நல்லூற்றம்

நல்லூற்றம்

தணிசாரோ பிக்கு.

Right Resolve

Thanissaro Bhikku

The definition

"And what is right resolve?

Being resolved on renunciation, on freedom from ill-will, on harmlessness: This is called right resolve."

— SN 45.8

வரையறை

"நல்லூற்றம் என்றால் என்ன?

உள்ளத் துறவு, பற்று நீங்குதல், கைவிடுகை பற்றிய தீர்மானம், தீய எண்ணங்களிருந்தும், தீங்கு செய்வதிலிருந்தும் விடுதலை பெறுவது: இதுவே நல்லூற்றம்."

மொ.ஆ.கு: மேற்கூறியவாறு நல்லூற்றத்திற்குப் புத்தர் பொருள் விளக்கம் தருகின்றார். இவை எல்லாம் நல் ஒருக்கத்தின் போது (நற்றியானம் செய்யும் போது) உள்ளடக்கப் படுகின்றன என்றும், நல்லூற்றமும், நல் ஒருக்கமும் ஒன்றோடொன்று இணங்கிச் செயற் படுகின்றன என்றும் விளக்குகிறார் தணிசாரோ பிக்கு.

நல்லூற்றம்

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகின்றனர். நாம் அந்த மகிழ்ச்சியைத் தேடுவதில் மேன்மேலும் திறமையுடன் செயலாற்றும்போது உலகின் மீது உள்ள நமது சுமையும் குறைகிறது. ஏனென்றால் மகிழ்ச்சி உண்மையானதாகவும், நீடிப்பதாகவும் இருக்க வேண்டுமானால், தீங்கேதும் அது விளைவிக்கக் கூடாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

அத்தகைய மகிழ்ச்சி மற்றவர்களிடம் இருந்து எதையும் எடுத்துக் கொள்ளாது. அதாவது, அந்த ஆனந்தம் அகத்திலிருந்தே வர வேண்டும். தியானம் செய்யும் போது அதைத்தான் நாம் செய்கிறோம். நாம் தீமை பயக்காத மகிழ்ச்சியைத்தேடுகிறோம். மற்றவர்களிடத்தில் அன்பாக இருப்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த வழி. சில சமயம் தியானம் செய்வது தன்னலமுள்ள செயல் என்று குறை கூறப் படுகிறது. ஏனெனில் அது நமது நலன் கருதி மட்டுமே செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளக் கூடியவர்கள், மற்றவர்களுக்குச் சுமையாக இருக்க மாட்டார்கள். எனவேதான் இத்திறமைகள் அன்பின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன.

ஒரு போதனையில் புத்தர், மார்க்கத்தின் ஒரு பிரிவான நல்லூற்றம் மேலான வழியில் குறிப்பிடப்படுவது (தெரிவிக்கப்படுவது) நல் ஒருக்கத்தின் போது தான் என்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் மகிழ்ச்சியைத் தேடும் உங்கள் முயற்சி உங்கள் நடத்தையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதையும் அந்த முயற்சியின் போது வேறு யாருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்கிறோம். உங்கள் எண்ணங்களிலிருந்து உங்கள் நடத்தை தோன்றுவதால் எப்படிப்பட்ட எண்ணங்கள் தீமை உண்டாக்கும் என்பதைப் பிரதிபலிக்க வேண்டும். சில எண்ணங்கள் மற்றவர்களிடம் வன்முறையில் ஈடுபட வைக்கும் அல்லது மற்றவர்களிடம் வெறுப்பை உண்டாக்கும். சில எண்ணங்கள் புலன் இன்பங்கள் மீது பற்றினைத் தூண்டும். ஒருமுறை புத்தர், 'தங்கக் காசுகளாக மழை பொழிந்தாலும் நமது புலன் ஆசைகளை அது திருப்திப் படுத்தாது,' என்று கூறினார். புலன் இன்பங்களில் மகிழ்ச்சியைத் தேடினால் அந்தத் தேடுதலுக்கு முடிவே இருக்காது. எத்தனை முறை தங்கக் காசுகள் மழையாகக் கொட்டுவதைப் பார்த்திருக்கின்றீர்கள்? மேலும் ஒவ்வொரு ஜீவனையும் திருப்திப் படுத்த வேண்டுமானால் அப்படி எவ்வளவுமுறை தங்க மழை பெய்ய வேண்டியிருக்கும்? ஆகவே இருக்கிற சில தங்கக் காசுகளின் காரணமாகச் சண்டையும் சச்சரவும் தான் தோன்றப் போகிறது. உண்மையான மகிழ்ச்சியை இப்படிக் காணவே முடியாது. எனவே புலன் இன்பங்களின் மீதுள்ள பற்றினைக் குறைப்பதே நல்லது. அதற்குச் சிறந்த வழி அகத்தினுள் இன்பத்தைத் தேடிக் கண்டு பிடிப்பது தான். அதனால் தான் புத்தர் நல் ஒருக்கம் அல்லது நற்றியானத்தை மக்களுக்குக் கற்பித்தார்.

