KALAIGNYAR SPEECH

AT

MUSIC ACADEMY - CHENNAI



Page ---- 1


சென்னை 'இசைக்கழகத்தின்‌ தலைவர்‌, நிர்வாகிகள்‌ இன்றைய.

இனிய விழாவில்‌ கூடியுள்ள இசைப்‌ பெருமக்கள்‌ தமிழ்க்‌ குலத்‌.

தினர்‌ அனைவர்க்கும்‌ முதற்கண்‌ என்‌ வணக்கத்தைக்‌ கூறி, இந்த.

ஆண்டு தொடக்க விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி

யும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.


"கர்நாடக இசை" என அழைக்கப்படுகின்ற "மரபுவழி இசை"

யின்‌ வளத்தைப்‌ பெருக்குவதற்கென்று தோற்றுவிக்கப்பட்ட

இந்தச்‌ சென்னை இசைக்கழகம்‌ கடத்த நாற்‌

பத்தெட்டு ஆண்டுகளுக்கு - மேலாக ஆற்றியுள்ள நற்பணிகள்‌

பெரிதும்‌ போற்றத்‌ தகுந்தவையாகும்‌.


ஆற்ற்லாளர்‌ பலரும்‌ தொடர்ந்து இந்‌ த இசைமன்றத்தின்‌

விழாக்களில்‌ தொடக்கவுரையும்‌ தலைமையுரையும்‌ ஆற்றியிருக்‌.

கிறார்கள்‌. அவைகள்‌ அனைத்தையும்‌ தொகுத்து, அழியாமல்‌

காத்திடுவது இசையுலகிற்குப்‌ பெருந்துணை புரியும்‌ அரிய செயலா

கும்‌ எனக்‌ கூறிட நான்‌ விழைகிறேன்‌. '


"இசை" என்றாலே "புகழ்‌?"என்னும்‌ ஒரு பொருள்‌ உண்டு.

"ஈதல்‌ இசைபட வாழ்தல்‌ அதுவல்லது

ஊதியம்‌ இல்லை உயிர்க்கு" என்றார்‌ வள்ளுவர்‌.


அந்தப்‌ புகழைக்‌ கட்டிக்‌ காக்கும்‌ வகையில்‌, கர்‌. நாடக.

இசைக்குாட்டுமன்றி, பரதநாட்டியம்‌, கதா காலட்சேபம்‌, ஏன்‌ ,

வடநாட்டு இந்துஸ்தானி சங்கீதத்திற்கும்கூட ஏற்றம்‌ அளித்திடத்‌

தவறவில்லை இந்த இசை மன்றம்‌.


இசை -- என்றால்‌ "இணங்குக" "ஒத்துக்‌ கொள்க"

எ்ன்னும்‌ பொருள்களும்‌ உண்டு.



Page ---- 2


இந்த இசைமன்றமும்‌ தன்னுடைய நாற்பத்தொன்பதாவது


-ஆண்டு விழாவினையும்‌ அத்துடன்‌. இணைந்துள்ள முத்துசாமி


தீட்சிதர்‌ இரு தூறுவது ஆண்டு விழாவினையும்‌ தொடங்கிவைக்கும்‌

பணிக்கு என்னை 'இசை” எனப்‌ பணித்துள்ளது.


இசைத்திறன்‌ கொண்டவன்‌ இல்லையாயினும்‌, நானும்‌ ஓர்‌

,இசைக்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்‌ தவன்‌ என்ற முறையில்‌ உங்கள்‌

அழைப்பினை ஆணையெனக்‌ கொண்டு, கடமையாற்றிட வந்துள்‌

“ளேன்‌.


'இசை -- எல்லை வகுக்க முடியாத ஓர்‌ இன்பக்கலை.

தென்றலின்‌ அசைவிலும்‌ நாம்‌ இசையைக்‌ கேட்கலாம்‌.

வண்டுகளின்‌ ஊர்வலத்திலும்‌ நாம்‌ இசையைச்‌ கேட்கலாம்‌.


அருவியின்‌ ஓசையில்‌ இசை,

ஆற்றின்‌ பாய்ச்சலில்‌ இசை,

கடலின்‌ அலையில்‌ இசை,

அலையிலாடும்‌ படகில்‌ இசை,

குயிலின்‌ குரலில்‌ இசை,

குழந்தையின்‌ மழலையில்‌ இசை,

படை முகத்திலும்‌ இசை,

பத்தயத்‌ திடலிலும்‌ இசை,

வாழ்த்தாலும்‌ இசை,

மறைத்தாலும்‌ இசை,

எங்கே இல்லை இசை?

எதிலே இல்லை இசை ?


காங்க்ரீவ்‌ என்னும்‌ அறிஞன்‌, இசைக்குள்ள அற்புதவலிமையை

எப்படிப்‌ பாராட்டுகிறான்‌ தெரியுமா ?


கொடிய விலங்குகளா அமைதிப்படுத்தவும்‌. கடினமான.

பாறைகளை நெகிழச்‌ செய்யவும்‌, நெடிய தேக்குமரத்தை வளைய

வைக்கவும்‌ சக்தி படைத்தது இசை,?? என்கிறான்‌ அவன்‌.


ஆம்‌: இசை முழக்கியவாறு மனிதர்கள்‌ எத்தனையோ கடின

மரன காரியங்களைக்‌ களைப்பின்றிச்‌ செய்து முடிப்பதை நம்‌ கண்‌

எதிரே காணமுடிகிறதல்லவா? வியர்வை வழிந்தோட ஏற்றம்‌

இறைக்கும்‌ பாட்டாளி, இசைப்பாட்டாளியாக மாறுவது ஏன்‌? தன்‌

வேலைப்‌ பளுவை அந்த இசையின்‌ வாயிலாகக்‌ குறைத்துக்‌ கொள்‌.

அத்தானே! ₹₹அயிலேசா! அயிலேசா1?2 என்று பாடாவிட்டாம்லு


Page ---- 3



ஓடம்‌ போகும்‌. ஆனால்‌ அதைப்பாடுவதன்‌ மூலம்‌ சிரமத்தைக்‌.

குறைத்துக்கொண்டு உழைப்பில்‌ உற்சாகம்‌ பெற மூடிகிறது.

"ஓடக்காரர்களுக்கு] நாற்று நடும்‌ பெண்டிர்‌, உரலில்‌ இட்டு ஒரு,

பொருளை இடிக்கும்‌. மகளிர்‌, மெய்வலி மறக்கத்தான்‌ இசையின்‌

துணையை தாடுகின்றனர்‌..

தமிழர்களைப்‌ பெசறுத்த வரையில்‌ முத்தமிழாம்‌ இயல்‌.இசை-

கூத்து என்பதில்‌--இசைத்‌ தமிழை நடுநாயகமாக வைத்துப்‌.

போற்றி வாழ்த்தி வளர்த்து வந்துள்ளனர்‌, வண்டு துளைத்த.

மூங்கிலின்‌ துவாரத்தில்‌ காற்று நுழையும்போது எழுந்த இசை

பயொலியைக்‌ கேட்டு, குழலிசைக்‌ கருவியைப்‌ படைத்தவர்கள்‌ நம்‌.

",முன்னோர்கள்‌, உலர வைத்திருத்த விலங்கின்‌ தோல்மீது மரக்கிளை

உராய்ந்து எழுந்த ஒலியினைக்‌. கேட்டுத்‌ தோல்‌ கருவி தயாரித்து

இசை முழக்கிய பெருமை நமது மூதாதையர்க்கு உண்டு.


திருக்குறள்‌ தோன்றுவதற்கு முன்பே இந்த மண்ணில்‌ குழல்‌:

இசையும்‌, யாழ்‌ இசையும்‌ கொள்ளையின்பம்‌ தந்திருக்கின்றன.

அதனால்தான்‌ மழலைமொழியின்‌ இனிமையை உணர்த்தக்‌ குறள்‌

யாத்த வள்ளுவர்‌, **குழலினிது யாழ்‌ இனிது என்ப? என்ற வரி

யின்‌ வாயிலாக நமது இசை வரலாற்றின்‌ தொன்மையை வெளிப்‌

படுத்துகிறார்‌, சிலப்பதிகாரமோ, இசை நுணுக்கங்களின்‌ பெட்டக

மாகவே திகழ்கிறது. மாதவியும்‌ கோவலனும்‌ கடற்கரை மணற்‌

பரப்பில்‌ அமர்த்து பாடிய கானல்வரிப்‌ பாடல்களைக்‌ காணும்‌

பொழுது நம்‌ உள்ளம்‌ சிலிர்க்கின்றததல்லவா?


₹₹மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப

மணிப்பூ ஆடை அது போர்த்துக்‌


கருங்கயற்‌ கண்‌ விழித்து ஒல்கி

நடந்தாய்‌ வாழி காவேரி??


சொல்லுக்குச்‌ சொல்‌ எத்துணை குழைவு-எத்துணை நெளிவு--இந்தக்‌

.குழைவும்‌ நெளிவும்தானே இசைக்கு உயிராக அமைகின்றன?

"வேட்டுவர்‌, இறுகக்‌ கட்டிய வில்லின்‌ நாணினின்று எழும்‌

இன்னொலிதனைக்‌ கேட்டு, வில்லும்‌ ஒரு இசைக்‌ கருவியாகப்‌

பயன்படும்‌ என்பதை அறிந்து, குமிழமரத்தின்‌ உள்துளையுடைய

கொம்பு ஒன்றை வெட்டி வளைத்து, அதன்‌ இருநுனிகளிலும்‌ மலர்‌

நாரை உரித்துத்‌ திரித்த கயிற்றை நாணாகக்‌ கட்டி, விரலால்‌ அந்த.

நாகத்‌ தெறித்துக்‌ குறிஞ்சிப்‌ பண்பாடி மகிழ்ந்தனர்‌. அதனின்று

வில்யாழ்‌ பிறந்தது. பின்னர்‌, அவ்வில்யாழ்‌ நுண்ணிய உறுப்புகள்‌

அமைந்த பலவகை யாழ்களாய்‌ உருப்பெற்றது.


பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம்‌, சீவக சிந்தாமணி, சுல்லாடம்‌


ஆகிய நூல்களில்‌ இருந்து பண்டைத்‌ . தமிழ்‌ மக்கள்‌, பேரியாழ்‌,

- சசங்கோட்டியாழ்‌ சகோடயாழ்‌ மகரயாழ்‌ என்னும்‌ யாழ்களைம்‌



Page ---- 4


பயன்படுத்தினார்கள்‌ என்பது விளங்கும்‌, இந்த யாழ்களில்‌ பாணர்‌:

கள்‌ விலை உயர்ந்த மணிகளைப்‌ பதித்து, பட்டுத்‌ துணியால்‌.

போர்த்திப்‌ பேழைக்குள்‌ வைத்திருந்தனர்‌ என்று பத்துப்பாட்டு:

கூறுகிறது: யாழ்‌ மீட்டும்‌ பாணர்‌-யாழ்ப்பாணர்‌-அவர்கள்‌ வாழ்‌.ந்‌த-

பகுதி யாழ்ப்பாணம்‌ எனும்‌ பெயர்‌ கொண்டு இன்றைக்கும்‌

இலங்கைத்‌ தீவில்‌ மினிர்கின்ற வரலாற்று உண்மை மறைந்து

விடுமா? ",


சங்க காலத்துக்குப்‌ பின்னர்‌ தேவாரம்‌, திருவாசகம்‌, திருவாய்‌:

மொழி, திருப்புகழ்‌) முதலானவை தீந்தமிழ்‌ இசையைப்‌ பரப்பி”

யிருக்கின்றன. ஆகாயமளாவிடும்‌ கோபுரங்கள்‌ அமைத்த ஆலய

மாயினும்‌, அது '“பாடல்‌ பெற்ற ஸ்தலம்‌?? என்றால்தான்‌ அதற்‌:

கோர்‌ மதிப்பைத்‌ தமிழ்‌ மக்கள்‌ அளித்தனர்‌, அவர்கள்‌ வணங்கிய

அந்த ஆலயத்து இறைவனைவிட, அவன்‌ இசைபடப்‌ போற்றப்‌.

பட்டவனா என்பதிலேதான்‌ அதிக அக்கறை காட்டப்பட்டது.

என்றால்‌ இசையின்‌ பெருமையை இயம்பிட ஒல்லுமோ?


₹₹வானரங்கள்‌ கனிகொடுத்து

மந்தியொடு கொஞ்சும்‌.


மந்திசிந்து கனிகளுக்கு

வான்கவிகள்‌ கெஞ்சும்‌??


