகவும் கூறுகின்றனர்." அவள் பல அருமையான வண்டிகளை வரவழைக்கக் கட்டளையிட்டாள். பின் அதில் ஒன்றில் அவள் ஏறி, மற்ற வண்டிகளோடு வைசாலியிலிருந்து தனது மாந்தோப்பு நோக்கிச் சென்றாள். வண்டி போகக் கூடிய தூரம் சென்றபின் இறங்கி நடந்த வண்ணம் பகவரை அணுகி அவருக்கு மரியாதை செலுத்தி வாழ்த்துப் பரிமாற்றம் செய்து கொண்டு ஒருபுறமாக அமர்ந்தாள். பகவர் அம்பபாலி என்ற கணிகைக்குத் தம்ம போதனை நிகழ்த்தி அவளை ஊக்குவித்து, பலப்படுத்தி, மகிழ்வித்தார்.

Then Ambapali the courtesan came to know: "The Blessed One, they say, has arrived at Vesali and is now staying in my Mango Grove." And she ordered a large number of magnificent carriages to be made ready, mounted one of them herself, and accompanied by the rest, drove out from Vesali towards her park. She went by carriage as far as the carriage could go, then alighted; and approaching the Blessed One on foot, she respectfully greeted him and sat down at one side. And the Blessed One instructed Ambapali the courtesan in the Dhamma and roused, edified, and gladdened her.

17. அதன் பின்னர் அம்பபாலி என்ற கணிகை பகவரிடம்: "அண்ணலே! பகவர் எனது அழைப்பை ஏற்றுத் தாங்களும் பிக்கு சங்கத்தாரும் நாளைய உணவு தானத்திற்கு எனது இல்லத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்." பகவர் மௌனமாக இருந்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

பகவர் அழைப்பை ஏற்றுக் கொண்டார் என்பது உறுதியானதும் தனது இருக்கையிலிருந்து எழுந்து, மரியாதையுடன் வணங்கி, தனது வலது பக்கமாக அவர் இருக்க அங்கிருந்து புறப்பட்டாள்.

Thereafter Ambapali, the courtesan spoke to the Blessed One, saying: "May the Blessed One, O Lord, please accept my invitation for tomorrow's meal, together with the community of bhikkhus." And by his silence the Blessed One consented.

Sure, then, of the Blessed One's consent, Ambapali the courtesan rose from her seat, respectfully saluted him, and keeping her right side towards him, took her departure.

18. பின் வைசாலியில் உள்ள லிச்சவியர் இவ்வாறு தெரியவந்தனர்: "புத்தர் வைசாலி வந்திருப்பதாகவும் தற்போது அம்பபாலியின் மாந்தோப்பில் தங்கியிருப்பதாகவும் கூறுகின்றனர்." அவர்கள் பல அருமையான வண்டிகளை வரவழைத்து, ஒவ்வொருவரும் ஒன்றில் ஏறி, மற்ற வண்டிகளோடு வைசாலியிலிருந்து வெளியே சென்றனர். லிச்சவியருள் சிலர் நீல நிற ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்திருந்தனர். மற்றவர்கள் மஞ்சல் நிறத்திலும், சிவப்பு, வெள்ளை நிற ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்தனர்.

Then the Licchavi of Vesali came to know: "The Blessed One, they say, has arrived at Vesali and is now staying in Ambapali's grove." And they ordered a large number of magnificent carriages to be made ready, each mounted one, and accompanied by the rest, drove out from Vesali. Now, of these Licchavis, some were in blue, with clothing and ornaments all of blue, while others were in yellow, red, and white.

19. தற்செயலாக அம்பபாலி அந்த இளைய லிச்சவியர்கள் அருகாக தனது வண்டியில் வர, வண்டி அச்சோடு அச்சாக, சக்கரத்தோடு சக்கரமாக, நுகத்தடியோடு நுகத்தடியும் இணையாக ஒருசேர ஓட்டிக் கொண்டு வந்தனர். இதன் காரணமாக லிச்சவியர்: "எங்களுக்கு இணையாக ஏன் இப்படி ஓட்டிக் கொண்டு வருகிறாய், அம்பபாலி?" என்று கேட்டனர்.

"இப்படித்தான் இளவரசர்களே. வேறெப்படியும் இல்லை! பகவர் என் அழைப்பை ஏற்று நாளை எனது உணவு தானத்திற்காகத் தனது பிக்கு சங்கத்துடன் வருகிறார்!"

"உணவு தானத்தை விட்டுவிடு அம்பபாலி, நூறாயிரம் தருகிறோம்!"

ஆனால் அவள்: "ஐயன்மீர், வைசாலி நகரோடு அதைச் சுற்றியுள்ள, வைசாலிக்குக் கப்பம் கட்டும் நிலங்களையும் நீங்கள் தந்தாலும், இந்த முக்கியமான உணவு தானத்தை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்."

