07-

பிள்ளைப் பிராயத்திலே-

BARATHY AND NCVASANTHAKOOKILAM CLASSIC

பிள்ளைப் பிராயத்திலே-அவள்

பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு

பள்ளிப் படிப்பினிலே-மதி

பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட

வெள்ளை மலரணைமேல்-அவள்

வீணையும் கையும் விரிந்த முகமலர்

வெள்ளை மலரணைமேல்-அவள்

வீணையும் கையும் விரிந்த முகமலர்


விள்ளும் பொருளமுதம்-கண்டேன்

வெள்ளை மனம் பறிகொடுத் தேன், அம்மா!..

( திலங் )

-----------------------------------------------

ஆடி வருகையிலே அவள்

அங்கொரு வீதி முனையில் நிற்பாள் !

கையில் ஏடு தரித்திருப்பாள் ,

அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் !

நாடி அருகனைந்தால் பல்

ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் !

கூடி மகிழவோம் என்றால் விழிக்கோணத்திலே

நகை காட்டி செலவாள் !

( பீம்ப்ளாஸ் )

---------------------------------------------------

ஆற்றங்கரைதனிலே

தனியானதோர் மண்டப மீதினிலே

காற்றை நுகர்ந்திருந்தேன் ,

கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் !

ஏற்று மனம் மகிழ்ந்தே

" அடி! என்னோடிணங்கி மண்ம் புரிவாய் என்று

கேட்டிட்ட போதினிலே

இளம் புன்னகை பூத்து மறைந்து விட்டாள் !

(கமாஜ் )

---------------------------------------------------


THIS IS THE CORRECT VERSION.

HAVING ALL THE THREE STANZAS