மனத்தை ஒருமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒருமுகப்படுத்தும் வழியில் அமைதியும், பேரானந்தமும் பிறக்கிறது. இவ்வாறு உடனடியாக நாம் விரும்பும் இன்பம் கிடைக்கிறது. அதே சமயம் மனத்தில் ஒரு தெளிவையும் வளர்த்துக் கொள்கிறோம். மற்றவர்களை வதைப்பதனால் தான் நமக்கு இன்பம் கிடைக்குமானால் நாம் செய்யும் துன்பத்தை நாம் கண்டறியாதவாறு மறைத்துக் கொள்கிறோம். கண்டும் காணாதவாறு இருந்து விடுகிறோம். பிறரைத் துன்புறுத்துவது நமக்குத் தெரிந்திருந்தும், அதை மறைக்கப் பல பொய்க் காரணங்களைச் சொல்லி அது சரியானதே என்று சாதிக்கப் பார்க்கிறோம். நமது இன்பத்தை நாடிச் செல்லும் போது, ஏன் மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான செயல் என்று பல வழிகளில் நமக்கு நாமே காரணங்களை சொல்லிக் கொள்கிறோம்? அதனால் மனத்தில் மேன்மேலும் அறியாமைதான் வளரும். ஆனால் நமது இன்பம் மற்றவருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருக்குமானால், உலகில் தீமை எங்கே உள்ளது, சச்சரவு எங்கே உள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நமது மகிழ்ச்சி அந்தத் தீமையையோ, சச்சரவையோ சார்ந்து இருக்க வில்லை.

ஆகவே நம்மிடம் இருப்பது குறை கூற முடியாத தெளிவான இன்பம். மார்க்கத்தைத் தொடர மிகத் தகுந்த இன்பம். எனவே மூச்சின் மீது அது வசதியாக இருக்குமாறு கவனத்தைச் செலுத்துங்கள். மூச்சின் மீது கவனம் கொள்வது 'செலுத்தப்பட்ட எண்ணம்' (directed thought). அதனை வசதியாக்கக் கற்றுக் கொள்வது மதிப்பிடுதல் (evaluation). இவை இரண்டும் ஒருக்கத்தை வளர்க்க உதவுகின்றன. மூன்றாம் இயல்பு ஒருதலைப்பாடு (singleness). அதாவது மூச்சைத் தவிர வேறு எதிலும் கவனத்தைச் செலுத்துவதில்லை என்ற உறுதி. இந்த மூன்று இயல்புகளையும் நாம் பேணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே, நல்லூற்றம் என்பது, தியானத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்வது என்ற தீர்மானமாகும். யாருக்கும் தீங்கு செய்வதில்லை. யாரிடமும் வெறுப்புக் கொள்வதில்லை. புலன் இன்பங்களை நினைத்துப் பார்ப்பதில்லை. இதுவே நல்லூற்றத்தின் மேன்மையான வடிவம். இந்தச் சிக்கலற்ற மகிழ்ச்சியான உணர்வே மார்க்கத்தை உருவாக்குகிறது. இதுவே மார்க்கத்தில் செல்லும் போது உங்களுக்குக் கிடைக்கும் போஷாக்கு. திரிபிடகத்தில் மார்க்கத்தின் பல இயல்புகளும், ஒரு கோட்டையின் பல அம்சங்களை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடைப்பிடி தான் வாயிற் காவலன் (வரவேண்டியவர்களை வரவேற்கிறான். மற்றவர்களைத் தடுக்கிறான்); மெய்ஞ்ஞானம் தான் கோட்டையின் வழுவழுப்பான சுவர். அதன்மீது யாராலும் ஏறிக் கோட்டைக்கு அபாயம் உண்டாக்க முடியாது. நல் ஒருக்கம் தான் கோட்டைக்குள் உள்ளவர்களுக்குப் போஷாக்கு அளிக்கச் சேமித்து வைத்துள்ள உணவு. இவ்வாறு மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் வழியைத் திறமையாக வளர்க்க வளர்க்க உங்களுக்குப் புறத் தேவைகள் குறைந்து வருவதைப் பார்க்கலாம். புறத் தேவைகளுக்காக மற்றவர்களோடு போட்டி போடவேண்டிய அவசியமும் குறைகிறது. உங்கள் பசியும், (விரும்பியதைப் பெற்றே ஆக வேண்டும் என்ற அவா) தீய பழக்கங்களும் அவற்றின் வன்மையையும், கூர்மையையும் இழந்து விடுகின்றன. ஏனெனில் உங்களுக்கு இன்பம் அளிக்கும் வேறு ஒன்று (நல் ஒருக்கதிலிருந்து வரும் இன்பம்) உள்ளது. இப்படித்தான் உலகில் நாம் மென்மையாக (பிறருக்குச் சுமையாக இல்லாமல்) வாழ முடிகிறது. உள்ளத்தில் மகிழ்ச்சியும், நொய்ம்மையும் (இலேசாக இருத்தல்), அமைதியும் இருப்பதை உணர்கிறோம். அதனால் புறத்தில் இன்பம் தேடவேண்டிய தேவை குறைகிறது. எனவே இந்த நல் ஒருக்கத்தை வளர்க்கும் திறமையை மேலும் மேலும் வளர்க்க உங்கள் நேரத்தையும், சக்தியையும் பயன் படுத்துங்கள். எனென்றால் அதுவே உங்களுக்கு வாழ்நாள் முழுதும் பயன் தருவதாகும்.

