உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) சமீபத்தில் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின்படி -
2017ல் பிறக்கும் ஒரு குழந்தை சராசரியாக குறைந்தது 2117 ஆம் ஆண்டு வரை வாழும் வகையில் ஆயுள் எதிர்பார்ப்பு(Life Expectancy) அதிகரித்து வருகின்றது ;
வரும் காலங்களில் முதலீட்டுறுதி 5 % - 3 % என்ற குறைந்திடும்;
முறைப்படுத்தப்படாத / தனியார் துறை பணியாளர்கள் பத்தில் ஒன்பது பேருக்கு ஓய்வூதிய சேமிப்பு கணக்கு இல்லை.
ஜனவரி 1 2004 க்கு பிறகு அரசுப் பணியில் சேர்பவர்களுக்கு, பழைய பென்சன் திட்டத்திற்குப் பதிலாக பங்களிப்பு (CPF) ஓய்வூதிய முறையிலேயே பென்சன் வழங்கப்படும். இந்த புதிய பென்சன் திட்டத்தின்படி 10% (SALARY + DA) சதவிகிதம் கட்டாய பங்களிப்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். ஒருவரின் 60வது வயதில் அவரின் 'PRAN' அக்கவுண்டில் உள்ள நிதியை (Pension Wealth) அங்கீகாரம் பெற்ற (தனியார் மற்றும் எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனங்களின் அன்று விற்பனையிலுள்ள பென்சன் திட்டத்திற்கு மாற்றி அதன்படி உள்ள ஓய்வூதியம் கிடைக்கும். இதன் உத்திரவாதமற்ற ஓய்வூதிய தன்மையே, இத்திட்டத்தை எதிர்ப்பதற்கான முக்கியமான காரணம். இதற்கு தீர்வுதான் என்ன?
எல்.ஐ.சி. வழங்கும் நூறாண்டு ஜீவன் உமங் திட்டம் இதோ..