இதைக் கேட்ட லிச்சவியர்கள் தங்கள் விரல்களைச் சொடுக்கி, சற்று போலிச் சினத்துடன்: "பார்த்தீர்களா நண்பர்களே! இந்த மாங்காய் பொடுசு நம்மைத் தோற்கடித்து விட்டாள்! இந்த மாங்காய் பொடுசு நம்மை முழுமையாக விஞ்சி விட்டாள்!" ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அம்பபாலியின் தோப்பை நோக்கிச் சென்றனர். (குறிப்பு: அம்பபாலி என்ற பெயரில் உள்ள அம்ப என்றால் மா, பாலி என்றால் பாதுகாப்பவர்)

And it so happened that Ambapali the courtesan drove up against the young Licchavis, axle by axle, wheel by wheel, and yoke by yoke. Thereupon the Licchavis exclaimed: "Why do you drive up against us in this fashion, Ambapali?"

"Thus it is, indeed, my princes, and not otherwise! For the Blessed One is invited by me for tomorrow's meal, together with the community of bhikkhus!"

"Give up the meal, Ambapali, for a hundred thousand!"

But she replied: "Even if you were to give me Vesali, sirs, together with its tributary lands, I would not give up a meal of such importance."

Then the Licchavis snapped their fingers in annoyance: "See, friends! We are defeated by this mango lass! We are utterly outdone by this mango lass!" But they continued on their way to Ambapali's grove.

20: தூரத்திலிருந்து லிச்சவியர் வருவதைக் கண்ட பகவர் பிக்குகளிடம், "உங்களுள் எவரெல்லாம் முப்பத்தி மூன்று தேவர்களை இதுவரை காணாதவர் இருக்கின்றீர்களோ அவர்களெல்லாம் இந்த லிச்சவியர் கூட்டத்தைப் பாருங்கள். கண்கொள்ளாக் காட்சி இது, ஏனென்றால் இவர்களை முப்பத்தி மூன்று தேவர்களோடு ஒப்பிடலாம்."

And the Blessed One beheld the Licchavis from afar, as they drove up. Then he spoke to the bhikkhus, saying: "Those of you, bhikkhus, who have not yet seen the Thirty-three gods, may behold the assembly of the Licchavis, and may gaze on them, for they are comparable to the assembly of the Thirty-three gods."

21. பின் லிச்சவியர்கள் தங்கள் வண்டிகள் செல்லக் கூடிய தூரம் வரை சென்றபின் இறங்கி நடந்த வண்ணம் பகவரை அணுகி, அவருக்கு மரியாதை செலுத்தி, வாழ்த்துப் பரிமாற்றம் செய்த பின் ஒருபுறமாக அமர்ந்தனர். பகவர் லிச்சவியர்களுக்குத் தம்ம போதனை நிகழ்த்தி அவர்களை ஊக்குவித்துப் பலப்படுத்தி மகிழ்வித்தார்.

Then the Licchavis drove their carriages as far as the carriages could go, then alighted; and approaching the Blessed One on foot, they respectfully greeted him and sat down at one side. The Blessed One instructed the Licchavis in the Dhamma, and roused, edified, and gladdened them.

22. அதன் பின்னர் லிச்சவியர்கள் பகவரிடம்: "அண்ணலே! பகவர் எங்களது அழைப்பை ஏற்று தாங்களும் பிக்கு சங்கத்தாரும் சேர்ந்து நாளைய உணவு தானத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்."

பகவர், "நாளைய உணவுக்காக அம்பபாலி என்ற கணிகையின் அழைப்பை நான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டேன்," என்று பதிலளித்தார்.

இதைக் கேட்ட லிச்சவியர்கள் தங்கள் விரல்களைச் சொடுக்கி சற்று போலிச் சினத்துடன்: "பார்த்தீர்களா நண்பர்களே! இந்த மாங்காய் பொடுசு நம்மைத் தோற்கடித்து விட்டாள்! இந்த மாங்காய் பொடுசு நம்மை முழுமையாக விஞ்சி விட்டாள்!" பின் லிச்சவியர்கள் பகவரின் வார்த்தைகளை அங்கீகரித்தவர்களாக, பெருமகிழ்ச்சியுடன் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து, மரியாதையுடன் வணங்கி, அவர்களது வலது பக்கமாக பகவர் இருக்க, அங்கிருந்து விடைபெற்றனர்.

Thereafter the Licchavis spoke to the Blessed One, saying: "May the Blessed One, O Lord, please accept our invitation for tomorrow's meal, together with the community of bhikkhus."

"The invitation for tomorrow's meal, Licchavis, has been accepted by me from Ambapali the courtesan."

Then the Licchavis snapped their fingers in annoyance: "See, friends! We are defeated by this mango lass! We are utterly outdone by this mango lass!" And then the Licchavis, approving of the Blessed One's words and delighted with them, rose from their seats, respectfully saluted him, and keeping their right sides towards him, took their departure.

* * *