* * * * * *

The more skillful you are in your search for happiness, the lighter you tread on this Earth — because you realize that happiness, to be true and lasting, has to be harmless, something that doesn’t take anything away from anyone else; which means that it has to come from within.

So that’s what we’re doing as we meditate: We’re looking for a harmless happiness. This is a very important way of being kind to others. Sometimes meditation is denounced as a selfish activity because you seem to be just looking after yourself. But people who know how to look after themselves are less of a burden on other people. That’s why these skills are an expression of kindness.

There’s a passage where the Buddha says that right resolve, which is one of the factors of the path, finds its highest expression in doing right concentration. In other words, you have to reflect on the fact that your quest for happiness is going to have to depend on your own actions, and you don’t want to harm anybody else in the course of the quest. Because your actions come from your resolves, you have to reflect on which resolves might be harmful. Some of them involve wanting to commit outright violence to other people, or having ill will for other people.

Some of the them involve being attached to sensual desires because, as the Buddha once said, even if it rained gold coins, we wouldn’t have enough for our sensual desires. If that’s where we’re looking for happiness, there’s no end to it. And how many showers of gold coins have you seen? And how many showers would we need to satisfy every person, every animal on earth?

With no sense of satisfaction, we’re bound to get into conflict with one another over what few gold coins there are. There’s no way that a true happiness can be found that way. So you try to learn how to wean yourself away from sensual desires. And the best way to do that is to find a sense of pleasure within. This is why the Buddha taught right concentration.

It’s not just that you focus on your mind, but you focus in a way that gives rise to a sense of ease, a sense of rapture. In this way you satisfy your immediate need for pleasure at the same time that you’re developing clarity in the mind. When our pleasure depends on harming other beings, we tend to have big blind spots around the harm we’re doing. We can think of all sorts of ways to justify the harm we cause to other beings or to other people in the course of our quest for pleasure. In doing so, we built up huge areas of denial and ignorance in our mind. But when your pleasure depends on things that are causing no harm at all, you can be clearer about where there is harm in the world, where there is conflict, because your happiness doesn’t depend on that harm or conflict.

So what you’ve got here is a happiness that’s blameless and also very clear: the ideal happiness to form part of the path. So focus on the breath in a way that feels comfortable. Focusing on the breath is called directed thought. Learning how to make it comfortable is called evaluation. These are the two factors that help build concentration. The third factor is singleness: that you really focus on the breath and try to stay with the breath and nothing else.These are the three things you focus on developing.

And here you have it: right resolve, the intention to stick with the meditation. You’re not harming anyone; you feel no ill will for anyone. You don’t need to think about sensual pleasures. This is the embodiment of right resolve. And this sense of ease and happiness forms the path. It’s your nourishment on the path. In the texts, they talk about the different aspects of the path being like different aspects of a fortress. Mindfulness is like the gatekeeper; wisdom is

like the smooth walls that nobody can climb up to cause danger. And right concentration is like the food you have stored away to keep yourself nourished. This way, as you develop skill in your pursuit of happiness, you find that you need fewer things outside. There’s less need to compete

with others over things outside. Your hungers and addictions lose a lot of their force and their sharpness, because you’ve got a good alternative source of pleasure right here. This is how we tread lightly on the Earth. We’re finding our happiness inside and a sense of buoyancy and ease inside, so we have less and less need for pleasures outside. So take the time and energy needed to develop this skill, because it will serve you well throughout life.