https://youtu.be/g8zUUHJCZaQ
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
-
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா வா
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா பலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேகும்
உதய ஞாயிறொப்பவே வா வா வா
களை இழந்த நாட்டிலே முன்போலே
களை சிறக்க வந்தனை வா வா வா
விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா