03-

மன்னும் இமயமலை

CHENCHURUTTI RAAGAM

MUSIC BY S.V,VENKATARAMAN

RAGAM : CHENCHRUTTI

(with Orchestration)

this was a special record for the

FIRST REPUBLIC DAY OF INDIA

(78 rpm record)..1950

மன்னும இமயமலை

எங்கள் மலையே !

மாநிலமீததுபோல்

பிரிதில்லையே !

.இன்நறு நீர் கங்கை

ஆறு எங்கள் ஆறே !

இங்கிதன் மாணபிற்கு

எதிர் எது வேறே ?

பன்னரும் உபநிட நூல்

எங்கள் நூலே !

பார் மிசை ஏதொரு

நூலிது போலே !

பொன்னொளிர் பாரத

நாடெங்கள் நாடே !

போற்றுவம் இதை

எமக்கில்லை ஈடே !

-------

(music interlude here)

மாரத வீரர்

மலிந்த நன் நாடு

மாமுனிவோர் பலர்

வாழ்ந்த பொன் நாடு

நாரத கான

நலம் திகழ் நாடு

நல்லன யாவையும்

நாடுறு நாடு !

பூரண ஞானம்

பொலிந்த நன் நாடு

புத்தர் பிரான் அருள்

பொங்கிய நாடு

பாரத நாடு

பழம்பெரும் நாடே!

பாடுவம் இதை

எமக்கில்லை ஈடே !

************************************************