ராமானுஜ நூற்றந்தாதி - 16 April 2017

Post date: Apr 16, 2017 4:56:26 AM

"ஆயிரம் ஆண்டின்-முன்னே பாரத நாட்டின்-கண்ணே

ஞாயிறாய் அவதரித்த வைணவம் கண்ட-பொன்னே

தாயினும் பரிந்து-யாரும் உரைத்திட நாமம்-என்ன

ஆயினும் சொல்வேன்-என்றே உரைத்த-நின் கருணை என்னே

இறைவனை அருவின்-அருவாய் அறிவதே அறிவின்-அறிவாம்

என்பதே முடிவின்-முடிவாய்க் கொண்ட-பேர் நின்றார்-பிடியாய்

அவருளே தனியின்-தனியாய் நின்ற-நீ சொன்னாய்-குருவாய்

எவருமே உணரும்-விதமாய் இறைவனை அருவின்-உருவாய் "

-------------------------------

ஸ்ரீமத். ராமாநுஜாசார்யாரின் சஹஸ்ராப்தியை ஒட்டி ,ராமானுஜ நூற்றந்தாதி பாராயணம் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை தொடர் பாராயணம் நமது கோவிலில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

Click here for the PHOTOS of the occaasion

(Thanks S.Kannan for the Photos)