குற்றாலத்து அருவியின்‌ குளிர்ச்சியைவிட இந்தக்‌ குறவஞ்‌.

சிப்‌ பாடல்‌ குளிர்ச்சியைக்‌ கொட்டுகிற தல்லவா?


காவடிச்‌ சிந்துதான்‌ பாடினார்‌ அண்ணாமலை ரெட்டியார்‌ ;

அடடா ; அதில்‌ களிநடம்‌ புரியும்‌ இசைத்‌ தமிழை எவ்வாறு

புகழ்வது 1:


கோடையிலே இசாப்பாற்றிக்‌ கொள்ளும்‌ வகை கிடைத்த.

குளிர்‌ தருவாய்‌ -- தரு நிழலாய்‌ -- நிழல்‌ கனிந்த சுகமாய்‌ --

வடலூர்‌ வள்ளலார்‌ வழங்கிய பாடல்களும்‌ இசை வளர்க்கப்‌.

பெரிதும்‌ பயன்பட்டன.


முத்துத்‌ தாண்டவர்‌, மாயூரம்‌ வேதநாயகம்‌ பிள்ளை

கோபால கிருஷ்ண பாரதியார்‌, கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய.

பாரதியார்‌, பாவேந்தர்‌ பாரதிதாசன்‌, தேசிக விநாயகம்பிள்ளை

ஆகியோர்‌ இசையுடன்‌ பாடுதற்கேற்ற கவிதை அமுதங்களைக்‌.

கணக்கின்றி வழங்கியுள்ளனர்‌.


மும்மூர்த்திகளென இசைத்துறையில்‌ போற்றப்படும்‌ தீட்சிதர்‌,

தியாகராஜர்‌, சியாமா சாஸ்திரிகள்‌ ஆகியோர்‌, இசைச்‌ சிகரத்தின்‌

உச்சிவரை ஏறி நின்றவர்கள்‌ என்பதையும்‌, அவர்கள்‌ இசைக்கு.



Page ---- 5



வழங்கியுள்ள ஞானக்‌ கொடையையும்‌ காலா காலத்திற்கும்‌ போற்று

தற்கு நாம்‌ கட்மைப்பட்டிருக்கிறோம்‌. அத்த மும்மணிகளின்‌ இசை

முழக்கம்‌ பேராறாகப்‌ பெருக்கெடுத்த திருவாரூருக்கும்‌ எனக்கும்‌.

எவ்வளவு நெருக்கமான உறவு உண்டு என்பதை நீங்கள்‌ அறிவீர்‌.

கள்‌.


ஊற்றில்‌ நீர்‌ நிரம்பிய பிறகு ஊற்றுக்கண்‌ அடைபட்டு விடக்‌

கூடாது. அப்படி அடைபட்டு நீர்‌ பெருகுவது நின்று விடுமாயின்‌

முதலில்‌ நிரம்பிய;நீரோடு நாம்‌ ஆறுதல்‌ பெற வேண்டியிருக்கும்‌,

பட்டை தீட்டத்‌ தீட்டத்தான்‌ வைரம்‌ ஒளி மிகும்‌. அணியின்‌

அழகைப்பொறுத்துத்தான்‌ தங்கத்தின்‌ பெருமை வெளிப்படுகிறது.


அதுபோலப்‌ பெரியவர்கள்‌, மூதாதையர்கள்‌ தந்த இசைச்‌

செல்வத்தைப்‌ பெருக்கி, வளர்த்து, புதிய உணர்வுகளைப்‌, புதிய

சிந்தனைகளைப்‌, புதிய படைப்புக்களை உருவாக்கிட இன்றிருப்‌

போரும்‌ எதிர்காலத்துக்குரியோரும்‌ முன்வர வேண்டும்‌.


