Hanumadh Jayanthi 9-Jan-16
அனுமனின் தாவல் அழகு, அனுமனின் துள்ளல் அழகு, அனுமனின் பவ்யம் அழகு, அனுமனின் அன்பு அழகு,அனுமனே ராமன் என்ற அழகுக்கு ஓர் அழகு.
அந்த அழகுக்கு அழகு சேர்க்க யாரால் இயலும்..அந்த பாக்யத்தை அனுமனுக்கு அழகாக அலங்காரம் செய்த திரு V.L. நரசிம்மன் அக் கைங்கர்யத்தின் மூலம் பெற்றுள்ளார் ....
அதே போல் அனுமத் ஜெயந்தி புண்ணிய தினத்தன்று கோவிலில் "ராமானுபவ அனுமன்" ரங்கோலியின் மூலமாக இறைவனுக்குத் தங்கள் பக்தியால் அழகு சேர்த்துள்ளனர் திருமதிகள்.வித்யா ராமஸ்வாமி,ஜெயஸ்ரீ கண்ணன் மற்றும் நிர்மலா ரவி.
இவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் இறையருளும் உரித்தாகுக ..!
நெஞ்சை விட்டு அகலாத இவ்வழகுகளை இதோ மீண்டும் கண்டு களிப்பீர்..!