Ajahn Chah அஜான் சா
No Ajahn Chah: Reflections
அஜான் சா இங்கு இல்லை: சிந்தனைகள்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அஜான் சா (1918- 1992) தாய்லாந்து நாட்டில் வாழ்ந்த பெயர் பெற்ற பௌத்த மதப் பிக்கு. தாய்லாந்தில் பயன்படுத்தப்படும் அஜான் என்ற வார்த்தை ஆசாரிய என்ற வார்த்தையின் திரிபு.
அஜான் சா உவமானங்கள்
அஜான் சா போதனைகள்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Once there was a layman who came to Ajahn Chah and asked him who Ajahn Chah was. Ajahn Chah, seeing that the spiritual development of the individual was not very advanced, pointed to himself and said, "This, this is Ajahn Chah."
ஒருமுறை ஒரு உபாசகன் (பௌத்த இல்லறத்தார்) அஜான் சாவிடம் அஜான் சா யார் என்று கேட்டார். அவருடைய ஆன்மீக வளர்ச்சி முதிர்ச்சியற்ற நிலையை உணர்ந்த அஜான் சா தன்னைச் சுட்டிக் காட்டி "இதோ, இது தான் அஜான் சா!" என்றார்.
On another occasion, someone else asked Ajahn Chah the same question. This time, however, seeing that the questioner’s capacity to understand the Dhamma was higher, Ajahn Chah answered by saying "Ajahn Chah? There is NO Ajahn Chah."
மற்றொருமுறை வேறொருவர் அதே கேள்வியை அஜான் சா விடம் கேட்டார். இந்த முறை தருமத்தை புரிந்து கொள்ளும் தன்மை கேட்டவரிடம் மிகுதியாகத் தெரிந்ததால் அஜான் சா அவருக்குக் கொடுத்த பதில் "அஜான் சா வா? அப்படி யாரும் இல்லையே".
1. பிறப்பும் இறப்பும் Birth and Death 1-10
5. உள்ளமும் மனமும் Heart and Mind 30-44
6. நிலையாமை Impermanence 45-52
8. தியானப் பயிற்சி Meditation Practice 58-92
13. அறிந்து கொள்வதும் நுன்ணறிவும் Understanding and Wisdom 136-143
15. பலதரப்பட்டவை Miscellaneous 154-194
Invitation!
All that I have said upto now has merely been words. When people come to see me, I have to say something. But it is best not to speak about these matters too much. Better to begin practice without delay. I am like a good friend inviting you to go somewhere. Do not hesitate, just get going. You won’t regret it.
அழைப்பு!
நான் இதுவரை சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகளே. யாராவது என்னைப் பார்க்க வந்தால் நான் எதாவது சொல்லியாக வேண்டுமல்லவா! ஆனால் இவைகளைப் பற்றியெல்லாம் அதிகம் பேசாமல் இருப்பதுதான் சரி. தாமதிக்காமல் உடனே செயற்படுவதே சிறந்தது. நான் எங்காவது செல்வதற்கு உங்களை அழைக்க வந்த நல்ல நண்பனைப் போன்றவன். தயங்காமல் உடனே புறப்படுங்கள். அதற்காக நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Transcribed to the Internet by: Abhayagiri Buddhist Monastery [The quotations in this collection have been taken from Bodhinayana, A Taste of Freedom, A Still Forest Pool, Samadhi Bhavana, Seeing the Way, Living Dhamma, Food for the Heart, and Venerable Father, A Life with Ajahn Chah. Some quotations come from a personal collection hitherto unpublished. ]
Tamil Translation: P.I.Arasu, Toronto, Canada &. Mr. P.K. Ilango, M.A, Erode, India.
தமிழாக்கம்: பா. இ. அரசு, கனடா. & திரு. பா. கா. இளங்கோ, M.A, ஈரோடு, தமிழ்நாடு.
Please address any questions or corrections in the Tamil translation to arasutor@hotmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------