கர்நாடக இசை என்பதைத்‌ தமிழ்‌ மொழிக்கு அப்பாற்பட்ட :


ஒன்றாகச்‌ சிலர்‌ கருதுகிறார்கள்‌. தியாகராஜர்‌, தீட்சிதர்‌, சியாமா

சாஸ்திரிகள்‌ காலத்தில்‌ தமிழல்லாத மொழியில்‌ இசைப்‌ பாடல்கள்‌

,இலக்கணக்கட்டுக்கோப்புடன்‌ இயற்றப்பட்டன என்பதற்காக,

அந்த மும்மணிகளையும்‌ தமிழ்ப்பாடல்களுக்கு மாறான எண்ணங்‌

கொண்டவர்கள்‌ எனக்‌ கருதிடத்‌ ேதேவையில்லை. தமிழ்மொழியின்‌

ஆக்கம்‌ குறைந்திருந்த இடைக்காலத்தின்‌ குற்றமே தவிர, அவர்‌

கள்‌ யாரும்‌ அதற்குப்‌ பொறுப்பல்லர்‌. தமிழ்மொழி ஆக்கம்பெற்று

வளரும்‌ இக்காலத்தில்‌, கர்‌ நாடக இசைப்‌ புலவர்கள்‌ வகுத்துள்ள.

வழியினின்றும்‌ வழுவாமல்‌ புதுமைகளைப்‌ படைத்திடும்‌ முனைப்பு

“மேலோங்கிட வேண்டும்‌. புதுமை என்ற பெயரால்‌ நமது அடித்‌

தளத்தை இடித்து தொறுக்கிவிடக்‌ கூடாது. சென்ற ஆண்டு

இங்கு உரையாற்றிய திரு. சி. சுப்பிரமணியம்‌ அவர்கள்கூட, நமது

இசை அரங்குகளைப்பற்றிப்‌ பாரதியார்‌ எழுதியுள்ள வாசகத்தைக்‌

சுட்டிக்‌ காட்டியுள்ளார்‌. பாரதியின்‌ மனவேதனையை நானும்‌

தினைவுபடுத்துவது அவசிய மென எண்ணுகிறேன்‌ ;--


*₹நானும்‌ பிறந்தது முதலாக இன்று வரை பார்த்துக்கொண்டு

வருகிறேன்‌. கச்சேரி தொடங்குகிறது. வித்வான்‌ *வாதாபி

கணபதிம்‌? என்று ஆரம்பஞ்‌ செய்கிறார்‌. “ராம நீ ஸமானமெவரு?.

“மரியாத காதுரா? வரமு லொசகி? ஐயையோ! ஒரே கதை! தமிழ்‌

நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்‌ காதாக இருப்பதால்‌ திரும்பத்‌ _

திரும்ப ஏழெட்டுப்‌ பாட்டுகளை வருஷக்‌ கணக்காகக்‌ கேட்டுக்‌.

கொண்டிருக்கிறார்கள்‌. தோல்‌ காதுள்ள தேசங்களில்‌ இத்தத்‌.

அன்பத்தைப்‌ பொறுத்துக்‌ கொண்டிருக்கமாட்டார்கள்‌ ??.


Page ---- 6



சீ: புதிய படைப்புக்கள்‌. தேவையெக் பதில்‌ பாரதியார்‌ எவ்வளவு

ஆர்வங்‌. கொண்டிருந்தார்‌ (என்பதைத்தான்‌ அவரது இந்தக்‌.

கடுமையான விமர்சனம்‌, சுட்டிக்காட்டுகிறது. , புதுமைகள்‌ பூத்திட

'வேண்டுமென்பதற்காகத்‌ தற்காலத்‌ தலை!"களைப்‌ போலக்‌ கலையும்‌,

*உடை”களைப்‌ போல இசையும்‌ மாறிட வேண்டுமென்று நான்‌ கூற-

மாட்டேன்‌. க


அத்நாளில்‌ திரைப்படங்களிலேகூடக்‌ கர்நாட: இசைப்பாடல்‌

கள்தான்‌ இடம்‌ பெற்றிருந்தன. படங்களிலும்‌, நாடகங்களிலும்‌-

நடித்தவர்கள்‌ நமது மரபுவழி இசைக்கே மதிப்பளித்துவந்தனர்‌.

ஆனால்‌ இன்று திரைப்படம்‌, நாடகம்‌, இசை நிகழ்ச்சிபோன்ற.

ஆயிரக்கணக்கான மக்களைக்‌ கவர்கின்ற இடங்களில்‌ மரீபுவழி

இசை மங்கிபோய்‌, பேய்‌ இசை-தாய்‌ இசை-பேோல்‌ தலையில்‌

தூக்கிவைக்கப்பெற்றுக்‌ கொண்டாடப்படுகின்ற கொடுமையைத்‌

தான்‌ காணமுடிகிறது. மணமல்லியும்‌, முல்லையும்‌, மருக்கொழுந்தும்‌,

ரோஜாவும்‌ சேர்த்துக்கட்டியமாலை தேவையில்லையென ஒதுக்கி

விட்டுக்‌ கனகாம்பரப்பூவைக்‌ காகிதத்திலே செய்து மாலையாக்கி

அணிந்து கொள்கிற காலமன்றோ இன்று நடக்கிறது.


அந்தக்‌ காகிதக்‌ கனகாம்பரம்‌, இன்னும்‌ சில நாட்களில்‌:

மணமக்கள்‌ மாற்றிக்கொள்கிற மாலையாகவும்‌ வத்துவிடக்கூடுமோ

ள்ன்றுதான்‌ நான்‌ அஞ்சுகிறேன்‌!


*கிளாசிகல்‌ மியூசிக்‌? என்கிற மரபுவழி இசைக்கு நம்‌ நாட்டில்‌.

தான்‌ சோதனை ஏற்பட்டுள்ளது என்று சொல்லிட இயலாது. மேல்‌-

தாடுகளும்‌ இந்த சோதனையைச்‌ சந்தித்துவருகின்றன. ஜாஸ்‌.

மியூசிக்‌, பாப்மியூசிக்‌ முதலான புதியமுறைகளின்‌ செல்வாக்குப்‌.

பெருகிப்‌ பண்டைய இசைமுறையின்‌ வலிவு, அங்கேயும்‌ குன்றி

வருகிறது. ஏற்கெனவே வடக்கேயிருந்து வந்த மெல்லிசை,

தமது நல்லிசையைத்‌ தரக்குவதுபோதாதென்று வெளிநாட்டி

லிருந்தும்‌ அத்தகைய தாக்குதல்‌ நமது தொன்மைமிகு இசை

அரண்‌ மீது தடைபெறத்‌ தொடங்கியுள்ளது. நமது முன்னோர்‌

க்‌ ல்‌ தகர்ந்துவிடக்‌...

அல்ல எனினும்‌,

தாமும்‌ மரபு கெடாத முறையில்‌ காலத்திற்கேற்ற புதுமைகளை உரு

வாக்கித்‌ தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து நிலைபெற்று நிற்க முனைந்‌.

திடவேண்டும்‌. அதற்குள்ள வழிகளில்‌ தலையாய ஒன்றுதான்‌.

நமது மரபு வழி இசையை, புரியும்‌ மொழியிலே வழங்கிடவேண்‌

டும்‌ என்பதாகும்‌. கர்‌. நாடக இசையின்‌ ஆழமான-அகன்ற தன்மை

யில்‌ ஈடுபட்டு ரசிகராவது ஒரு சிரமம்‌, அத்துடன்‌ என்ன பொருள்‌

பற்றிப்‌ பாடுகிறார்கள்‌ என்பதைப்புரியாமல்‌ தவிப்பது ' மற்றொரு.

சிரமம்‌! இந்த இரண்டாவது சிரமத்தைக்‌ குறைத்துவிட்டால்‌ மு.தல்‌.

சிரமத்தைப்‌ பொருட்படுத்தாமலே கர்நாடக இசை காலத்தால்‌.

“வல்ல முடியாத பேரரணாக உயர்த்து நிற்கும்‌,



Page ---- 7



**கல்விக்கூடங்களில்‌ தொடக்க வகுப்பிலிருந்து கல்லூரிக்‌ கல்வி

முடியும்‌ வரையில்‌ இசைப்பயிற்சியை எல்லா மாணவர்களுக்கும்‌

குட்டாயப்பாடமாகவே ஆக்கலாம்‌?? எனும்‌ ஒரு சிறந்த கருத்தை

வெளியிட்டுள்ள இசைமேதை திருமதி எம்‌. எஸ்‌. சுப்புலட்சுமி அவர்‌

கள்‌ “இதனால்‌ எல்லோருமே மேடை ஏறிப்‌ பாடவேண்டுமென்ப

தில்லை! இப்போது கணிதம்‌ படிப்பவர்‌ எல்லோருமே ராமாநுஜமாக

வும்‌, விஞ்ஞானம்‌ படிக்கிற எல்லோருமே சி.வி, ராமனாகவும்‌ ஆகி

விடுகிறார்களா என்ன? அதேபோல ஒவ்வொரு துறைப்‌ பயிற்சி

யால்‌ அவரவருக்கும்‌ உள்ளூர ஒரு “ஆன்மீக” மலர்ச்சியை அளிக்‌

கும்‌?2 என்று குறிப்பிடுதிறார்கள்‌. அம்மையார்‌ அவர்களின்‌ இந்தச்‌

சீரிய யோசனை பொதுவாக வரவேற்கத்‌ தக்கதாகும்‌. அவர்கள்‌

குறிப்பிடுகிற “ஆன்மீக மலர்ச்சி'யை, நான்‌ அமைதி உணச்ச்சி?

என்று எடுத்துக்கொள்கிறேன்‌.


ஆம்‌ ; இசை--துன்பம்‌ வந்தபோது தோழனாக நின்று கை

கொடுக்கிறது. வேலைப்பளுவால்‌ களைத்துப்போய்‌ அமைதி பெற

முடியாமல்‌ தவிக்கும்‌ மூளைக்கு, நல்லிசை, உற்சாகமான ஓய்வைத்‌

தந்து அமைதி உலகிற்கு அழைத்துச்‌ செல்கிறது. அத்தகைய

அமைதி உணர்ச்சியைத்‌ தரும்‌ இசைக்கலையை இளமை முதலே

பயிற்றுவிப்பது--அதுவும்‌ கல்விக்‌ கூடங்களில்‌ ஒரு பாடமாக்குவது

சிறந்த செயலேயாகும்‌. அத்துடன்‌ ஒரு கருத்தையும்‌ நான்‌

இகணைத்திட விரும்புகிறேன்‌. இது என்‌ சொந்தக்கருத்தல்ல; மூத்‌

தோர்கள்‌ கருத்துத்தான்‌. கல்விக்கூடங்களில்‌ நடைபெறும்‌ இசைப்‌,

பயிற்சியால்‌ அனைவருமே புகழ்‌ பெற்ற சங்கீத மேதைகளாகிவிட

முடியாது. இசைமட்டுமல்ல; எல்லாத்‌. துறைகளிலுமே மேதைகள்‌

அவ்வப்போது ஓரிருவர்தான்‌ தோன்றுவர்‌. அந்தத்‌ தோற்றத்திற்‌

கும்‌, கல்விக்‌ கூடங்களே மட்டுமன்றிப்‌ பழைய காலக்‌ குரு குலவாச

மும்‌ மிகவும்‌ அவசியமான ஒன்றாகும்‌. நமது தமிழகத்தின்‌ புகழ்‌.

மணி விளக்குகளாகத்‌ திகழ்ந்த இசை வல்லுநர்கள்‌. இப்போதும்‌

'திகழ்பவர்கள்‌, குருகுல வாசத்தினாலன்றோ முன்னேறினார்கள்‌!

இசைத்துறை மட்டுமல்ல; எந்தத்துறையிலுமே புகழ்பெற்ற

குருவுக்கு அருகாமையிலேயே நெருங்கிப்‌ பழகி அவர்களுடைய

ஆற்றலையும்‌, அனுபவத்தையும்‌ புரிந்துகொள்கிற மாணவர்‌

களால்தான்‌ அந்தக்‌ குறிப்பிட்ட துறையிலே கீர்த்திபெற

முடிந்திருக்கிறது என்பதற்குக்‌ கண்கூடாக எத்தனையோ எடுத்துக்‌

காட்டுக்கள்‌ இருக்கின்றன. எனவே குருவுடன்‌ அணுகியிருந்து.

பெறுகிற ருருகுலப்‌ பயிற்சி, பொன்மலர்‌ நாற்ற முடைத்து?*

என்னும்‌ வகையில்‌ சிறப்பினை நல்கிடும்‌.


பாட்டிசைமட்டுமன்றி, பரதக்கலை, நாயன இசை, யாழிசை,

மற்றும்‌ துளைக்கருவி, தோல்கருவி, நரம்புக்‌ கருவிகளின்‌ இசை

யனைத்தும்‌ நமது முன்னோர்களால்‌ கட்டிக்காக்கப்பெற்று திகழ்‌

காலத்து மேதைகளால்‌ வளர்க்கப்பெற்று, வருங்காலத்துச்‌

செழிப்புக்காக நமது ஒத்துழைப்பை நாடி.நிற்கின்‌ றன.


Page ---- 8



தமிழக அரசைப்‌ பொறுத்தவரையில்‌, இந்த உயரிய கலைத்‌

துறையை வளர்க்க இயன்றதெல்லசம்‌ செய்து வருகிறது.

இன்னும்‌ அரிய யோசனைகளை வழங்குங்கள்‌; செய்யக்‌ காத்‌

திருக்கிறது.


பரதநாட்டிய அரங்கேறி ஐம்பதாண்டு முடிந்த பொன்விழா.

ஆண்டில்‌ ஒளிவிடும்‌ பரதக்கலை மேதையான திருமதி பாலசரசுவதி

அவர்களின்‌ திறன்‌, என்றென்றும்‌ (எதிர்காலக்‌ கலை உலகிற்கு ஒரு

நல்லாசானாக இருக்க வேண்டுமென்ற கருத்துடன்‌, அவரது பரதக்‌

கலையை சத்யஜித்ரேயைக்‌ கொண்டு படமாக்குகிற பொறுப்பைத்‌

தமிழக அரசு ஏற்று அதற்கென சுமார்‌ 1 லட்சரூபாயை ஒதுக்கி

யுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்கொள்கி்‌றன்‌..


இயல்‌, இசை, நாடக மன்றத்தின்‌ சார்பிலும்‌ தமிழக அரசு

கலைத்‌ தொண்டினைத்‌ தொடர்ந்து ஆற்றிவருகின்‌ றது.


இத்த நேரத்தில்‌ 1967-ஆம்‌ ஆண்டு முதலமைச்சர்‌ பொறுப்‌

(பை ஏற்ற அண்ணா அவர்கள்‌, தலைமைச்‌ செயலக அலுவலர்கள்‌

கூட்டத்தில்‌ கூறிய ஒரு சுவையான கருத்தைக்‌ குறிப்பிட விரும்பு

கிறேன்‌:


₹“இதுவரை நாங்கள்‌ கானம்பாடும்‌ வானம்பாடிகளாக

இருத்தோம்‌. அந்த கானம்‌ இனிமையாக இருந்ததால்‌ மக்கள்‌

மனத்தில்‌ பல ஆசைகளைக்‌ கிளறியது. அந்த ஆசைகள்‌ அடைய

முடியாத ஆசைகள்‌ அல்ல, ஆகவே அந்த இசைக்கேற்ற ராகம்‌,

தாளம்‌ ஆகியவற்றை அமைக்கும்‌ பொறுப்பு, அலுவலர்களான.

உங்களுக்கு இருக்கிறது. பொதுவாக “இல்லை? என்ற தாளத்தையும்‌

“மெதுவாகப்போ!?? என்ற ராகத்தையுமே பாடுவது அரசாங்க.

அலுவலகப்‌ பழக்கமாக இருக்குமென்பைத நானறிவேன்‌. தாளம்‌

புதிதாக இருக்கவேண்டுமென்று கூறுகிறேனேயல்லாமல்‌ தப்புத்‌:

தொளம்‌ போடவேண்டும்‌ என்று கூறவில்லை. மாறவேண்டிய


தாளம்‌ மக்களின்‌ இதயத்‌ துடிப்புக்கு ஏற்றதாக அமைய

'வேண்டும்‌??.


அறிஞர்‌ அண்ணா வழங்கிய இந்தக்‌ கருத்துரை, புதுமையை

எந்த அடிப்படையில்‌ நாடவேண்டும்‌ என்பதற்கு ஏற்ற அறிவுரை

போகும்‌.


இசைத்‌ தீட்சண்ய மிக்க தீட்சிதர்‌ அவர்களின்‌ இருநூறாவது

ஆண்டுவிழாவில்‌ உரையாற்றுவதும்‌, அவர்‌ புகழினைப்‌ பேசுவதும்‌,

இந்த இசை மன்றத்துப்‌ பெருமக்களிடையே இந்த நாளில்‌ இருப்‌

பதும்‌ எனக்குக்கிடைத்த பெருவாய்ப்பெனக்கூறி, அனைவர்க்கும்‌

"நன்றி தெரிவித்து என்‌ தொடக்க உரையை நிறைவு செய்கிறேன்‌